8/23/2011 12:37:18 PM
இந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை ரவி கே.சந்திரனுக்கு உண்டு. இந்தியாவின் தலைச்சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் என பல முன்னணி இயக்குனர் படங்களில் ஒளிப்பதிவராக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி அமிதாப், அமீர்கான், ஷாரூக்கான் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார். தற்போது 7ஆம் அறிவு படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவு. பிஸியான ஷெட்யூலுக்கு நடுவில் ஸ்கிரிப்ட் ஒன்றை தயார் செய்திருக்கிறாராம். தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கதை சொல்லி, கால்ஷீட்டும் பெற்றிருக்கிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Post a Comment