8/22/2011 11:31:12 AM
நிலா படைப்புலகம் சார்பில் டாக்டர் பி.ஆனந்தன், கோ.ஆனந்த சிவா, வி.பன்னீர்செல்வம் தயாரிக்கும் படம், 'பரிதி'. ரிஷி, கரீனா ஷா, சிங்கமுத்து, ஆதேஷ் நடிக்கின்றனர். படத்தை இயக்கும் கோ.ஆனந்த சிவா கூறியதாவது: ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், 'இத்தனை நாட்கள் அத்தனை அழகை எங்கே பதுக்கி வைத்தாய்?' என்ற பாடல் காட்சியை படமாக்கினேன். இது இறையன்பு எழுதிய பாடல். இந்த காட்சியில் ரிஷி, கரீனா ஷா பங்கேற்றனர். இந்தப் பாடலில், முத்தக்காட்சியில் நடிக்க கரீனாவிடம் சொன்னேன். மறுத்தார். பிரச்னையில் ஈடுபட வேண்டாம் என்று, காட்சியை மாற்றிப் படமாக்கினேன். இது சைக்கோ ஹீரோ கதை. தான் காதலித்தவன் நல்லவன் என்று நம்புகிறாள், ஹீரோயின். அவனோ பயங்கர வில்லன். இறுதியில் அவனைப்பற்றி ஹீரோயினுக்கு தெரிகிறது. அதிர்ச்சி அடையும் அவள், என்ன முடிவு செய்கிறாள் என்பது கதை. சைக்கோத்தனம் குறித்து ஆலோசனை பெறுவதற்காக, மனநல மருத்துவர் ஆனந்தனை சந்தித்தேன். நான் சொன்ன கதையை ரசித்த அவர், தானே இப்படத்தை தயாரிப்பதாக சொன்னார். இப்போது ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.
Post a Comment