8/23/2011 12:04:27 PM
விஜய்யை வைத்து யோஹன். அத்தியாயம் ஒன்று படத்தை அடுத்த வருடம் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதற்கு முன் ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் முடிந்த பிறகு ஜீவாவின் படம் தொடங்கள்ளதாக தெரிகிறது. படத்துக்கு நித்யா என்று பெயர் வைத்துள்ளார். ஹீரோயின் சமந்தா. படத்துக்கு இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இன்று வரை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதனையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புப்ழு இடையே மீண்டும் இந்தக் கூட்டணி இணைகிறது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் பணிபுரிந்தவர்களே இந்தப் படத்திலும் பணியாற்ற உள்ளனர். கேமரா மனோஜ் பரமஹம்சா, பாடல்கள் தாமரை, எடிட்டிங் ஆண்டனி. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Post a Comment