மங்காத்தாவுக்கு 4 இசை அமைப்பாளர்கள் ரீரெக்கார்டிங்
8/22/2011 11:24:22 AM
அஜீத்தின், 'மங்காத்தா' படத்துக்கு 4 இசை அமைப்பாளர்கள் ரீரெக்கார்டிங் செய்து வருகின்றனர். இதுபற்றி இயக்குனர் வெங்கட் பிரபு கூறும்போது, 'முதல்முறையாக, யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, பவதாரிணி, பிரேம்ஜி ஆகிய 4 பேர் பின்னணி இசை அமைத்து வருகின்றனர். கடந்த 18 நாட்களாக இந்த பணி நடக்கிறது. இது படத்துக்கு பெரிய பலமாக இருக்கும். இதை தொடர்ந்து, 'நேரடி ஒளிபரப்பு' என்ற கதையை, 3 டி படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இது மெகா பட்ஜெட் படம்' என்றார்.
Post a Comment