கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கனடா சர்வதேச திரைப்பட விழாவில் ஆடுகளம்!

8/23/2011 10:11:35 AM

சன் பிக்சர்ஸின், 'ஆடுகளம்', கனடா நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ஏராளமான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. தனுஷ், டாப்ஸி, கிஷோர், எழுத்தாளர் ஜெயபாலன் உட்பட பலர் நடித்துள்ள படம், 'ஆடுகளம்'. சன் பிக்சர்ஸின் இந்த படத்தை வெற்றி மாறன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். தமிழில் மெகா ஹிட்டான இந்தப் படம், 6 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம், கனடா நாட்டில் நடக்கும் சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. 18ம் தேதி தொடங்கிய இப்பட விழாவில் கடந்த நான்கு நாட்களாக, 'ஆடுகளம்' திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த வெளிநாட்டு விமர்சகர்கள், இயக்குனர்கள், சினிமா ரசிகர்கள் வெகுவாக ரசித்து பாராட்டியுள்ளனர். இதுபற்றி கனடாவில் இருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது:

உலகில் நடக்கும் பல்வேறு பட விழாக்களில் முக்கியமானது இந்த கனடா சர்வதேச பட விழா. 35வது ஆண்டாக நடக்கும் இவ்விழாவுக்கு ஐயாயிரம் படங்கள் அனுப்பப்பட்டன. அதில் அந்தந்த நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் 300 படங்கள் திரையிட தேர்வாயின. அதில் ஒன்று, 'ஆடுகளம்'. இந்தப் படத்தை வெளிநாட்டு சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், ரசிகர்கள் பார்த்துவிட்டு வெகுவாகப் பாராட்டினர்கள். இவ்வாறு வெற்றிமாறன் கூறினார். வெற்றிமாறனுடன் தயாரிப்பாளர் கதிரேசன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரும் கனடா சென்றுள்ளனர்.

 

Post a Comment