கள்ளத்துப்பாக்கிக்கு 35 கட்

|

சென்னை : தமிழ்ச்செல்வன், குட்டி ஆனந்த், ஷாவந்திகா நடித்துள்ள படம், 'கள்ளத்துப்பாக்கி'.  லோகியாஸ் இயக்கி உள்ளார். இதில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சென்சார் சர்டிபிகேட் தர மறுத்துவிட்டது. இதையடுத்து மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை அனுப்பினர். படத்தை பார்த்த மறு ஆய்வு குழுவினர், 35 இடங்களில் கட் கொடுத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது, 'கூலிப்படை கும்பல் சிறுவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை படமாக உருவாக்கி உள்ளோம். இதில் கூலிப்படைகளின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து காட்சிகளை அமைத்துள்ளோம். இதில் வன்முறை இருப்பதாக சொல்லி தணிக்கை சான்றிதழ் தர மறுத்தனர். மறு ஆய்வுக்குழு பார்த்து விட்டு 35 இடத்தில் வெட்டச் சொன்னார்கள். கதை பாதிக்காதவாறு அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கி படத்தை முடித்து விட்டோம். தீபாவளிக்கு வெளியாகிறது' என்றார்.
 

Post a Comment