பருவ நிலை சரியில்லாத காரணத்தால்தான் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்துவிட்டதாக கமல் தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது (நக்கலா.. நிஜ காரணமா?)
மதுரை, கோவை, சென்னையில் நவம்பர் 7-ம் தேதி ஒரே நாளில் இசை குறுந்தகட்டை வெளியிடத் திட்டமிட்டிருந்தார் கமல்ஹாஸன். இதற்காக தனி ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்திருந்தாராம்.
ஆனால் திடீரென நேற்று விழாவை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். காரணத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், விழா தள்ளிப் போனது ஏன் என்று கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விழா நடக்கும் நாளன்று இடி மின்னல் மழை என வானிலை மோசமாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து தகவல் வெளியாகியிருப்பதால் விழாவை வேறு தேதிக்கு வைத்ததாக கமல் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் உண்மையான காரணம்?
படத்தின் ஆடியோ உரிமை இன்னும் விலை போகவில்லையாம். படத்தின் பல ஏரியா உரிமையை கமல் சொல்லும் விலைக்கு வாங்க யாரும் தயாராக இல்லையாம்.
இருந்தாலும், ரமணனை நம்பி ஒரு விழாவை தள்ளிப் போடுகிறார்கள் என்றால்... அடடா!
Post a Comment