மிருகக்காட்சி சாலை நடத்தும் ஒருவர், குடும்பத்துடனும், மிருகங்களுடனும் கப்பலில் பயணம் செய்கிறார். திடீரென கப்பல் கவிழ்கிறது. சிறு படகில் அவரது மகனும், புலியும் மட்டும் தப்பிக்கிறார்கள். நடுக்கடலில் புலிக்கும், இளைஞனுக்கும் இடையே நடக்கும் வாழ்க்கை போராட்டம்தான் கதை. ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழியில் 23,ம் தேதி வெளியாகும் இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடந்தது.
இயக்குனர் ஆங் லீ நிருபர்களிடம் கூறியதாவது: கனடா எழுத்தாளர் யேன் மார்ட்டல் எழுதிய நாவல்தான், 'லைஃப் ஆஃப் பை'. கடந்த மூன்றரை ஆண்டுகளாக இதன் படப்பிடிப்பை நடத்தினேன். மூவாயிரம் இளைஞர்களை ஆடியோ வீடியோ டெஸ்ட் எடுத்து அதிலிருந்து சுராஜ் ஷர்மாவை தேர்வு செய்தேன். புலியிடம் தனியாக மாட்டிக் கொண்ட ஒருவனின் செயல்கள் எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரதிபலித்துள்ளார். இதன் கதை, நாவலில் உள்ளதைப் போல பாண்டிச்சேரியில் தொடங்குகிறது. இதற்காக தமிழ்நாட்டுக்கும், பாண்டிச்சேரிக்கும் வந்து சென்றேன்.
தமிழ் கலாச்சாரம் உலகின் உன்னதமான கலாசாரங்களில் ஒன்று என்பதை உணர்ந்தேன். தமிழர்களின் விருந்தோம்பலையும், விருந்தினர்களை மதிக்கும் குணத்தையும் கண்டு வியந்தேன். அவர்களின் கலை மற்றும் மெல்லிய உணர்வுகளை இந்த கதையில் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சுராஜ் ஷர்மா, இர்பான் கான், தபு உடன் இருந்தனர்.
Post a Comment