விஜய் வீட்டை முற்றுகையிட முயன்ற 60 பேர் கைது

|

சென்னை : விஜய் நடித்து தீபாவளிக்கு திரையிடப்பட்டுள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக, தேச துரோகிகளாக சித்தரித்திருப்பதாக கூறி, அவரை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி மாநில பொது செயலாளர் தடா அப்துல்ரஹீம் தலைமையில் நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று திரண்டனர்.

அங்கிருந்து விஜய் வீட்டுக்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர். தகவலறிந்து அடையாறு துணை கமிஷனர் சுதாகர், நீலாங்கரை உதவி கமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீஸ் படையினர் வந்து, 60க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  
இதுகுறித்து அப்துல் ரஹீம் கூறுகையில், ரஜினி சூப்பர் ஸ்டார். அவர் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தி படங்களில் நடித்ததில்லை. ஆனால் விஜய் ஒவ்வொரு படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி நடித்து பெரிய ஆளாகுவதற்கு நினைக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.
 

Post a Comment