இயக்குனர் ஜோதி கிருஷ்ணா திருமணம்

|

சென்னை : 'கேடி', 'எனக்கு 20 உனக்கு 18' படங்களை இயக்கியவர் ஜோதி கிருஷ்ணா. சமீபத்தில் வெளியான 'ஊலலலா' படத்தை ஹீரோவாக நடித்து இயக்கினார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மூத்த மகனான இவருக்கும் சிவகுருநாதன் ,துளசி தம்பதியரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணம் வரும் 23ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர். இதையடுத்து 26,ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என்று தெரிகிறது.

 

Post a Comment