
சென்னை : தெலுங்கில் ரிலீசான 'தக்கரகா தூரங்கா', தமிழில் 'பூவோடும் புயலோடும்' பெயரில் டப் ஆகிறது. நாமக்கல் பாலாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.சுரேஷ்காந்தி, டி.எஸ்.கோபி தயாரிக்கின்றனர். சுமந்த், வேதிகா, சிந்து துலானி நடிக்கின்றனர். வசனம், சத்யன். இசை, ரகு குன்ச்சே. படம் பற்றி சத்யன் கூறும்போது, ''விளம்பர கம்பெனி வடிவமைப்பாளரான ஹீரோ, கம்ப்யூட்டரில் அழகிய பெண்ணை வரைந்து, காமாட்சி என்று பெயரிடுகிறார். திடீரென்று அவளைப் போல் தோற்றம் கொண்டவள் வருகிறார். அவரை ஹீரோ காதலிக்கிறார். சில பிரச்னைகள் காரணமாக அவர்கள் திருமணம் தடைபடுகிறது. ஏன், எதற்கு, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை'' என்றார்.
Post a Comment