புத்தகம் சொல்லும் ரகசியம்: விஜய் ஆதிராஜ்

|

சென்னை : ராம் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர் வி.ராமதாஸ் தயாரிக்கும் படம், 'புத்தகம்'. ஆர்யா தம்பி சத்யா ஹீரோ. ரகுல் பிரீத்தி சிங், ரட்சணா மவுரியா, ஜெகபதி பாபு, சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் ஆதிராஜ் இயக்குகிறார். இசை, ஜேம்ஸ் வசந்தன். பாடல்கள்: நா.முத்துக்குமார், பா.விஜய், மதன் கார்க்கி. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

பிறகு படம் பற்றி விஜய் ஆதிராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: பல்வேறு இடங்களில் நான் பார்த்த, கேட்ட சம்பவங்களை வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற  கருத்து இடம்பெற்றுள்ளது. ஒரு பெண்ணை பார்ப்பதற்கு முன்னும் பின்னும் சத்யா, விக்னேஷ், சஞ்சய் பாரதி ஆகிய மூன்று நண்பர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. சத்யா, அஞ்சல் மூலம் படிக்கும் மாணவன். சஞ்சய் பாரதி கூரியர் சர்வீசிலும், விக்னேஷ் ஹேர்டிரஸராகவும், ரகுல் பிரீத்தி சிங் சேனல் ரிப்போர்ட்டராக நடிக்கின்றனர். ஜேம்ஸ் வசந்தன் இசையும், லஷ்மன் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
 

Post a Comment