
சென்னை : புளூ ஸ்டார் ஸ்டுடியோஸ் சார்பில் திட்டக்குடி ம.பாலாஜி, மதுரை எஸ்.ரோஸ்மேரி தயாரிக்கும் படம், 'போரிடப் பழகு'. மாஸ்டர் மகேந்திரன், நீலாம்பரி, ரியாஸ்கான், கிரேன் மனோகர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஆண்டனி. இசை, பவதாரணி. பாடல்கள்: பா.விஜய், சினேகன், கிருதயா. வசனம், நிம்பஸ் நாராயணன். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் சேகர் பாரதி கூறும்போது, 'மணல் கடத்தும் ரியாஸ்கானிடம் லாரி டிரைவராகப் பணியாற்றுகிறார், மகேந்திரன். அவரது காதலி நீலாம்பரி, இயற்கை மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளால் உண்டாகும் அதிசயங்களையும், மனித வாழ்க்கைக்கான அவசியத்தையும் மகேந்திரனுக்குப் புரிய வைக்கிறார். இதையடுத்து ரியாஸ்கானை எதிர்க்கும் மகேந்திரன், எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை' என்றார்.
Post a Comment