மணல் கொள்ளைக்கு எதிரான கதை

|

Policy against sand theft மணல் கொள்ளைபற்றிய கதை படமாகிறது. மகேந்திரன், புதுமுகம் நீலாம்பரி நடிக்கும் படம் 'போரிடப் பழகு. இப்படம் பற்றி இயக்குனர் சேகர் பாரதி கூறியதாவது: வருங்கால சந்ததிக்கு முன்னோர்களாகிய நாம் விட்டு செல்லப்போவது வறண்ட பாலைவனமும், நீர் இல்லா பூமியையும்தான். அந்தளவுக்கு ஆற்று மணல் தோண்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகிறது. ஆற்று மணலை தோண்டி எடுக்கும் தாதாவாக ரியாஸ்கான் நடிக்கிறார்.

அவரிடம் பணியாற்றும் மகேந்திரன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சொன்னதை செய்யும் முரட்டு குணம் படைத்தவர். அவரை காதலிக்கும் நீலாம்பரி மணல் கொள்ளையால் இயற்கை வளம் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை புரிய வைத்து மணல் கொள்ளைக்கு எதிராக அவரை மாற்றி போராட வைக்கிறார். மனோபாலா, கிரேன் மனோகர், புதுமுகம் ஜெயகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆண்டனி ஒளிப்பதிவு. பவதாரணி இசை. ம.பாலாஜி, ரோஸ்மேரி தயாரிப்பு. காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. இவ்வாறு சேகர் பாரதி கூறினார்.
 

Post a Comment