ரஜினி பற்றி ஆல்பம் தயாரிக்கிறார் லாரன்ஸ்

|

சென்னை : ரஜினிகாந்தின் பிறந்த நாள் அடுத்த மாதம் 12,ம் தேதி வருகிறது. அதையொட்டி ராகவா லாரன்ஸ், ரஜினியின் பிறந்த நாள் ஆல்பம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ரஜினிக்கு இந்த பிறந்த நாள் சிறப்பானது. காரணம் அவர் மறுபிறவி எடுத்த பிறகு வரும் பிறந்த நாள். 12.12.12 என அமைந்த நாள். இதனால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக ஆல்பம் தயாரித்து வருகிறேன்.

ரஜினியின் பெருமைகளை சொல்லும் பாடலைக் கொண்ட ஆல்பம் இது. விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். பாடல் தயாரானபிறகு நான் நடனமாடியும், சூப்பர் ஸ்டாரின் படக் காட்சிகளை பயன்படுத்தியும் வீடியோ ஆல்பமாக தயாரிக்கிறேன். ரஜினியின் பிறந்த நாள் அன்று இந்த ஆல்பம் வெளியிடப்படும்.
 

Post a Comment