
சென்னை : ரிச் ஆர்ட் புரொடக்ஷன் சார்பில் கே.ஜே.பாலகிருஷ்ணன், திலீப் குமார் தயாரிக்கும் படம் 'பாரசீக மன்னன்'. ஜே.சுரேஷ் இயக்கி, இசை அமைத்து, நடிக்கிறார். ஜோடி சுதி லட்சுமி. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. யுவன் சங்கர் ராஜா வெளியிட, 'ஜித்தன்' ரமேஷ் பெற்றார். விழாவில் பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் பேசும்போது, 'எங்கள் காலத்தில் நடிகர்களுக்கு லட்சத்தில்தான் சம்பளம். இன்றைக்கு ஒரு படம் ஓடிவிட்டாலே கோடியில் கேட்பதாகச் சொல்கிறார்கள்.
அன்றைக்கு ஹீரோக்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் மக்களுக்கும் அதை கொஞ்சம் திருப்பிக் கொடுத்தார்கள். இப்போது கோடி கணக்கில் வாங்கும் ஹீரோக்கள் வீட்டில் பூட்டி வைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுப்பது. எனவே அதில் 25 சதவிகிதமாவது மக்களுக்குத் திருப்பித் தரவேண்டும்' என்றார். விழாவில், முக்தா சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜே.சுரேஷ் வரவேற்றார். தயாரிப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Post a Comment