நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகேப்ரியோ தனது பிறந்தநாளையொட்டி மது விருந்து அளித்துள்ளார். அந்த விருந்திற்காக அவர் ரூ.16 கோடிக்கு மது வாங்கியுள்ளார்.
ஹாலிவுட் படமான டைட்டானிக் மூலம் உலகப் புகழ்பெற்றவர் நடிகர் லியோனார்டோ டிகேப்ரியோ. அதன் பிறகு அவர் ஹாலிவுட்டில் படிப்படியாக வளர்ந்து தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். கேப்ரியோ கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
பிறந்தநாள் என்றால் பார்ட்டி இல்லாமலா அதுவும் அதிகம் சம்பாதிக்கும் நடிகராச்சே. நியூயார்க்கில் தனது நண்பர்களுக்கு மது விருந்து அளித்துள்ளார். விருந்துக்கு வந்தவர்களுக்கு கொடுக்க அவர் ரூ.163,846,592 செலவு செய்து மதுபானங்கள் வாங்கியுள்ளார்.
அடப்பாவமே மதுவுக்கு ரூ.16 கோடி செலவா என்று நினைக்கிறீர்களா. ஆனால் அவரோ அந்த பார்ட்டியை சாண்டி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ ரெட் கிராஸுக்கு பணம் திரட்டும் நிகழ்ச்சியாகவும் ஆக்கிவிட்டார். இந்த மெகா பார்ட்டியில் பாப் பாடகி பியான்ஸே, அவரது கணவர், நடிகர் ராபர்ட் டி நிரோ மற்றும் நடிகை காமரூன் டயஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Post a Comment