விஸ்வரூபம் பாடல் 3 நகரங்களில் விழா

|

சென்னை : கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள படம், 'விஸ்வரூபம்'. பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜனவரி 11,ம் தேதி வெளியாகிறது. 'ஆரோ 3 டி' என்ற நவீன தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்பு செய்யப்பட்டுள்ள இதன் பாடல் வெளியீட்டு விழாவை, கமல் பிறந்த நாளில் நடத்த திட்டமிட்டிருந்தனர். பின்னர் அது தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 7,ம் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் ஒரே நாளில் பாடல் வெளியீட்டை  நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலையில் மதுரை வேலம்மாள் கல்லூரி வளாகத்திலும், கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் பிற்பகலிலும், சென்னையில் அதே நாள் மாலையிலும் பாடல்கள் வெளியிடப்பட இருக்கிறது. சென்னையில் விழா நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்பட இருக்கிறது. இவ்விழாவில் கமல்ஹாசன், வைரமுத்து, ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர்கள் சங்கர் எஹசான் லாய் உட்பட படக்குழுவினர் பங்கேற்க இருக்கின்றனர்.
 

Post a Comment