
சென்னை : இந்தியில் பிரபலமான யஷ் ராஜ் பிலிம்ஸ் முதன்முறையாக தமிழ், தெலுங்கில் படம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இந்தியில் 'பேண்ட் பாஜா பாரத்' என்ற படத்தை தயாரித்திருந்தது. ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா நடித்து ஹிட்டான இந்தப் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறது. இதில் ஹீரோவாக நானி ஒப்பந்தம் ஆகி உள்ளார். அடுத்த வருடம் ஷூட்டிங் தொடங்குகிறது. நானி ஜோடியாக முன்னணி இந்தி நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். இதுபற்றி நானி கூறும்போது, 'யஷ் ராஜ் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது பெருமையாக இருக்கிறது. இயக்குனர் உள்ளிட்ட விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. இதன் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்' என்றார்.
Post a Comment