ஓட்டல் அறையில் இருந்து சிம்புவுடன் வெளியே வந்தேனா? : லேகா பரபரப்பு பேட்டி

|

Am I with simbhu? : Lekha ஓட்டல் அறையிலிருந்து சிம்புவுடன் வெளிவந்ததாக பரவிய தகவலை கேட்டு ஷாக் ஆன லேகா வாஷிங்டன், அதற்கு பதில் அளித்தார். ஜெயம் கொண்டான், வகுவாட்டர் கட்டிங் படங்களில் நடித்தவர் லேகா. அவர் கூறியதாவது: கல்யாண சமையல் சாதம் என்ற படத்தில் பிரசன்னாவுடன் நடிக்கிறேன். இப்படத்திற்கான ஒத்திகை இம்மாதம் நடக்க உள்ளது. ஜனவரியில் ஷூட்டிங். நான் கொஞ்சம் வித்தியாசமான நடிகை. ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். இந்தியில் 2 படங்களில் நடித்துள்ளேன். அது இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 3வது இந்தி பட ஷூட்டிங் தொடங்கிவிட்டேன். படமொன்றுக்கு நான் துணை எழுத்தாளராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன்.

நான் உருவாக்கும் குறும்படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் சிம்புவுடன் ஒரு ஓட்டல் அறையிலிருந்து நான் வெளியில் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதில் உண்மை இல்லை. நான் குறும்படம் எதுவும் இயக்கவில்லை. எந்த ஓட்டல் அறையிலிருந்தும் சிம்புவுடன் நான் வெளியே வரவில்லை. இதை எனது இணைய தள பக்கத்திலும் தெளிவுபடுத்தி இருந்தேன். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் நடிப்பதாக இருந்தது. அந்த படம் நின்றுவிட்டது. அப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று நான் கூறவில்லை. இது பற்றி பத்திரிகைகளில் தவறாக செய்தி வந்தது. சிம்பு எனக்கு நண்பர். நேரில் பார்க்கும்போது பேசிக்கொள்வோம். அவ்வளவுதான். இவ்வாறு லேகா வாஷிங்டன் கூறினார்.
 

Post a Comment