சென்னை சர்வதேச பட விழா அமிதாப் பச்சன் பங்கேற்கிறார்

|

சென்னை : பத்தாவது, சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, வரும் 13,ம் தேதி முதல் 20,ம் தேதி வரை நடக்கிறது. தமிழக அரசின் உதவியோடு இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் இவ்விழாவை நடத்துகிறது. இதில் 57 நாடுகளைச் சேர்ந்த 160,க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன. சென்னையிலுள்ள உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஐநாக்ஸ், சத்யம், கேசினோ தியேட்டர்களிலும் ராணி சீதை ஹாலிலும் படங்கள் திரையிடப்படும். போட்டிப் பிரிவுக்கு, 'அரவான்', 'ஆரோகணம்', 'அட்டகத்தி', 'மெரினா', 'மௌனக்குரு',

'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'நான் ஈ', 'நீர்ப்பறவை', 'பீட்சா', 'சாட்டை', 'சுந்தராபாண்டியன்', வழக்கு எண் 18/9' ஆகிய 12 தமிழ்ப் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சந்திரலேகா (தமிழ்), பதேர் பாஞ்சாலி (வங்காளம்), கைட் (இந்தி) உட்பட 6 இந்திய படங்களும் திரையிடப்படுகின்றன. 16ம் தேதி 'ஆரண்ய காண்டம்' படம் திரையிடப்படும். விழாவில் வெளிநாட்டிலிருந்து பல இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் இசை நிகழ்ச்சியுடன் 13,ம் தேதி விழா துவங்குகிறது. விழா முடிவில் அமிதாப்பச்சன் கலந்துகொள்கிறார்.

 

Post a Comment