தமிழில் பெயர் வைத்த சினிமாவிற்கு கேளிக்கை வரி: எதிர்த்து வழக்கு!

சென்னை: தமிழில் பெயர் வைக்கப்பட்ட திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி வசூலிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் வைத்த சினிமாவிற்கு கேளிக்கை வரி: எதிர்த்து வழக்கு!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மோட்சம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 2007 ம் ஆண்டு முதல் தமிழில் பெயர் வைக்கும் படத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படுகிறது

ஆனால் வரிச்சலுகை வழங்கிய படத்திற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

நூறு பேரு லவ் பண்ணாங்க… தேவதை சுபத்ரா

தேவதை சீரியலின் தேவதை சுபத்ரா. சீரியலில் கதைப்படி திருமணம் ஆகாமல் வரன் தட்டிக் கொண்டே போகும் கதாபாத்திரம் இவருக்கு ஆனால் நிஜத்தில் ப்ளஸ் டூ முடிக்கும் போதே திருமணம் முடிந்துவிட்டதாம்.

பள்ளி படிக்கும் காலத்திலேயே நூறு பேர்வரை காதலை சொல்லியிருக்கிறார்களாம். எதற்கும் ஓகே சொல்லாமல் கடைசியில் சொந்த மாமாவிற்கு ஓகே சொல்லி திருமணம் முடித்திருக்கிறார்.

கணவரை செல்லமாக அழைப்பது மாம்ஸ். திருமணத்திற்கு பின்பே சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பு, சீரியல் என நடித்து வருகிறார் அழகான சுபத்ரா.

நூறு பேரு லவ் பண்ணாங்க… தேவதை சுபத்ரா

60 கதாநாயகிகள்

தேவதை சீரியலுக்கா 60 பேரை டெஸ்ட் செய்து கடைசியில் 61வது நபராக தேர்வானராம் சுபத்ரா.

ஒன் சைடு லவ்

16 ப்ளஸ் களிலேயே 100 பேர் வரை காதலை சொல்லியிருக்கின்றனர். எல்லாமே ஒன் சைடு லவ்வாம்.

காதல் சொன்ன மாமா

கடைசியில் சொந்த மாமாவே ஒரு திருமண விழாவில் காதலை சொல்லி கடைசியில் அது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

அழகு பராமரிப்பு

சுபத்ரா தனது அழகை பராமரிக்க தக்காளி, எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக் கருவை பூசி முகம் கழுவுகிறாராம். இதனால் முகம் பளிச் பளிச்தான் என்கிறார்.

தேவதை போல ஜொலிக்க வேண்டும் என்பவர்கள் சுபத்ரா சொல்வதை கேட்டுக்கங்களேன்.

'ஆரம்பம்', 'ஜில்லா' தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு?

சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர்.

சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

ஹைதராபாத்: அஜீத் வீரம் படக்குழுவினருடன் சேர்ந்து ஆரம்பம் படத்தை இன்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கவிருக்கிறார்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

இன்று அஜீத், வீரம் படக்குழுவின் விதார்த், முனீஷ், சுஹைல், பாலா மற்றும் இயக்குனர் சிவாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆரம்பம் படத்தை பார்க்கவிருக்கிறார்.

தமன்னாவுக்கு பிற வேலைகள் இல்லை என்றால் அவரும் படம் பார்க்க வருகிறார்.

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

சென்னை: தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கூடுதலாக ஒரு காட்சி அதாவது 5-வது காட்சியை நடத்திக்கொள்ளலாம் என அரசாணையின் மூலம் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தீபாவளிக்கு 5 ஷோ காட்டலாம்.. தியேட்டர்களுக்கு அனுமதி

அதன்படி நவம்பர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஐந்தாவது காட்சியை நடத்திக் கொள்ளலாம். தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண் 14-ன் படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னத்த தீபாவளி: புலம்பித் தள்ளும் லீடரின் மாவட்ட படக்குழு

சென்னை: லீடர் நடிகர் நடிக்கும் மாவட்டம் படக்குழுவினருக்கு 3 மாத சம்பள பாக்கியாம். இதனால் படக்குழுவினர் என்னத்த தீபாவளி கொண்டாட என்று புலம்புகிறார்கள்.

லீடர் நடிகர் நடித்து வரும் படம் மாவட்டம். படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியவில்லையே என்று படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

காரணம் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டான்ஸர்கள் என்று யாருக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லையாம். முதலில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு சம்பளம் தருகிறோம் என்றார்களாம். அதன் பிறகு தீபாவளி பண்டிகைக்கு தருகிறோம் என்றார்களாம்.

இதனால் படக்குழுவினர் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்களாம். ஏன் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று படக்குழுவினர் விசாரித்தால், லீடருக்கு ரூ.20 கோடியை கொடுத்தாச்சு. அப்படி கொடுத்தால் தான் அவர் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறினார்களாம்.

இதனால் தீபாவளி கொண்டாட முடியாமல் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

ஹைதராபாத்: அஜீத் வீரம் படக்குழுவினருடன் சேர்ந்து ஆரம்பம் படத்தை இன்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டரில் பார்க்கவிருக்கிறார்.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் அஜீத் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். வீரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தில் 'வீரம்' குழுவுடன் 'ஆரம்பம்' படம் பார்க்கும் அஜீத்

இன்று அஜீத், வீரம் படக்குழுவின் விதார்த், முனீஷ், சுஹைல், பாலா மற்றும் இயக்குனர் சிவாவுடன் சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஆரம்பம் படத்தை பார்க்கவிருக்கிறார்.

தமன்னாவுக்கு பிற வேலைகள் இல்லை என்றால் அவரும் படம் பார்க்க வருகிறார்.

'ஆரம்பம்', 'ஜில்லா' தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு?

சென்னை: ஆரம்பம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், நடிகர் சந்தானம், ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அஜீத் நடித்துள்ள ஆரம்படம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தியுள்ளனர்.

சந்தானம், தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல்ராஜா, ஆர்.பி.செளத்ரி வீடு, அலுவலகங்களில் ரெய்டு

இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திலும் சோதனை நடந்துள்ளது. சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை பெரும்பாலும் ஸ்டுடியோ கிரீன் தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா திரைக்கு வரவுள்ள நிலையில் ஞானவேல்ராஜாவின் அலுவலகத்தில் ரெய்டு நடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் வீடு தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரி எதிரில் இருக்கிறது. அங்கு வருமான வரி அதிகாரிகளில் ஒரு குழுவினர் சென்றனர். கேட்டை மூடிக்கொண்டு வீட்டில் அறை அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். தஸ்தாவேஜுகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி அலுவலகம் தியாகராய நகரில் உள்ளது. அங்கு வருமான வரிதுறையின் இன்னொரு அதிகாரிகள் குழுவினர் சென்று சோதனை நடத்தினார்கள். பாண்டி பஜார் தணிகாசலம் சாலையில் உள்ள தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அலுவலகத்திலும், சாலி கிராமத்தில் உள்ள தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வீட்டிலும் சோதனை நடந்தது.

சென்னையில் மொத்தம் 23 இடங்களில் சோதனை நடந்தது. இதுதவிர கோவை, சேலத்தில் 6 இடங்களில் சோதனை நடந்தது. சேலம் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள சினிமா நகரில் உள்ள பட தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, அசோக் சாம்ராஜ் ஆகியோரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, கோவையில் இருந்து வந்திருந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. இதில் சொத்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சந்தானம் தற்போது 15 படங்களில் நடித்து வருகிறார். சில படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி தற்போது விஜய், மோகன்லால் ஆகியோரை வைத்து ஜில்லா படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.

என்னத்த தீபாவளி: புலம்பித் தள்ளும் லீடரின் மாவட்ட படக்குழு

சென்னை: லீடர் நடிகர் நடிக்கும் மாவட்டம் படக்குழுவினருக்கு 3 மாத சம்பள பாக்கியாம். இதனால் படக்குழுவினர் என்னத்த தீபாவளி கொண்டாட என்று புலம்புகிறார்கள்.

லீடர் நடிகர் நடித்து வரும் படம் மாவட்டம். படம் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு ஜரூராக நடக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியவில்லையே என்று படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

காரணம் படத்தில் வேலை பார்த்த டெக்னீஷியன்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், டான்ஸர்கள் என்று யாருக்கும் கடந்த 3 மாதமாக சம்பளமே கொடுக்கவில்லையாம். முதலில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு சம்பளம் தருகிறோம் என்றார்களாம். அதன் பிறகு தீபாவளி பண்டிகைக்கு தருகிறோம் என்றார்களாம்.

இதனால் படக்குழுவினர் தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு சென்றால் அவர்களுக்கு சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்களாம். ஏன் சம்பளம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று படக்குழுவினர் விசாரித்தால், லீடருக்கு ரூ.20 கோடியை கொடுத்தாச்சு. அப்படி கொடுத்தால் தான் அவர் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறினார்களாம்.

இதனால் தீபாவளி கொண்டாட முடியாமல் படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

சீனியர் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர முயன்று தோற்ற நடிகை

சென்னை: நயனமான நடிகை தெலுங்கில் சீனியர் நடிகருடன் நடிக்க முயற்சி செய்து தோற்றுள்ளாராம்.

காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து படத்தில் இருந்து ஒதுங்கும் முன்பு நயனமான நடிகை தெலுங்கில் ஒரு சீனியர் நடிகருடன் சேர்ந்து சரித்திர படத்தில் நடித்தார். அந்த படத்திற்காக ஆந்திர அரசின் விருதும் நடிகைக்கு கிடைத்தது.

அதன் பிறகு காதல் தோல்வி அடைந்ததால் மறுபடியும் நடிக்க வந்துவிட்டார் நயனம். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது. இளம் ஹீரோக்களும் அவருடன் நடிக்க பேராவலாக உள்ளனர்.

இந்நிலையில் சரித்திர படத்தில் தன்னுடன் நடித்த சீனியர் ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர நயனம் முயற்சி செய்தாராம். ஆனால் அந்த நடிகரின் படத்தில் மும்பையைச் சேர்ந்த நடிகையை ஓகே செய்துவிட்டார்களாம். மேலும் அந்த வாய்ப்புக்கு முயற்சி செய்த நயனத்திடம் அடுத்த படத்தில் பார்ப்போம் என்று கூறிவிட்டார்களாம்.

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை   

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை.

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார். இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

தாய்க்கு செய்து கொடுத்த 'அந்த' சத்தியத்தை நடிகர் மறந்துவிட்டாரோ?

சென்னை: இரட்டை அர்த்த வசனங்களை இனி பேச மாட்டேன் என்று தனது தாய்க்கு சர்ச்சையில் சிக்கியுள்ள காமெடி நடிகர் சத்தியம் செய்து கொடித்திருந்தார்.

சின்னத்திரையில் இருந்து வந்து பெரியதிரையில் பெரிய அளவில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் அவர். காமெடி செய்து சம்பாதித்த பணத்தில் அவர் தளபதி வைத்திருக்கும் அதே பிராண்ட் காருக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பெண்களை இழிவுபடுத்தி பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இரட்டை அர்த்த வசனங்களை பேசி பெண்களை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பெண்கள் அமைப்பு ஒன்று நடிகருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சர்ச்சை எல்லாம் வெடிப்பதற்கு முன்பு தாய் சொல்லை தட்டாதவர் என்று கூறப்படும் அந்த நடிகர் தனது அம்மாவுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருந்தார்.

அதாவது இனி வரும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் அருவெறுப்பான வசனங்களை பேச மாட்டேன் என்று. அந்த சத்தியத்தை ஒரு வேளை மறந்துவிட்டாரோ?

'தல' படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு அடிபோடும் வி.வி.ஐ.பி.க்கள்

சென்னை: நாளை ரிலீஸாகும் 'தல' நடிகரின் படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு விவிஐபிக்கள் போட்டி போடுகிறார்களாம்.

'தல' நடிகரின் துவக்கம் படம் நாளை ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கி டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் சென்னை நகரில் உள்ள மல்ட்டிபிளக்ஸ்களில் படத்தை பார்க்க விவிஐபிக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதனால் அவர்கள் டிக்கெட் கேட்டு மல்ட்டிபிளக்ஸுகளுக்கு பிரஷர் மேல் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

மும்பை: சமையல் அறை சாதனங்கள் விளம்பரத்தில் ஜோடியாக நடிக்க நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யா ராய்க்கும் ரூ.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து அண்மையில் பிரபல நிறுவனத்தின் சமையல் அறை சாதன விளம்பரங்களில் நடித்தார். அந்த விளம்பரத்தில் நடிக்க அவர்கள் ரூ.30 கோடி சம்பளம் கேட்டுள்ளனர். அந்த நிறுவனமும் சற்றும் யோசிக்காமல் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துவிட்டதாம்.

ஜோடியாக விளம்பரத்தில் நடிக்க ரூ.30 கோடி வாங்கிய அபிஷேக், ஐஸ்வர்யா ராய்

கணவனும், மனைவியும் தனித்தனியாக விளம்பரங்களில் நடிக்கவே பெரும் தொகையை கேட்பார்கள். அப்படி இருக்கையில் ஜோடியாக நடிக்க இவ்வளவு கேட்டதில் ஆச்சரியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அபி, ஐஸ் தவிர சைஃப்-கரீனா, அக்ஷய் குமார்-ட்விங்கிள் கன்னா ஆகிய ஜோடிகளும் விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடியபோது காலில் அடிபட்டுள்ளது. அப்போது முதல் உதவி எடுத்துக் கொண்டவர் வழக்கம் போல படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார். நாள் ஆக ஆக காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்புகளுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை

கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை   

இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை.

அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார். இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.

'தல' படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு அடிபோடும் வி.வி.ஐ.பி.க்கள்

சென்னை: நாளை ரிலீஸாகும் 'தல' நடிகரின் படத்தை பார்க்க டிக்கெட்டுக்கு விவிஐபிக்கள் போட்டி போடுகிறார்களாம்.

'தல' நடிகரின் துவக்கம் படம் நாளை ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டுக்கான முன்பதிவு துவங்கி டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்நிலையில் படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கு ஒரு பக்கம் இருந்தாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் சென்னை நகரில் உள்ள மல்ட்டிபிளக்ஸ்களில் படத்தை பார்க்க விவிஐபிக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம்.

இதனால் அவர்கள் டிக்கெட் கேட்டு மல்ட்டிபிளக்ஸுகளுக்கு பிரஷர் மேல் பிரஷர் கொடுத்து வருகிறார்களாம்.

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

ஆபரேஷன் செய்து கொண்ட நடிகர் ஆர்யா: ஓய்வில் இருக்கிறார்

சென்னை: நடிகர் ஆர்யாவுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடியபோது காலில் அடிபட்டுள்ளது. அப்போது முதல் உதவி எடுத்துக் கொண்டவர் வழக்கம் போல படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார். நாள் ஆக ஆக காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை சந்தித்துள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் இரண்டாம் உலகம், ஆரம்பம் ஆகிய படங்களில் பிசியாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யவில்லை. தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டதையடுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் படப்பிடிப்புகளுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

நடிகை கஜோல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு: 2 பேர் கைது

நடிகை கஜோல் வீட்டில் ரூ.5 லட்சம் தங்க நகை திருட்டு: 2 பேர் கைது

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோல் வீட்டில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைக்களை திருடிய பணியாளர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

'பாசிகர்' இந்தி படத்தின் மூலம் பிரபல பாலிவுட் கதாநாயகியாக 1992-ல் அறிமுகமாகியவர் நடிகை கஜோல்.

'தில்வாலே துலன்யே லே ஜாயங்கே' மற்றும் 'குச் குச் ஹோத்தா ஹை' படங்களின் பிரபலமடைந்தார். 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சார கனவு' படத்தில் நடிகர் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சுமார் 40 படங்களில் நடித்துள்ள இவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்க்னை 5 ஆண்டுகளாக காதலித்து 1994-ம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை பெற்ற கஜோல், மும்பையின் புறநகர் பகுதியான ஜுகு-வில் உள்ள ஆடம்பர வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.

கடந்த 22-ம் தேதி சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து கொண்ட கஜோல் தனது நகை பெட்டியில் இருந்து 17 வளையல்கள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இது வீட்டின் உள்ளே சுதந்திரமாக நடமாடும் யாரோ செய்த வேலையாகதான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர் இது தொடர்பாக ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது வீட்டில் வேலை செய்யும் 10க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் காயத்ரி (22) சந்தோஷ் பாண்டே ஆகிய இருவரை கைது செய்தனர்.

அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் விசாரணை காவலின்கீழ் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

'ஆரம்பம்' படத்திற்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸ் ஆகுமா?

சென்னை: அஜீத்தின் 'ஆரம்பம்' படத்திற்கு தடை கோரி வழக்கு: படம் நாளை ரிலீஸ் ஆகுமா?  

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

‘இனி தான் ஆரம்பம்' என்ற தலைப்பில் தமிழ் திரைப்படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவும் நடந்துவிட்டது.

இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் கடந்த ஏப்ரல் 12ம் தேதி பதிவு செய்தேன். படத்தின் தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஸ்ரீசாய் மூவிஸ் சார்பில் ரகுராம் என்பவர் ‘ஆரம்பம்' என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து வெளியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, நான் பதிவு செய்த பெயரை, விதிகளுக்கு முரணாக தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்த 'ஆரம்பம்' என்ற பெயரை திரும்பப் பெறுமாறு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

போலி நம்பர் பிளேட் வழக்கு: சிவகாசி நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண்

போலி நம்பர் பிளேட் வழக்கு: சிவகாசி நீதிமன்றத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் சரண்

சிவகாசி: காரில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்திய வழக்கில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் சிவகாசி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்.

பவர்ஸ்டார் சீனிவாசன் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலர் மோசடி புகார் கொடுத்தனர். டெல்லி திகார் சிறையில் இருந்த பவர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதன் பிறகு வழக்கம்போல் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி சிவகாசியில் பயணம் செய்ததாக பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் மீது சிவகாசி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது பவர்ஸ்டார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பவர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட் உத்தரவை வாபஸ் பெறக் கோரி மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அந்த மனுவை தாக்கல் செய்த தினமே பரிசீலனை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து பவர்ஸ்டார் இன்று காலை சிவகாசி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து ரம்யா அதிரடி

பெங்களூர்: எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என நடிகையும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் 'குத்து', வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் ரம்யா நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார்.இதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.

குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது... குத்து  ரம்யா அதிரடி

ரம்யா கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும் என்றும் ஜெகதீஷ் கூறியுள்ளார்.

இதற்கு ரம்யா அளித்துள்ள பதிலில், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை என்றார்.

அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா? என்னால் அப்படி செய்ய முடியாது என்றும் ரம்யா கூறியுள்ளார்.

ரிடையர்மென்ட் டைம்... ப்ரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரம்!

ரிடையர்மென்ட் டைம்... ப்ரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரம்!

சென்னை: ப்ரியாமணிக்கு ரிடையர்மென்ட் நேரம் நெருங்கிவிட்டதால், மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாக உள்ளனர் குடும்பத்தினர்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ப்ரியாமணி.

அவருக்கு இப்போது தமிழில் சுத்தமாக படங்களே இல்லை. கன்னடத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 29 வயது ஆகும் ப்ரியாமணியோடு ஜோடி சேர இப்போதுள்ள ஹீரோக்களும் விரும்புவதில்லை. எனவே ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

எனவேதான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக இதுதான் சரியான சமயம் என முடிவு செய்துள்ளார்.

ப்ரியாமணிக்கு ஏற்ற தொழிலதிபர், சாப்ட்வேர் எஞ்ஜினீயர் அல்லது வெளிநாட்டில் செட்டிலான இந்தியர்களில் மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம் ப்ரியாமணியின் பெற்றோர்.

மீண்டும் நடிக்கத் துடிக்கும் நடிகை: தடை போட்ட குடும்பத் தலைவர்

சென்னை: சிங்கத்தின் மனைவிக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால் அவரது ஆசைக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிங்கத்தின் மனைவி குழந்தைகளோடு பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் தான் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்களே நாம் மீண்டும் நடிக்கத் துவங்கினால் என்ன என்று நினைத்தார். இதை தனது கணவரிடமும் கூறினார். காதல் கணவரான சிங்கம் ஓகே தாராளமாக நடிப்பை தொடரலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

ஆனால் குடும்பத் தலைவரான சிங்கத்தின் தந்தை மருமகளின் ஆசைக்கு தடை போட்டுவிட்டாராம். நான் இருக்கும் வரையில் குடும்பம் கட்டுக்கோப்பாக இப்படித் தான் இருக்க வேண்டும். அதன் பிறகு எப்படி வேண்டும் என்றாலும் இருங்கள் என்று பட்டென்று கூறிவிட்டாராம்.

அதனால் அம்மணி நடிப்பது குறித்து பேசாமல் வாய் மூடிக் கொண்டிருக்கிறாராம்.

காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்

சென்னை: 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலியின் 82வது பிறந்தநாள் இன்று.

5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார்.

காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்

இந்நிலையில் அவரின் 82வது பிறந்தநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். வாலியின் மறைவு திரை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி கடைசியாக பாடல் எழுதியது சித்தார்த் நடிக்கும் காவியத் தலைவன் படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கராஜனாக பிறந்த வாலி வயதானாலும் மனதளவில் வாலிபராகவே இருந்து மறைந்தார்.

கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

எதும் கிசுகிசு மேட்டர் இல்லீங்க... இது லட்சுமி மேனனை கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்திருப்பது குறித்து.

மிகுந்த சரிவிலிருந்த கவுதம் மேனனை கை கொடுத்து அஜீத் தூக்கி இருப்பது தெரிந்த விஷயம்.

அந்த தெம்பில், ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் கவுதம் மேனன்.

கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

வீரம் படம் முடிந்து கவுதம் மேனன் படத்தில் அஜீத் நடிக்க குறைந்தது 3 மாதங்களாவது ஆகுமாம். பிப்ரவரியில் ஷூட்டிங் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் சிம்புவை வைத்துப் படம்பண்ணுவதாக முதலில் முடிவு செய்திருந்தார் கவுதம். ஆனால் சிம்பு படத்தை 2014-ல் வைத்துக் கொள்ள முடிவு செய்த கவுதம், அந்த 3 மாதங்களில் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ராதாமோகன். இந்த படத்தில் யார் ஹீரோ என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஹீரோயினாக லட்சுமி மேனனைத் தேர்வு செய்துள்ளனர்.

லட்சுமி மேனனை இப்படத்திற்காக சிபாரிசு செய்தது கவுதம் மேனன்தானாம். இவருடைய விருப்பத்தை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம் ராதாமோகன்.

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை சந்தானம் நிறுத்தனும், இல்லை என்றால்...

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை சந்தானம் நிறுத்தனும், இல்லை என்றால்...

சென்னை: படங்களில் பெண்களை இழிவுபடுத்துவது போன்று வசனம் பேசுவதாகக் கூறி நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜீவா, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள என்றென்றும் புன்னகை படத்தில் பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் அஞ்சு பத்துக்கு போகட்டுமா என்று கேட்க அவரோ நீ நன்றாகத் தானே இருக்க ஆயிரம், ஐநூறுக்கு போயேன் என்று இரட்டை அர்தத்தில் பேசிய வசனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் பேசி வருகிறார். மதுபாட்டிலும் கையுமாக போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. இது போன்று வசனம் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்துக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். தணிக்கை குழுவினர் இதுபோன்ற வசனங்களை நீக்கிவிட்டுத்தான் அனுமதி சான்று அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமா பிடிக்காது! - கே எஸ் ரவிக்குமார் அதிரடி

ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமா பிடிக்காது! - கே எஸ் ரவிக்குமார் அதிரடி

சென்னை: சினிமா விமர்சனம் என்ற பெயரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு டிவியில் திட்டிக் கொண்டிருந்த ஜேம்ஸ் வசந்தனை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது, என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

மாஸ்டர் மகேந்திரனை நினைவிருக்கிறது... இப்போது வளர்ந்து இளைஞர் மகேந்திரன் ஆகிவிட்டார்

அவர் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள படம் விழா. பாரதிபாலகுமாரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை மாலை நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை நேருக்கு நேராகவே விமர்சித்தார், அதாவது கோட் சூட் போட்டுக் கொண்டு முன்பு டிவியில் அவர் திரைவிமர்சனம் செய்ததற்காக!

கேஎஸ் ரவிக்குமார் பேச்சிலிருந்து...

மாஸ்டர் மகேந்திரனை ‘நாட்டாமை' படத்தில் 3 வயசு பையனா அறிமுகப்படுத்தினேன். இப்போ ஹீரோவா வளர்ந்திருக்கான். வாழ்த்துகள்.

இந்தப்படத்தோட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை எனக்கு முதல்ல சுத்தமா பிடிக்காது. ஏன்னா ஒரு டிவியில கோட் போட்டுக்கிட்டு கால் மேல கால் போட்டு என்னமோ சினிமாவையே அவர்தான் கண்டுபிடிச்ச மாதிரி பேசுவார். ரொம்ப கடுப்பா இருக்கும்.

அது எவ்ளோ நல்ல படமா இருந்தாலும் கடைசியில தெனாலி - சுண்டெலி, பஞ்ச தந்திரம் - மாய மந்திரம்னு திட்டுவாரு. நல்லா ஓடற படத்தைக் கூட இப்படித்தான் கமெண்ட் அடிப்பாரு.

அதையெல்லாம் இவரே எழுதினாரா அல்லது வேற ஆள் எழுதிக் கொடுத்துப் படிச்சாரா தெரியல.. ஆனா கோபம் இவர் மேலதான்.

ஆனா அவரே ‘சுப்ரமணியபுரம்' படத்தில் அத்தனை பேரையும் தலையாட்ட வெச்சிட்டார். அவருக்குள்ள இப்படி ஒரு இசைத் திறமை இருப்பது தெரியாத காலகட்டத்தில் அவரை வெறுத்தேன். இப்போது ரசிக்க வச்சிட்டார்.

நல்லவேளையா மியூசிக் டைரக்டரா ஆனதுக்கப்புறம் அவர் அந்த கோட்டை கழட்டி வெச்சிட்டு வந்திருக்கார், நல்லது," என்றார் ரவிக்குமார்.

இதையெல்லாம் என்ன ரியாக்ஷன் காட்டுவது என்றே தெரியாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன்.

‘பிரியாணி’ ரசிகையாம் கும்கி...

சென்னை: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள லட்சுமிகரமான நடிகை சரியான சாப்பாட்டு ரசிகையாம். அதிலும் குறிப்பாக பிரியாணி பிரியையாம். படப்பிடிப்பு இடைவேளைகளில் தட்டு நிறைய பிரியாணியை கொட்டி வைத்து ஒரு பிடி பிடிக்கிறாராம்.

நடிகை பிரியாணி சாப்பிடுவதைப் பார்த்தால், பார்ப்பவர்களுக்கே மயக்கம் வந்து விடும், ஆனால், நடிகைக்கு மட்டும் வெயிட் ஏறவில்லையாம். மற்ற நடிகைகளைப் போல் மணிக்கணக்காக ஜிம்மில் பயிற்சியும் எடுத்துக் கொள்வதில்லையாம் நடிகை.

இவ்வளவு சாப்பாடு சாப்பிட்டும் நடிகையின் உடல் எடை கூடாததன் மர்மம் என்னவென்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனராம் மற்ற நடிகைகள்.

'யாரால கெட்டேன்... நோரால கெட்டேன்!'

வாய் வாய் என்னவாய்... என ஒரு வசனம் வரும் கவுண்டமணி நடித்த கோயில் காளை படத்தில்.

இப்போது உச்சத்திலிருப்பதாக சொல்லப்படும் இளம் காமெடி நடிகரின் நிலையை, மேலே சொன்ன தலைப்பை வைத்துதான் கமெண்ட் அடிக்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

சினிமா எப்போது இழுத்தணைக்கும் எப்போது எட்டி உதைக்கும் என்பது புரியாத ஒன்று.

காமெடியனின் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அவர் இல்லாவிட்டால் நடிக்கவே மாட்டேன் என்று சொன்ன ஹீரோக்களே தடுமாறும் அளவுக்கு வந்துவிட்டார்களாம், காமெடியனுக்கு எதிரான நிலையைப் பார்த்து.

படத்துக்குப் படம் காமெடி என்ற பெயரில் பல சீரியஸான விஷயங்களை இவர் கலாய்ப்பது ஒரு பக்கம் என்றால்... உலக நாயகன் போன்ற முன்னணி ஹீரோக்களையும் அவர்களின் படங்களையும்கூட கலாய்ப்பதால், சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டி வருகிறார்கள்.

முன்பு திரைமறைவில் வெளியாகி வந்த இந்த அதிருப்தி, இப்போது விழா மேடைகளிலேயே வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இன்னொரு பக்கம், காமெடி கிங்கும் வைகைப் புயலும் அதிரடிப் பாய்ச்சலில் களமிறங்கியுள்ளதால், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் மீண்டும் அந்த இரு ஜாம்பவான்களையும் நாட ஆரம்பித்துள்ளார்களாம்.

போகிற போக்கில் சொந்த செலவில் சூனியம்-ங்கிற வசனம் நமக்கே ஒர்க் அவுட் ஆகிடும் போலிருக்கே என கவலையில் இருக்கிறாராம் காமெடி.

குறிப்பு: நோர் என்றால் தெலுங்கில் வாய் என்று அர்த்தம்!

சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டோம் - சரிதாவுக்கு முகேஷ் பதில்

கொச்சி: நடிகை சரிதாவை சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்ட பிறகே இரண்டாவது திருமணம் செய்தேன், என்று நடிகர் முகேஷ் பதில் கூறியுள்ளார்.

சரிதாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்துவிட்ட நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக் கலைஞர் தேவிகாவை காதலித்து கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள பதிவு அலுவலகத்தில் அவர்கள் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்துக்கு முகேஷின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. 2007-ம் ஆண்டு முதல் அவரை விவாகரத்து செய்ய தயாராக இருந்து வருகிறேன். ஆனால் தட்டிக்கழித்தே வந்தார். விவாகரத்து பெறாமல் முகேஷ் இரண்டாம் திருமணம் செய்தது கிரிமினர் குற்றம். எனவே வழக்கு தொடரப் போகிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.

சரிதாவின் குற்றச்சாட்டுகளை முகேஷ் மறுத்துள்ளார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "சரிதா குற்றச்சாட்டுகள், முற்றிலும் தவறானவை. தேவிகாவை முகேஷ் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு உள்ளார். சரிதாவை சட்டரீதியாக பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் பதிவு அலுவலகத்தில் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார். தேவையான ஆவணங்களை ஒப்படைத்திருக்காவிட்டால் திருமணத்தை அரசு அதிகாரி நடத்தி வைத்திருக்கமாட்டார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத் பட வாய்ப்பு.... எல்லாம் என் பேர் ராசி - குஷியில் நடிகை

அஜீத் பட வாய்ப்பு.... எல்லாம் என் பேர் ராசி - குஷியில் நடிகை

என் பெயரை மாற்றிக் கொண்ட ராசி காரணமாகவே அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக நடிகை மனோசித்ரா கூறியுள்ளார்.

‘அவள் பெயர் தமிழரசி' என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நந்தகி. தொடர்ந்து ‘தாண்டவக்கோனே' என்ற படத்திலும் நடித்தார்.

ஆனால் அவருக்கு எதிர்ப்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையமில்லை.

எனவே எண் ராசி பார்த்து தன்னுடைய பெயரை ‘மனோசித்ரா' என மாற்றிக் கொண்டார்.

இந்த பெயர் ராசி தற்போது இவருக்கு கைகொடுத்து விட்டதாம். அஜீத் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘வீரம்' படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் மனோசித்ரா.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு காரணமே தன் பெயர் மாற்ற ராசிதான் என்று கூறி வருகிறாராம் நந்தகி எனும் மனோசித்ரா.

வீரம் படத்தில் அஜீத் - தமன்னா நடிக்கிறார்கள். இன்னொரு ஜோடியாகத்தான் விதார்த்தும் மனோசித்ராவும் நடிக்கின்றனர்.

தமன் இசையில், சிவா இயக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. வேட்டி சட்டையில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் அஜீத்.

ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன்

மும்பை: தனது மருமகளை செய்தியாளர்கள் ஐஸ்வர்யா என்று அழைத்ததால் ஜெயா பச்சன் ஆத்திரம் அடைந்தார்.

பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் கொடுத்த விருந்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த விருந்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் ஜெயா பச்சனுடன் கலந்து கொண்டார்.

ஐஸ்வர்யா இல்லை ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜாக்கிரதை: மீடியாவை விளாசிய ஜெயா பச்சன்

விருந்து நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்புகையில் பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று அவர்களை அணுகினார்கள். அப்போது ஜெயா பச்சன் கோபத்தில் செய்தியாளர்களை திட்டிவிட்டார்.

என்ன ஐஸ்வர்யா, ஐஸ்வர்யான்னு கூப்பிடுறீங்க, அவர் என்ன உங்களுடன் ஒன்றாக படித்தவரா? ஒழுங்காக ஐஸ்வர்யா ராய் பச்சன் என்று முழுப்பெயரை சொல்லுங்கள் என்று பொறிந்து தள்ளிவிட்டார்.

இதை கேட்ட செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆரம்பம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி

அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்' திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்பம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய ஜெயா டிவி  

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற பல தொலைக்காட்சி நிறுவனங்கள் முட்டி மோதியதாம்.

சன் டிவி, விஜய் டிவி, புதுயுகம், கலைஞர் டிவி என பல சேனல்கள் போட்டி போட சத்தமில்லாமல் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி கைப்பற்றி விட்டதாம்.

15 கோடி ரூபாய் கொடுத்து ஆரம்பம் படத்தை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம், தலைவா படங்களுக்கு நேர்ந்த தடைகள் தங்களின் படத்திற்கு வரக்கூடாது என்றுதான் ஆரம்பம் படத்தை ஆரம்பத்திலேயே ஜெயா டிவிக்கு விற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே விஜயதசமி நாளில் ‘மேக்கிங் ஆப் ஆரம்பம்' ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

'லீடர்' நடிகருக்கு வேறு யாரும் ஆப்பு வைக்க வேண்டாம்

சென்னை: லீடர் நடிகருக்கு வேறு யாரும் தனியாக ஆப்பு வைக்கத் தேவையில்லை.

லீடர் படத்தில் நடித்த நடிகர் அதை ரிலீஸ் செய்யவே படாதபாடு பட்டார். அதற்கு காரணம் டைம் டூ லீட் என்ற வாசகம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் அரசியலுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று இருக்கிறார்.

அண்மையில் கூட அவர் அரசியல் விவகாரம் தொடர்பாக தனது ரசிகர்களை கேரளாவில் சந்தித்தாகக் கூறப்பட்டது. இதை அறிந்து பதறிய நடிகர் அப்படி எந்த கூட்டமும் நடக்கவில்லை என்று அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் நடிகரின் பெயரில் ட்விட்டரில் கணக்கு உள்ளது. அதை அவரது ரசிகர்கள் தான் மெயின்டெய்ன் செய்து வருகின்றனர். அதில் லீடரை அடுத்த தலைவராக சித்தரித்து வாசகங்கள் வருகின்றன. இது நடிகர் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை. அவர் பிரச்சனை இன்றி இருக்க வேண்டும் என்றால் முதலில் இந்த கணக்கை அவர் கண்காணிக்க வேண்டும்.

கோவா பீச்சில் ராணாவுடன் கைகோர்த்து சுற்றிய திரிஷா

கோவா பீச்சில் ராணாவுடன் கைகோர்த்து சுற்றிய திரிஷா

சென்னை: நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் கோவா கடற்ரையில் சுற்றியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நடிகை திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலர்கள் என்று பல காலமாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அவர்களோ நாங்கள் வெறும் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். இதற்கிடையே திரிஷாவின் அம்மா தனது மகளுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்.

அண்மையில் துபாயில் நடந்த சிமா விருது விழாவில் திரிஷாவும், ராணாவும் ஓவர் நெருக்கமாக இருந்தது குறித்து ஊடகங்களில் செய்தி வந்தன. இந்நிலையில் திரிஷாவும், ராணாவும் கோவா கடற்கரையில் கைகோர்த்து நடந்த சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

மேலும் ஹோட்டல் விருந்து ஒன்றில் கலந்து கொண்ட பிறகு ராணா திரிஷாவை பத்திரிமாக அழைத்துச் செல்வது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரை அடுத்து செயலாளர் வீட்டில் 'குவா குவா'

சென்னை: நகைச்சுவை நடிகர் பரோட்டா சூரியின் மனைவி இன்று காலை ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அசால்ட்டாக பரோட்டா சாப்பிட்டு நம்மை அசர வைத்தவர் பரோட்டா சூரி. அவருக்கு வெண்ணிலா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சூரியின் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரை அடுத்து செயலாளர் வீட்டில் 'குவா குவா'

அவர் இன்று காலை அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்க செயலாளரான சூரிக்கு ஆண் குழந்தையும், முன்னதாக சங்க தலைவர் சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரி ஜில்லா, மான் கராத்தே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிங்கப்பூரில் சூர்யா என்ன செய்கிறார்?

சிங்கப்பூரில் சூர்யா என்ன செய்கிறார்?

சென்னை: நடிகர் சூர்யா நகைக் கடை ஒன்றை திறந்து வைக்க சிங்கப்பூர் சென்றுள்ளார்.

நடிகர் சூர்யா பிரபல நகைக் கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார். அந்த நகைக் கடை தனது கிளையை சிங்கப்பூரில் திறக்கிறது. இந்த பிரமாண்ட கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக சூர்யா சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அவர் தான் கடையை திறந்து வைக்கிறார். சூர்யா கௌதம் மேனன் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இதையடுத்து அவர் லிங்குசாமியின் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் உலகிலேயே முதன் முறையாக ரெட் டிராகன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் முதன் முறையாக சமந்தா ஜோடி சேர்கிறார். படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது.

'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம்

'உங்க புது சட்டம் அஜீத்துக்கும் சந்தானத்துக்கும் பொருந்தாதா?' - நடிகைகள் காட்டம்

நடிகைகள் பட விழாக்களுக்கு வரலேன்னா மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் நீங்கள், பட விழாக்கள் பக்கமே வராத நடிகர் அஜீத் மற்றும் சந்தானத்துக்கு மட்டும் பொருந்தாதா என கேள்வி எழுப்பியுள்ளனர் முன்னணி நடிகைகள்.

தமிழ் சினிமாவில் தாங்கள் நடித்த படங்களின் இசை வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட நாயகிகள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதானமாக எழுந்துள்ளது.

நாயகிகள் இல்லாததால் போதிய விளம்பரம் கிடைக்காமல் போவதால், அவர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ஆனால் படத்தில் நடிக்கத்தான் சம்பளமே தவிர, இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கல்ல. அந்த கால்ஷீட்டை நாங்கள் வேறு படத்துக்கு தரவேண்டியிருக்கிறது என நடிகைகள் தரப்பில் கூறிவந்தனர்.

இந்த நிலையில், விழாக்களில் கலந்து கொள்ளாத நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து கொள்வதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு நடிகைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க தனி சம்பளம் மற்றும் வந்து போக, தங்க ஆகும் செலவுகளை தயாரிப்பாளர்தான் ஏற்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் எங்களால் வரமுடியாது என்று கூறியுள்ளனர். இல்லாவிட்டால் தயாரிப்பாளர் பிடித்தம் செய்வதாகக் கூறும் 20 சதவீதத்தை தங்கள் சம்பளத்தில் ஏற்ற வேண்டிய நிலையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்கியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்தார்.

'ஒரு கோடி சம்பளம் கேட்டதற்கு பதில் 1 கோடியே இருபது லட்சம் என சம்பளம் பேச வேண்டியதுதான்,' என சக நடிகைகள் கமெண்ட் அடித்ததாக அவர் தெரிவித்தார்.

அஜீத், சந்தானத்தையும் கூப்பிட வேண்டியதுதானே...

"நடிகைகளிடம் மட்டும் இவ்வளவு கெடுபிடி காட்டும் தயாரிப்பாளர் சங்கம், பட விழாக்கள், பிரஸ் மீட்டுகள், விளம்பர நிகழ்ச்சிகள் என எதற்குமே எட்டிப் பார்க்காத அஜீத், சந்தானம் போன்றவர்களை மட்டும் விட்டுவிடுவது ஏன்? அவர்கள் மட்டும் விதிவிலக்கா... அவர்கள் சம்பளத்தில் 20 சதவீதம் குறைக்கத் தயாரா? இவர்களைப் போலத்தான் ஒரு நடிகை கலந்து கொள்ளாமல் போக ஆயிரம் காரணங்கள் உள்ளன", என்றும் குமுறியுள்ளனர் நடிகைகள்.

படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே, படத்தின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகள் எதற்கும் தன்னை அழைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, அதை எழுத்துப்பூர்வமாகவும் எழுதி வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதெல்லாம் சந்தானமும் அஜீத் வழியைத்தான் பின்பற்றுகிறாராம்!

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அஜீத் நடிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜீத்.

அஜீத்- கவுதம் மேனன்- ஏஎம் ரத்னம் புதிய படம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இப்போது வீரம் படம் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார்.

நாம் முன்பே குறிப்பிட்டது போல, இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின் சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜீத்.

இயக்குபவர் கவுதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இன்று அஜீத் சார்பில் அவரது பிஆர்ஓ வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீசத்யசாய் நிறுவனத்துக்காக அஜீத் நடிக்கும் படத்தை இயக்க, இன்று கவுதம் மேனன் கையெழுத்திட்டார் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கவுதம் மேனனும் அஜீத்தும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இணையவிருந்தனர். படத்தின் அறிவிப்பு வந்த நிலையில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்தனர். இப்போது மீண்டும் அந்த வாய்ப்பு கூடிவந்துள்ளது.

ஆரம்பம் படத்தைத் தயாரித்தாலும், கடன்கள் முழுமையாக அடையாமல் ஏஎம் ரத்னம் சிரமப்படுவதைப் பார்த்து அவருக்கு மீண்டும் படம் நடித்துத் தருகிறார் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் நடிகரின் ரகளையால் அலறிய ஏழு நட்சத்திர ஹோட்டல்!

இளம் நடிகர் ஒருவரின் ரகளையால் கலகலத்துப் போயிருக்கிறது எம்ஆர்சி நகரில் உள்ள அந்த புத்தம் புதிய ஏழு நட்சத்திர ஹோட்டல்.

வரிசையாக வெற்றியை ருசித்து அடுத்து ரம்மி அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நடிகர் அவர். ஆனால் மனிதர் உற்சாக பானத்தில் இறங்கிவிட்டால் அவ்வளவுதான், ரகளையில் இருக்கும் ஏரியாவையே ரணகளமாக்கிவிடுவார்.

வெளிநாடுகளுக்குப் போனாலோ கேட்கவே வேண்டாம். நள்ளிரவு, அதிகாலை என்ற நேரம் காலமெல்லாம் கிடையாது.

சமீபத்தில் ஒரு சேனலின் தொடக்கவிழா விருந்துக்கு அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார் நடிகர். விருந்து ஆரம்பித்ததிலிருந்தே சரக்கில் மூழ்க ஆரம்பித்தவர், ஒரு கட்டத்தில் ஹோட்டல் ரிசப்ஷனில் வைத்தே சாப்பாடு, சிக்கன் சாப்பிட்டாராம்.

போதையின் உச்சத்தில் கையிலிருந்தவற்றையெல்லாம் ரிசப்ஷன் முழுக்க வீச ஆரம்பிக்க திணறிப் போனார்களாம் ஹோட்டல்காரர்கள்.

அவரை அங்கிருந்து வெளியேற்றினால் போதும் என்ற நிலைக்குப் போய்விட்டதாம் நிலைமை.

மெகா கோடீஸ்வரர் ஆன ஷாரூக் கான்! சொத்துமதிப்பு ரூ. 2500 கோடி

மும்பை: நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் இடம் பிடித்துள்ளார்.

ஹரூ‌ன் இந்தியா நிறுவனம் 1800 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் ஷாரூக் கான் 114வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மெகா கோடீஸ்வரர் ஆன ஷாரூக் கான்! சொத்துமதிப்பு ரூ. 2500 கோடி

ஷாரூக் கானிடம் 2500 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் என்ற பெயரில் சினிமா மற்றும் விளம்பர தயாரிப்பு நிறுவனம் நடத்தும் ஷாரூக்கான், திரைப்படங்கள், விளம்பரங்களில் நடித்தும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பெறுகிறார்.

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களிடம் மட்டும் 15,50,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மும்பையில்தான் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் 33 சதவிகிதம் பேர் இருக்கின்றனராம். டெல்லியில் 16 சதவிகிதம் பேரும், பெங்களூருவில் 11 சதவிகிதம் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

சென்னை: காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் அகற்றக்கூடாது என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காமராஜர் சாலையில் காந்தி சிலை எதிரில் சிவாஜி கணேசன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஒருபக்கம் வரும் வாகனங்களை மறைப்பதாகவும் கூறி, அச்சிலையை அகற்ற உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

இதுகுறித்து விளக்கம் தருமாறு உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொருளாளர் வி சேகர், செயலாளர் ஆர்கே செல்வமணி ஆகியோர் விடுத்துள்ள போக்குவரத்து காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் தமிழகத்தின் தவப்புதல்வன். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அரிய சாதனைகள் புரிந்தவர் என்பது உலகறியும்.

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனையும் வ உ சிதம்பரம் பிள்ளையையும் உலக மக்கள் கண்முன் நடமாட வைத்து விருதுகள் பல பெற்றவர்.

தமிழர் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும்.

அவரது திரு உருவச் சிலையை அங்கிருந்து அகற்றுவது நம் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றக்கூடாது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

-இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'நல்லாத்தானே இருக்க.. ஐந்நூறு ஆயிரத்துக்கே போயேன்!'- கொதிக்க வைத்த சந்தானம் டயலாக்

'நல்லாத்தானே இருக்க.. ஐந்நூறு ஆயிரத்துக்கே போயேன்!'- கொதிக்க வைத்த சந்தானம் டயலாக்

சென்னை: என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில், பெண் ஊழியர் ஒருவரை, 'நல்லாத்தானே இருக்க.. ஐநூரு ஆயிரத்துக்கே போயேன்' என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நேற்று முன்தினம் என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் விளம்பரப் படப்பிடிப்புக் காட்சி ஒன்று வருகிறது.

அதில் சந்தானத்திடம் ஒரு பெண் வந்து 'அஞ்சு பத்துக்குப் போகட்டுமா' என்று அனுமதி கேட்கிறார்.

உடனே சந்தானம் டைமிங் என்ற பெயரில், 'ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே..? ஆயிரம் ஐநூறுக்கே போலாமே!" என்று கமெண்ட் அடிக்கிறார்.

இந்தக் காட்சி பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தக் காட்சியை நீக்காவிட்டால், தணிக்கைச் சான்றிதழ் தரக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ள மகளிர் அமைப்பினர், இதுகுறித்து தணிக்கை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் அகமது தரப்பில் விசாரித்தபோது, அந்த காமெடி பகுதியை எழுதியவர் சந்தானம்தான். அவரைத்தான் கேட்க வேண்டும் என்றனர்.

நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

நடிகைகளின் சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம்- கேயார் அறிவிப்பு

சென்னை: படங்களின் விழாக்கள், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இனி அவர்களின் சம்பளத்தில் 20 சதவீதம் வரை பிடித்துக் கொள்ளப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீப காலமாகவே, படங்களின் விழாக்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கதாநாயகிகள் மட்டும் பங்கேற்காமல் தவிர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் புலம்புகின்றனர்.

ஆல் இன் ஆல் அழகுராஜா, கோலாகலம், உயிர்மொழி போன்ற படங்களின் விழாக்களில் தொடர்ந்து அவற்றின் நாயகிகள் தவிர்த்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, விழாக்களுக்கு வராத நடிகைகள் சம்பளத்தில் 20 சதவீதத்தை பிடித்தம் செய்து வைத்துக் கொள்வது என்றும் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் நடிகைகளுக்கு மட்டும் அந்த தொகையை திருப்பி கொடுப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் ரூ.20 லட்சத்தை குறைத்து வாங்க வேண்டி இருக்கும். பட விழாக்களுக்கு வராமல் போனால் அந்த தொகையை இழக்க வேண்டி வரும்.

இப்போது த்ரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, அமலா பால் போன்ற முன்னணி நாயகிகள் நடித்து வரும் பெரிய படங்களில், அவர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தில் 20 சதவீதத்தை படம் வெளியாகும் வரை தராமல் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூறுகையில், "நடிகைகள் படங்களின் பாடல் வெளியீட்டு விழாவுக்கும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கும் வருவது இல்லை என்று தயாரிப்பாளர் பலர் புகார் அளித்துள்ளனர். எனவே நடிகைகளுக்கு இனி முழு சம்பள தொகையையும் கொடுப்பது இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு எடுத்து உள்ளது.

20 சதவீதம் சம்பளத்தை பிடித்தம் செய்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த பிறகு அதில் 10 சதவீதத்தை கொடுப்பது என்றும், மீதி 10 சதவீதத்தை படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு கொடுப்பது என்றும் முடிவு எடுத்துள்ளோம்.

நடிகைகளை அவர்களின் படவிழாக்களுக்கு போக வேண்டாம் என தடுக்கும் மேனேஜர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.