சென்னை: தமிழகத்தின் தலைநகர் பெங்களூர் என்று சர்ச்சை மன்னன் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மறுபெயர் சர்ச்சை மன்னன். எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது இடக்குமுடக்காக கூறுவது, ட்வீட் செய்வதுமாக உள்ளார். அவர் வாயைத் திறந்து பேசினாலும் சரி, படம் எடுத்தாலும் சரி சர்ச்சையை கிளப்பிவிடுவார் என்று கூறும் அளவுக்கு உள்ளார்.
இப்படி வழிய சர்ச்சையை கிளப்புபவர் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பு பற்றி மட்டும் கருத்து தெரிவிக்காமலா இருப்பார். இதோ அவர் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தீர்ப்பு பற்றி கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தற்போது தமிழகத்தின் தலைநகரமாக பெங்களூரும், தலைமைச் செயலகமாக பரப்பன அக்ரஹாராவும் மாறியிருப்பது எனக்கு பிடித்துள்ளது... இந்தியா முழுவதும் ஒன்று என்பதற்கு இதுவே ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment