சென்னை: தெய்வத்தை மனிதன் தண்டிக்க முடியுமா.. முடியாது சார். அப்படித்தான் ஜெயலலிதாவுக்கான தண்டனையும். அவர் மீண்டு வருவார், சாதனை படைப்பார். பிரதமர் அளவுக்கு உயர்வார்.. இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் இடையில் செய்தியாளரிடம் பேசுகையில், வஞ்சக சூழ்ச்சி காரணமாக அம்மாவை கைது செய்து உள்ளே வைத்துள்ளனர். தர்ம தேவதைக்கே அநீதியா.. என்ன சார் இது. இது அநியாயம் சார்.
அவரது வளர்ச்சி சூழ்ச்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை சார். அவரை ஜெயிக்க முடியவில்லை. தாண்டிப் போக முடியவில்லை. வெறுப்பும், வயிற்றெரிச்சலும்தான் இதற்குக் காரணம்.
அவர் தர்மதேவதை. தெய்வத்தை எப்படி மனிதன் தண்டிக்க முடியாதோ அதேபோலத்தான் ஜெயலலிதா அவர்களையும் தண்டிக்க முடியாது.
இதையெல்லாம் தகர்த்தெறிந்து மீண்டும் அவர் முதல்வராக வருவார். இவ்வளவு பேருடைய பிரேயரும் அவரை வெளியில் கொண்டு வந்தே தீரும். அவர் சாதித்துத்தான் ஆவார். பிரதமர் ஆவார். இது சத்தியம் சத்தியம் சத்தியம் என்று கூறினார் தேவா.
Post a Comment