சென்னை: இது தர்மதேவதைக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நடிகரும், இயக்குநருமான மனோபாலா கூறியுள்ளார்.
ஜெயலலிதா கைதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று திரையுலகின் உண்ணாவிரதம் நடந்தது. இதில் திரையுலகின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குநருமான மனோபாலா கூறுகையில், தர்மதேவதைக்கு இழைக்கப்பட்ட அநீதி இது. இதைப் பார்த்து அனைவரும் கொதித்துப் போயுள்ளோம்.
அம்மா மீண்டும் முதல்வராக வருவார், மீண்டும் பொறுப்பேற்பார். இதை விட வேறு பெரிய உயரத்திற்கு போகப் போகிறார் பாரதப் பிரதமராக உயர்வார். இந்த நாட்டையே முன்னேற்றிச் செல்வார். இன்று பிற்பகலுக்குள் ஒரு நல்ல முடிவை நாங்கள் பெங்களூரிலிருந்து எதிர்பார்க்கிறோம்.
இந்த வேதனையை எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றார் மனோபாலா. ஆனால் பிற்பகலில் ஜெயலலிதாவுக்கு இன்று ஜாமீன் இல்லை என்ற முடிவே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment