பொழுதுபோக்கில் புதிய பரிமாணத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
மணலைக் குவித்து வைத்து உட்கார்ந்து படம் பார்த்த காலம் போய், இன்று படுத்துக் கொண்டே படம் பார்க்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டது.
இந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, திரையரங்குகள் 3 டிக்கு மாற ஆரம்பித்துள்ளன.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் தமிழகம் முழுவதும் மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை உருவாக்கி வருகிறது. சிறிய திரையரங்குகளாக இல்லாமல், முன்புபோலவே, 500 முதல் 1000 பேர் வரை அமரும் தியேட்டர்களை, அனைத்து நவீன வசதிகளோடும் உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம்.
சென்னை வில்லிவாக்கத்தில்தான் இவர்களின் முதல் தியேட்டர் உதயமானது. இங்கே 5 ஸ்கிரீன்கள் உள்ளன.
அடுத்ததாக இரண்டாவது தியேட்டரை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலூரில் பெரிய வணிக வளாகத்துடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஐந்து அடுக்குகள் கொண்ட இந்த மல்டி பிளக்சில் மேல்தளத்தில் நான்கு அதிநவீன தியேட்டர்கள் உள்ளன. மொத்தம் 3000 இருக்கைகள்! இந்த 4 தியேட்டர்களுமே 3 டி வசதி கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு.
செவ்வாய்க்கிழமை இந்த தியேட்டர்களை நடிகர்கள் ஜெயம்ரவி, நந்தா, சன் பிக்சர்ஸ் சக்சேனா ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
தொழில்நுட்பப் பூங்காக்கள் நிரம்பி வழியும் இந்தப் பகுதி மக்கள் நல்ல தியேட்டருக்குப் போக வேண்டுமென்றால் ஈசிஆரில் உள்ள மாயாஜாலுக்கு செல்லவேண்டியிருந்தது. அந்தக் குறையை போக்கிவிட்டார் கல்பாத்தி!
Post a Comment