பாலச்சந்தருக்கு பால்கே விருது
4/30/2011 10:57:15 AM
4/30/2011 10:57:15 AM
தாதா சாகேப் பால்கே விருதுக்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தரை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளாக திரைப்பட இயக்குனராகவும் வசன கர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் புகழ்பெற்று விளங்குபவர் கே.பாலச்சந்தர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். இதை கவுரவிக்கும் வகையில் தாதே சாகேப் பால்கே விருது பாலச்சந்தருக்கு வழங்கப்படுகிறது. இவருக்கு தங்க தாமரை விருது, ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளன. கடந்த 87ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தவிர பல்வேறு மத்திய, மாநில அரசு விருதுகளையும் பாலச்சந்தர் பெற்றுள்ளார்.
Post a Comment