பாலாவின் ‘அவன் இவன்’ ஸ்பெஷல் ஷோ
4/29/2011 2:00:01 PM
பாலாவுக்கு பாலுமகேந்திரா எப்போதுமே ஸ்பெஷல். குரு என்பதைத் தாண்டி அப்பா ஸ்தானம். அவரைவிட திருமதி பாலுமகேந்திரா… அகிலா அம்மா மிகப் பிரதானம். அம்மா மாதிரி. தனது குழந்தைக்கும் அவரது பெயர்தான் வைத்திருக்கிறார். அவன் இவன் படம் தயாரானதும் அகிலா அம்மாவுக்குதான் முதலில் திரையிட்டுக் காட்டியிருக்கிறார் பாலா. அவரது முந்தையப் படங்களின் இருண்மையான உலகை செல்லமாக கண்டித்தவர்களில் இவரும் ஒருவர். சரி, அவன் இவன் எப்படி? இறுதியான சில காட்சிகள் தவிர முழுப் படத்தையும் சிரித்தபடியே ரசித்தாராம். அந்தளவுக்கு நகைச்சுவை. அவருக்குப் பிடித்தால் எல்லோருக்கும் பிடித்த மாதிரி என ரிலாக்ஸாகியிருக்கிறார் பாலா.
Source: Dinakaran
Post a Comment