கே.வி.ஆனந்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!
4/29/2011 12:42:01 PM
தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ஜீவாவின் தாய், ‘கோ’ படத்தில் தன் மகன் ஜீவாவின் அழகை பார்த்து பூரித்துப் போனாராம். ஜீவா நடித்த ‘கோ’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் தான் நடித்த ‘கோ’ படத்தை தன் குடும்பத்தோடு பார்த்த ஜீவா, செய்தியாளர்களை சந்தித்த போது, பேச்சில் பாதி நேரம் கே.வி.ஆனந்துக்கு நன்றி சொன்னார். முக்கியமாக தன்னை அழகாக காண்பித்ததற்கு. தாடியும் அழுக்கு பல்லுடனும் மகனை பல படங்களில் பார்த்த ஜீவாவின் தாய் இந்தப் படத்தைப் பார்த்து உண்மையிலேயே பூரித்துப் போனாராம். மேலும் கே.வி.ஆனந்துக்கு, ஜீவாவின் அம்மா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் கூறினாராம்.
Source: Dinakaran
Post a Comment