காதலருடன் தனது பிறந்த நாளை கேரளாவில் நேற்று கொண்டாடினார் திவ்யா. திவ்யாவுக்கு நேற்று 29வது பிறந்த நாள். இதை தனது காதலர் ரபேலுடன் கொண்டாட விரும்பினார் திவ்யா. இதையடுத்து கடவுளின் தேசமான கேரளாவுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அங்கு பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவர் கூறியதாவது: கோவாவை விட கேரளாதான் மிகவும் அழகானது. அதனால் எனது இந்த பிறந்த நாளை அங்கு கொண்டாட முடிவு செய்தேன். இன்னும் சில நாட்கள் கேரளாவில் ஓய்வெடுக்க இருக்கிறேன். இப்போது கன்னடத்தி உபேந்திராவுடன் 'கடரி வீரா' என்ற படத்தில் நடிக்கிறேன். 2டி மற்றும் 3டியில் இந்தப் படம் உருவாகிறது. ஒவ்வொரு ஷாட்டும் இரண்டு முறை எடுக்கப்படும். இதில் நடிப்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இதில் இந்திரக் கடவுளின் மகளாக நான் நடிக்கிறேன். இதற்கான மேக்கப் மற்றும் காஷ்ட்யூமிற்கு பல மணிநேரங்கள் ஆகும். இதில் எமனாக அம்ப்ரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு படமும் கன்னடத்தில் சில படங்களும் நடிக்கிறேன்.
Post a Comment