நடிகைகளின் தற்கொலைகளை மையமாகக் கொண்ட ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’

|


தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி விஜி, மோனல் உள்ளிட்ட நடிகைகளின் தற்கொலைகளை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம்தான் சோனியா அகர்வால் நாயகியாக நடித்துள்ள “ஒரு நடிகையின் வாக்குமூலம்”. இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளாக இருந்த “பசி” ஷோபா, சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, மோனல், திவ்யாபாரதி, உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டனர். பிரதீஷா கொலை செய்யப்பட்டார். இதன் உண்மைக் காரணங்களை மையமாக வைத்து ஒரு நடிகையின் கதை என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகைகளுக்கு சமர்ப்பணம்

இத்திரைப்படம் குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறியதாவது:

நடிகைகளுக்கு அன்பு, குடும்ப பாசங்கள் கிடைப்பது இல்லை. எனவே காதல் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை வரை செல்கிறார்கள். சிலர் மது பழக்கத்துக்கு அடிமையாகிறார்கள். ஏக்கம், விரக்தி போன்றவற்றால் தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுக்கு இப்படத்தை சமர்ப்பணம் செய்கிறேன் என்றார்.

இத்திரைப்படத்தில் இயக்குநர்கள் விக்ரமன், ஏ. வெங்கடேஷ், ராசு மதுரவன், செல்வபாரதி, சுராஜ் ஆகியோர் இயக்குனர்களாகவே நடித்துள்ளனர். சதன், நிக்கோல், ஜோதிலட்சுமி, மனோபாலா, கஞ்சா கருப்பு, கோவை சரளா, யோகி தேவராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

புன்னகைப் பூ கீதா தயாரித்துள்ள இப்படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்கி உள்ளார். விரைவில் வெளிவர உள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Post a Comment