தமிழ் சினிமா ரொம்பவே மாறிடுச்சி.. இனி நல்ல வாய்ப்பு வந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன். இல்லாவிட்டால் டிவியே போதும், எனகிறார் நடிகை தேவயானி.
கும்பகோணத்தில் படப்பிடிப்புக்காக வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், "சினிமாவில் முன்பு பிஸியாக இருந்தேன். தற்போது 'திருமதி தமிழ்' என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறேன். தற்கால சமுதாய நடப்புகளை வெளிப்படுத்தும் கதை இது.
மேலும் பல தமிழ்படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால் நான் தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்வதில்லை.
தமிழ் சினிமா முன்ன மாதிரி இல்லை. ரொம்பவே மாறிடுச்சி. புதிய படங்களின் தயாரிப்பு மற்றும் கதையம்சம் இப்படி மாறிப்போகும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
ஏதாவது நல்ல கதையம்சங்களுடன் உள்ள படங்கள் வந்தால் நான் நிச்சயம் ஒப்புக் கொள்வேன்.
திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது.
நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள். சின்னத்திரையில் அதிக கவனம் செலுத்தக் காரணம், இதில் உள்ள வசதி. எக்கச்சக்க ரசிகர்கள். சினிமாவில் சொல்ல முடியாத பல விஷயங்களை சின்னத் திரையில் சொல்ல முடிகிறது," என்றார்.

Post a Comment