பாலிவுட் நடிகர் சைப் அலி கானும், கரீனா கபூரும் நெடுங்காலமாக காதலர்களாகவே வலம் வந்துள்ளனர். அவர்கள் என்னவோ திருமணத்தை பற்றி கண்டு கொள்ளாவிட்டாலும் ஊடகங்களும், பாலிவுட்டும் அவர்கள் எப்பத்தான் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.
முதலில் கடந்த பிப்ரவரியில் திருமணம் என்றார்கள், அடுத்து ஏப்ரலில் என்றார்கள், பிறகு மெதுவாக பார்க்கலாம் என்றார்கள். தற்போது ஒரு வழியாக அக்டோபர் 16ம் தேதி பட்டோடியில் திருமணம் நடக்கிறது என்று சைபின் தங்கை சோஹா அலி கான் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
இம்முறை நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நம்புவோமாக. சைப் அலி கான் 1991ம் ஆண்டில் அம்ரிதா சிங்கை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
கரீனா கபூர் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரை 3 ஆண்டுகளாக காதலித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment