தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா, துபாயில் நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் இந்திப் படங்களுக்கு மட்டுமே விருது விழா நடைபெற்று வருகிறது. தென்னிந்திய படங்களுக்கு நடத்தப்படவில்லை. அதை மாற்றும் விதமாகவும் தென்னிந்திய படங்களை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் விதமாகவும், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா (சிமா) துபாயில் நடத்தப்படுகிறது. வரும் 21 மற்றும் 22-ம் தேதிகளில் நடக்கும் இவ்விழாவுக்கு தினகரன் நாளிதழ் பிரின்ட் மீடியா பார்ட்னராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்பட உலகினர் கலந்துகொள்கின்றனர். நான்கு மொழிகளிலும் 2011-ல் வெளியான படங்களிலிருந்து சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர், பாடகி உட்பட 19 பிரிவுகளில் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை இணையதளம் மூலம் ரசிகர்கள் தேர்வு செய்வார்கள். அதிலிருந்து சிறப்பு ஜூரிகள் இறுதியாக முடிவு செய்வார்கள். மேலும் பிரபல நடிகர், நடிகைகள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட இருக்கிறது. விழாவின் முதல் நாளன்று நான்கு மொழிகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களின் பிரிமியர் நிகழ்ச்சி நடைபெறும். அந்தந்த படங்களின் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. விழா நிகழ்ச்சிகளை நடிகர் மாத வன், நடிகைகள் லட்சுமி மஞ்சு, பார்வதி ஓமனக்குட்டன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள்.


 

Post a Comment