கிரிக்கெட் கதையா? மறுக்கிறார் மிஷ்கின்

|

i never involved in cricket script

கிரிக்கெட் பற்றிய கதையை இயக்குவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று இயக்குனர் மிஷ்கின் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: 'முகமூடி'க்குப் பிறகு கிரிக்கெட் என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. அதை நான் தயாரிக்கப்போவதாகவும் கூறுகிறார்கள். அது தவறு. எனது அடுத்த படம் கிரிக்கெட் இல்லை. அதை எப்போது தேவையோ அப்போது செய்வேன். இப்போதைக்கு கதை எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்து இயக்கும் படத்தில் பிரபலமான ஹீரோ நடிக்கலாம். தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவே இந்த விளக்கம். மற்றபடி அடுத்த படம் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு மிஷ்கின் கூறினார்.
 

Post a Comment