உடல் வயதாகிவிட்டாலும் மனதளவில் இளமையாகவே இருக்கிறேன் என்று பிரதாப் போத்தன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில், '22 பீமேல் கோட்டயம்' என்ற படத்தில் நடித்துள்ளேன். ரீமா கல்லிங்கல், பகத் பாசில் போன்ற இன்றைய இளம் நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஷிக், லால் ஜோஷ், டி.வி.ராஜீவ் குமார் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது மகிழ்வாக உணர்கிறேன். உடலளவில் வயதாகிவிட்டாலும் மனதளவில் இளமையாகவே இருக்கிறேன். நான் இயக்கிய படங்களை பார்த்தால் அடுத்த காலகட்டத்து படமாகவே இருக்கும். அதனால் இன்றைய சினிமாவோடு நானும் ஒத்துப்போகிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீஎன்ட்ரி ஆகும்போது நெகட்டிவ் பாத்திரத்தில் ஏன் நடித்தீர்கள் என்கிறார்கள். நான் கேரக்டரைத்தான் பார்க்கிறேன். நல்லதா கெட்டதா என்பதை பார்ப்பதில்லை.
Post a Comment