
சென்னை : ஸ்ரீபண்ணாரி அம்மன் புரொடக்ஷன் தயாரிக்கும் படம், 'உனக்கு 20 எனக்கு 40'. இயக்கி ஹீரோவாக நடிக்கிறார் கே.பி.எஸ்.அக்ஷய். மற்றும் ஷாலினி, எஸ்.சிவா, அம்ருதா, சிங்கம்புலி, வையாபுரி, வடிவுக்கரசி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.செல்வம். இசை, ஜோய் மேக்ஸ்வெல். பாடல்கள்: தமிழமுதன், மா.ராஜேஷ். படம் பற்றி அக்ஷய் கூறும்போது, 'ஷாலினி, அம்ருதா இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் தோழிகள். ஷாலினியின் தந்தையை அம்ருதா காதலிக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் கதை' என்றார்.
Post a Comment