ஜூன் 1-ல் கல்யாணியை கைப்பிடிக்கும் 'இம்சை அரசன்'!

|

Director Simbu Devan Wed Kalyani
இம்சை அரசன் 23-ம் புலிகேசியைத் தந்த இளம் இயக்குநர் சிம்புதேவனுக்கு நாளை மறு நாள் திருமணம் நடக்கிறது.

எம்பிஏ பட்டதாரியான கல்யாணி என்பவரை அவர் கைப்பிடிக்கிறார்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம் ஆகிய மூன்று படங்களை இயக்கியுள்ளார் சிம்பு தேவன். பத்திரிகையாளராக இருந்து இயக்குநரானவர். அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக உள்ளார். இம்சை அரசனின் இரண்டாம் பாகத்தை வடிவேலுவை வைத்து இவர் இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன.

சிம்பு தேவனுக்கு ஜுன் 1ம் தேதி மதுரையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.

எம்பிஏ பட்டதாரியான கல்யாணி என்பவரை சிம்பு தேவன் மணமுடிக்க உள்ளார்.

திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் கவனிக்க, சென்னையில் திரையுலகினரை அழைக்கும் பணியில் மும்முரமாக உள்ளார் சிம்புதேவன்.
Close
 
 

Post a Comment