3 டியில் கலக்க வருகிறது 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' - ஜூன் 29-ல் இந்தியாவில் ரிலீஸ்!

|

Spider Man S Fourth Edition Hit India On June 29th
குழந்தைகளின் உலகில் கொடி கட்டிப் பறக்கும் சூப்பர் ஸ்டாரான ஸ்பைடர் மேன் வரிசையில் அடுத்த படம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகிறது.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' ன தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக, முன்பு சிறுவர்களாக இருந்து இப்போது பெரியவர்களாவிட்டவர்களும் காத்திருப்பதுதான் ஆச்சர்யம்!

கடந்த மூன்று படங்களில் பீட்டர் பார்க்கர் மற்றும் ஸ்பைடர்மேனாக கலக்கிய டோபே மாகுயர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் ஆண்ட்ரூ கார்பீல்டு (Andrew Garfeld) நாயகனாக நடித்துள்ளார். எம்மா ஸ்டோன் (Emma Stone) முக்கிய வேடமேற்றுள்ளார்.

அமேஸிங் ஸ்பைடர் மேனில் நம் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கியிருப்பவர் மார்க் வெப்.

உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருக்கும் ஒருவனுக்கு சூப்பர் சக்திகள் வருவதும் வளர்ச்சி பெற்று விஸ்வரூபம் எடுப்பபதைப் பற்றிய கதைதான். அமேஸிங் ஸ்பைடர் மேன்.

உயர்நிலைப் பள்ளியொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட பீட்டர் பார்க்கர் இளம் வயதிலேயே பெற்றோரால் கைவிடப்பட்டவன். அவன் தனது அங்கிள் பென் மற்றும் ஆண்டி மேயுடன் வளர்கிறான். அவனது கடந்த கால வாழ்க்கை புதிராக இருக்கிறது. அவனுடைய நேசத்துக்குரியவள் க்வன் ஸ்டேசி. இரண்டையுமே தேடி மீட்க அவனுக்கு விருப்பம். இதற்காகவே நேரத்தைச் செலவிடுகிறான். அவனுக்கு ஒரு ஃப்ரீப் கேஸ்' அதாவது ஒரு சிறிய பெட்டி கிடைக்கிறது. அந்தப் பெட்டியில்தான் அவன் அப்பாவுடைய பல மர்மங்களும் அடங்கியுள்ளன.

அந்த பெட்டியின் மூலம் அப்பாவின் பழைய கூட்டாளியை அடைகிறான். அவர்தான் டாக்டர் கான்னரஸ். அப்பா பற்றிய ரகசியம் தெரிந்துவிடுகிறது. ஆனால் அதன் பிறகு பீட்டர் பார்க்கரின் விதியே மாறிவிடுகிறது. அவன் ஸ்பைடர் மேனாக மாறுகிறான். அதற்குப் பிறகு அவன் எடுக்கும் அவதாரங்கள், அட்டகாசங்கள், சாகசங்கள்தான் 'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' படம்.

இப்படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சல்ஸில் டிசம்பர் 2010ல் தொடங்கியது. ஏப்ரல் 2011ல் படப்பிடிப்பு முடித்து, படப்பிடிப்புக்கு பிந்தைய மெருகேற்றும் பணிகள் தொடங்கின.

'தி அமேஸிங் ஸ்பைடர் மேன்' இந்தக் கோடைக்கால கொண்டாட்டமாக ஜூனில் வெளிவரவுள்ளது. அதுவும் 3டி பரிமாணத்தில்!

கொலம்பியா பிக்சர்ஸின் தயாரிப்பு இது. இப்படம் தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று இந்திய மொழிகளில் வெளிவருகிறது. இந்தியா முழுவதும் 1000த்திற்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இந்தியாவில் உள்ள மார்க்கெட் மதிப்பைக் கருத்தில் கொண்டு, ஜூன் 29ம் தேதி, ஒரு வாரம் முன்பே ரிலீஸ் ஆகிறது. மற்ற நாடுகளில் ஜூலை 3 ல்தான் ஸ்பைடர்மேனைப் பார்க்க முடியும்!

Close
 
 

Post a Comment