கமலிடம் சபாஷ் வாங்கிய கள்ளத் துப்பாக்கி பாடகர்

|

Kamal Praises Debut Item Singer
கமல் தனது உதவியாளர் ரவிதேவனின் கள்ளத்துப்பாக்கி படத்தில் பெண் குரலில் குத்துப் பாட்டு பாடிய பாடகரை பாராட்டியுள்ளார்.

கமல் ஹாசனும் சரி, ரஜினிகாந்தும் சரி எந்த திறமைசாலிகளையும் பாராட்ட தயங்குவதில்லை. கமலின் உதவியாளர் ரவிதேவன் கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை எடுத்துள்ளார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த படத்தில் மிட்நைட் கல்லூரி நான், என் கில்லாடி ஸ்டூடண்ட் யாரு என்ற குத்துப்பாடல் உள்ளது. அதை கேட்பவர்கள் ஆஹா யார் இந்த பாடகி இவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அதைப் பாடியது பாடகியல்ல புதுமுக பாடகர் கரந்தை பி. ராஜசேகரன்.

தஞ்சையில் சந்தோஷ் இசைக்குழு வைத்துள்ள ராஜசேகரன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ராத்திரி நேரத்து பூஜையில் பாடலை பெண் குரலில் பாடி அசத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த ரவிதேவன் அவரை தொடர்பு கொண்டு தனது படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்துள்ளார். பெண் குரலில் படத்தில் பாடுவதா என்று தயங்கிய அவரை அவரது குடும்பத்தினர் ஊக்கப்படுத்தி பாட வைத்துள்ளனர்.

அவரும் சரி என்று பாடினார். அந்த பாட்டை கேட்ட கமல் ஹாசனுக்கு குரல் பிடித்துப் போகவே ராஜசேகரனை அழைத்து மனதாரப் பாராட்டினாராம். ராஜசகேரனுக்கோ கமல் பாராட்டியவுடன் கையும் ஓடவில்லை, கால் ஓடவில்லை. இன்ப அதிர்ச்சியில் அப்படித் தான் இருக்கும்.
Close
 
 

Post a Comment