சத்யானந்தா படத்துக்கு தடையை நீக்கக் கோரி வழக்கு

Case Revoke Ban On Sathyananda Movie

நித்யானந்தா - நடிகை ரஞ்சிதா விவகாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வந்த சத்யானந்தா என்ற கன்னடப் படத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தத் தடையை நீக்கும் முயற்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.

சத்யானந்தாவின் சிறுவயது வாழ்க்கை, ஆன்மீகத்துக்கு மாறிய சூழல், ஆசிரமம் மற்றும் அதற்கு பிராஞ்சுகள் ஆரம்பித்தது, கதவைத் திற காற்று வரட்டும் என உபதேசங்களைத் தொடங்கி, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டது, கடைசியில் நடிகையுடன் உல்லாசமாக இருந்து கம்பி எண்ணியது போன்றவற்றை நிகழ்வுகளை இந்தப் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளனர்.

இதுகுறித்து கேள்விப்பட்டதுமே தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த மனுவை நீதி்மன்றம் விசாரித்து சத்யானந்தா படத்துக்கு தடை விதித்தது.

தடையை நீக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடிப்பதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சிகள் அனைத்துக்குமே ஆதாரங்கள் உள்ளன. மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மைகள் அவை. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு நிச்சயம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் என்கின்றனர் சத்யானந்தா குழுவினர்.

 

கேரள தொழிலதிபருடன் காதலா? - ஓவியா விளக்கம்!

Oviya Denies Love Affair   

கேரள தொழிலதிபரை காதலிப்பதாக தன்னைப் பற்றி வரும் தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.

களவானி படம் மூலம் பிரபலமான ஓவியா, கலகலப்பு மூலம் முன்னணி நடிகையாக உள்ளார்.

ஓவியா கேரளாவைச் சேர்ந்தவர். தமிழில் இப்போது பிஸி நடிகையாக மாறி வருகிறார். இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்று கிசுகிசு பரவ ஆரம்பித்துள்ளது.

அனன்யா பாணியில் தன்னைவிட ரொம்ப வயதான ஒருவரை அவர் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் கூறப்பட்டது.

இப்போது இந்த செய்திக்கு அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ஓவியா.

அவர் கூறுகையில், "சினிமாவில் இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறேன். அதற்குள் காதல் என்று எழுதுவது தேவையற்றது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. காதலிப்பதற்கெல்லாம் ஏது நேரம்... அவ்வளவு பிஸி. இப்போதைக்கு முழுக்கவனமும் சினிமாவில்தான். இன்னும் திருமணம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை", என்றார்.

 

கோச்சடையானில் 42 ஓவியக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு!

42 College Students Get Break Kochadaiyaan   

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பணியாற்ற கல்லூரி மாணவர்கள் 42 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே அரசின் ஓவியம் மற்றும் நுண் கலைக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்கள்.

பாரிமுனையில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் 42 பேரை நேரடியாக தேர்வு செய்த இயக்குநர் சௌந்தர்யா, அவர்களை கலை இயக்குநர் வேலுவின் கீழ் பணியமர்த்தியுள்ளார்.

கோச்சடையானின் வரைகலை மற்றும் டிசைன்கள் வடிவமைப்பில் இவர்களின் பங்களிப்பும் இடம்பெறுகிறது.

இவர்களைத் தவிர, கும்பகோணத்தில் உள்ள காலேஜ் ஆப் பைன் ஆர்ட்ஸைச் சேர்ந்த 8 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த 50 கலைஞர்களும் கோச்சடையானுக்காக பணியாற்றுகின்றனர்.

இந்த 92 பேர் தவிர, கான்செப்ட் ஆர்டிஸ்ட் என்ற வகையில் மேலும் 60 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் வரும் படம் என்ற பெருமை கொண்ட கோச்சடையானை ஒவ்வொரு அங்குலமும் மிகுந்த கவனமெடுத்து இந்தப் படத்தை செதுக்கி வருகிறார்கள்.

 

கிராமத்தில் பிறந்ததற்காக மாணவர்கள் வெட்கப்படக் கூடாது!- சிவகுமார்

Village Students Must Be Proud Says Sivakumar

கிராமத்தில் பிறந்துவிட்டோமே என்று மாணவர்கள் வருத்தப்பட வேண்டாம். அது பெருமைதான். எங்கு பிறந்தாலும் இளமையிலிருந்து ஒழுக்கத்துடன் இருந்தால் நிச்சயம் உயர்ந்த இடம் கிடைக்கும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

கோவையை அடுத்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த பள்ளிகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர் பரிசுகள் வழங்கினார்.

இந்த அறக்கட்டளைக்கு தலைவரும் சிவகுமார்தான். இங்குதான் அவர் படித்தார். விழாவில் அவர் பேசுகையில், "கிராமப் பகுதிகளில் ஏழையாகப் பிறந்துவிட்டோமே என வருத்தப்பட வேண்டாம்.

அதில் எந்த வித பாவமோ சாபமோ இல்லை. சொல்லப் போனால் இதற்காக சந்தோஷப்படுங்கள். மேதை ஆகவேண்டுமென்றால், உழைப்பின் மகத்துவம் தெரிய வேண்டும் என்றால் கிராமத்தில் பிறந்திருக்க வேண்டும் என எண்ணிக்கொள்ள வேண்டும்.

படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தால் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற முடியும்.

அனைத்து துறையிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். ஒழுக்கம் ஒன்றுதான் அனைவரையும் காப்பாற்றும்.

பெற்றோர்களையும், உங்களுக்கு நல்வழிகாட்டும் ஆசிரியர்களையும் வாழ்நாளில் மறக்கவே கூடாது," என்றார்.

 

'இரண்டு கதைகள் தயார்... விரைவில் அடுத்த பட அறிவிப்பு' - ஐஸ்வர்யா

Aishwarya Launch Her Next Movie

கொலவெறி புகழ் 3 படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

முதல் படம் 3-ன் பாடல்கள் பெருமளவு ஹிட்டடித்தாலும், அந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது கிடைத்தது. அமெரிக்காவில் பாராட்டு விழாவும் நடந்தது.

அந்த உற்சாகத்துடன் மீண்டும் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா.

இந்த முறை அவர் குழந்தைகளுக்கான படத்தை எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். இன்னொரு படத்துக்கான கதையையும் தயார் செய்துள்ளாராம்.

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.

இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

 

இயக்குநராகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் - ஜீவாவை இயக்குகிறார்!

Ravi K Chandiran Turns Director

தமிழ், இந்தி திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராகத் திகழும் ரவி கே சந்திரன் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.

தனது முதல் படத்தில் ஜீவாவை ஹீரோவாக வைத்து இயக்குகிறார்.

மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரவி.கே சந்திரன்.

தனது முதல் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இயக்குகிறார். 'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

கதாநாயகி மற்றும் பிறநடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேக்கிங் ஆஃப் விஸ்வரூபம் மற்றும் புத்தம் புதிய ட்ரைலர்!

கமல் ஹாஸனின் பிரமாண்ட படமான விஸ்வரூபத்தின் புத்தம் புதிய ட்ரைலரும், படம் உருவான விதம் குறித்த 4 நிமிட வீடியோவையும் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் விஸ்வரூபம் படமாக்கப்பட்ட விதத்தை இதில் விரிவாகக் காட்டியுள்ளனர்.

kamal s vishwaroopam making video new trailer   
Close
 

அத்துடன் புதிய 1 நிமிட ட்ரைலரையும் வெளியிட்டுள்ளார். ரசிகர்களைக் கவரும் விதத்தில் இதில் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.

விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாஸனுக்கு ஜோடியாக பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ளனர்.

சங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கமல்ஹாஸன். படத்தின் பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது!

Posted by: Shankar
 

இஷா தியோல் - பாரத் தக்தானி திருமணம்: பாலிவுட்டே திரண்டு வந்து வாழ்த்து!

Bollywood Blesses Esha Deol Bharat Takhtani

மும்பை: தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியரின் மூத்த மகளான நடிகை இஷா தியோல் திருமணம் நேற்று மும்பையில் கோலாகலமாக நடந்தது. மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானியை அவர் தென்னிந்திய முறைப்படி மணந்தார்.

இந்தி திரைப்பட உலகில் நட்சத்திர ஜோடியாகத் திகழ்பவர்கள் தர்மேந்திரா- ஹேமமாலினி தம்பதி. இவர்களின் மூத்த மகள் இஷா தியோல். இந்தி திரைப்பட உலகில் பிரபல நடிகையான இஷாவுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் பாரத் தக்தானிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்தது.

இந்த நிலையில் அவர்களது திருமணத்தையொட்டிய சடங்குகள் கடந்த 3 நாட்களாக கோலாகலமாக நடந்து வந்தது.

இஷா தியோல்-பாரத் தக்தானி திருமணம் நேற்று காலை மும்பை ஜுகு பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில் நடந்தது. இதற்காக மணமகன் பாரத் தக்தானி வெள்ளை குதிரையில் அழைத்து வரப்பட்டார். மாப்பிள்ளையை தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினர் வரவேற்றனர்.

தென்னிந்திய பாரம்பரியப்படி...

இஷா தியோல் சிவப்பு மற்றும் தங்க சரிகை கொண்ட காஞ்சீபுரம் பட்டுச்சேலை அணிந்து இருந்தார். இந்த சேலை சென்னையில் வாங்கப்பட்டு, அதில் கூடுதலாக சில அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் பாரத் தக்தானி மராட்டிய பாரம்பரியத்தின் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த ஜோடியின் திருமணம் தென்னிந்திய பாரம்பரியத்துடன் இந்துமுறைப்படி நடந்தது.

திருமண ஜோடியை ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் குவிந்து வந்து வாழ்த்தினர். குறிப்பாக அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக்பச்சனுடன் வந்து வாழ்த்தினார். மனோஜ் குமார், வினோத் கன்னா, பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, பூனம் சின்ஹா, அனுமாலிக் உள்பட பலர் வந்திருந்தனர்.

இஷா தியோல்-பாரத் தக்தானி திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்க உள்ளது.

 

மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!

Simbu Gets 6 Heroines Manmathan 2

சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.

சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.

தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.

இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!

 

கமலாவில் 3 டி திரையரங்கம் - இயக்குநர் அமீர் திறந்து வைத்தார்!

Ameer Lauches 3d Theater At Kamala

சென்னையின் முக்கிய திரையரங்குகளுள் ஒன்றான வடபழனி கமலாவில் புதிதாக 3 டி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அமீர் இந்த அரங்கை திறந்து வைத்தார்.

வடபழனியில் உள்ள இந்த அரங்கில் ஏற்கெனவே கமலா மற்றும் கமலா மினி என இரு அரங்குகள் இயங்கி வருகின்றன.

3 டி படங்களின் வருகை அதிகரித்திருப்பதையொட்டி, புதிதாக 3 டி வசதி கொண்ட அரங்கை திறந்துள்ளனர்.

பெப்சி தலைவரும் இயக்குநருமான அமீர் இந்த புதிய அரங்கை இன்று திறந்து வைத்தார்.

கமலா திரையரங்க இயக்குநர்கள் சித வள்ளியப்பன் மற்றும் சித கணேசன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!

Mugamoodi First Look Unveiled   

ஜீவா நடிக்க, மிஷ்கின் இயக்கி வரும் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படத்தின் முன்னோட்டக் காட்சியை இன்று நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

'முகமூடி' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் இன்று சத்யம் சினிமாவில் வெளியிடப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா, கேவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலரை சூர்யா வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு, படத்தின் ஹீரோ ஜீவா, முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நரேன், செல்வா, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினர்.

 

பேசிய சம்பளம் கொடுக்காததால் வெளிநாட்டில் ஆட மறுத்த அமலா பால்!

Amala Paul Refuses Appear On Stage   

அமலா பால் எங்கு போனாலும் கூடவே ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதது சகஜமாகிவிட்டது.

இந்த முறை வெளிநாட்டில் வைத்து விவகாரம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் நடனமான அமலா பாலுக்கு பெரும் சம்பளம் பேசி அழைத்துச் சென்றார்களாம்.

பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அமலாவை, விழா துவங்கியதும் நடனமாட அழைத்தனர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசின சம்பளத்தைக் கொடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.

முழு தொகையும் செட்டில் பண்ணால்தான் நடனம் ஆடுவேன்.. இல்லாவிட்டால் மேடைக்கே வரமாட்டேன் என கறாராகச் சொல்லிவிட்டாராம்.

விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான். ஆனால் அது சம்பள பாக்கிக்காக அல்ல, விமான டிக்கெட் பிரச்சினைக்காக என்றனர்.

இந்த விஷயத்தில் அமலா பால் என்றல்ல... எந்த நடிகைகளையும் குறை சொல்ல முடியாது. சில ஏற்பாட்டாளர்கள், இப்படி வெளிநாட்டுக்கு கூட்டி வந்து, விழா முடிந்ததும் அம்போ என்று விட்டுவிட்டுப் பறந்துவிடுவார்கள். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பவர்கள் முழுத் தொகையையும் முன்கூட்டியே கொடுத்தால்தான் நடிகைகள் வருவார்கள். இதுதான் கோடம்பாக்க வழக்கம். எனவே தவறு விழாக்குழுவினர் மீதுதான் என்றனர், இந்த விவகாரத்தின்போது உடனிருந்த சில கலைஞர்கள்.

 

தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்!

Tamil Selvanum Thaniyar Anjalum Shooting

கவுதம் மேனன் பங்குதாரராக உள்ள போட்டோன் கதாஸ் தயாரிக்கும் புதிய படமான தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படம் தமிழ் தெலுங்கில் இருமொழிப் படமாக தயாராகிறது.

ஏற்கெனவே இந்த நிறுவனம் இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகும் "நீதானே என் பொன்வசந்தம்" படத்தையும், அதை தெலுங்கில் "எதோ வெல்லி போயிந்தே மனசு" என்ற பெயரிலும் தயாரித்து வருகிறது.

"தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்" படத்தை பிரேம் சாய் இயக்குகிறார். இவர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்தவர். இதே படம் தெலுங்கில் கூரியர் பாய் கல்யான் என்ற பெயரில் உருவாகிறது.

"இப்படத்தின் மைய கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல, ஒரு நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்ற கலவையுடன் பின்னபட்ட திரைக்கதையுடன் கூடியது. இக்கதையை நான் கேட்ட போது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமபட்டேன்" என்கிறார் இயக்குநர் கவுதம்மேனன்.

ரிச்சா கங்கோபாத்யாய் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ் நடிக்கின்றனர். பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த 3 மாதங்களுக்கு ஹைதராபாதில் தொடர்ந்து நடக்கிறது.

 

பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா!

Pandiraj S Kedi Billa Killadi Ranga

'பசங்க', 'வம்சம்', 'மெரினா' ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கு கேடி பில்லா கில்லாடி ரங்கா என தலைப்பிட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க காமெடிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகர்களாக விமலும் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார்கள். இந்த இருவரையும் ஹீரோக்களாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருப்பது போலவே, இரண்டு வில்லன்கள் உண்டு.

முழுக்க சிரிப்புப் படம்தான் என்றாலும், அதிலும் ஒரு சமூக சிந்தனையை வைத்திருக்கிறாராம் பாண்டி.

இந்தப் படத்தில் அவருடன் முதல் முறையாக கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதுவும் முழுக்க முழுக்க கிராமியப் பாடல்களாகத் தரப் போகிறார்களாம். பண்ணைப்புரத்து ராசாவுக்கு கிராமத்துப் பாடலை சொல்லியா தரவேண்டும்.

ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது!

 

பில்லா 2 - பிரமாண்ட விழாவில் புதிய ட்ரைலர் - வருவாரா அஜீத்?

Ajith S Billa 2 Have New Trailer    | பில்லா 2  

அஜீத் நடிக்கும் பில்லா 2 படம் ஜூலை 13-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு இரண்டாவது ட்ரைலர் வெளியிடுகிறார்கள்.

ஆடியோ வெளியீட்டைக் கூட சத்தமின்றி முடித்துவிட்ட பில்லா 2 தயாரிப்பாளர்கள், சென்சார் பிரச்சினை, பட வெளியீட்டில் நேர்ந்த தாமதம் போன்றவற்றால் படத்தின் மீது விழுந்துள்ள எதிர்மறை அபிப்பிராயத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ட்ரைலர் வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.

வரும் ஜூலை 2-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா நடக்கிறது.

இந்த விழாவிலாவது அஜீத் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு தயாரிப்பாளர்களால் கூட பதில் சொல்ல முடியவில்லை. இந்த மாதிரி விழாக்களில் பங்கேற்பதை 'சார்' விரும்பமாட்டார்... பிரஸ்ஸை மீட் பண்ணுவதையும் இப்போதைக்கு தவிர்க்கவே முயற்சிப்பார், என அஜீத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

விட்டா படப்பிடிப்புக்கு வரலாமா வேணாமான்னு யோசிப்பாரு போலிருக்கே...!

 

வீடு தேடி வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்கும் தேவிப்ரியா!

Acting Serials Is The Best Moment

செல்லமே சீரியலில் வில்லத்தனம் காட்டும் சிநேகாவாக வந்து இல்லத்தரசிகளிடம் திட்டு வாங்குகிறார். அதேசமயம் அத்திப்பூக்கள் சீரியலில் போலீஸ் அதிகாரி ரெஜினாவாக வந்து பாராட்டு பெறுகிறார் நடிகை தேவிப்ரியா.

எப்படி ஒரே நாளில் வில்லியாக, நகைச்சுவை நடிகையாக, கண்டிப்பான அதிகாரியாக நடிக்க முடிகிறது என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம்.

சினிமாவா சீரியலா என்று கேட்டால் நான் சீரியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன். ஏனெனில் சினிமாவை விட சீரியலில்தான் நடிகைகளின் கேரக்டர்கள் அதிகமாகப் பேசப்படுகிறது.

சீரியல் பல கதைகளை வீட்டுக்குள்ளேயே கொண்டு செல்வதால் மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. சினிமா போல் சீரியல் பொழுதுபோக்கிற்காகப் பார்க்கப்படுவதில்லை. சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறோமே அதுவே பெரிய வெற்றிதான்.

மேலும் சினிமாவை விட சீரியலுக்கான வரவேற்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்குக் காரணம் சீரியல்களின் புதிய கதைக் களங்கள்தான்.

சீரியலில் பழி வாங்கல், துரோகம், கணவன் மனைவி தொடர்புகளில் சிக்கல் இவைகள்தான் சீரியல்களில் ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்டு வருகின்றன என்பது உண்மைதான். மனிதர்களின் சராசரி வாழ்க்கைதான் இங்கு சீரியலாக்கப்படுகிறது.

மாமியார்-மருமகள் பிரச்னையை பற்றி சொல்லும் போது பழி வாங்கல், துரோகம் போன்றவற்றை சொல்லித்தான் ஆக வேண்டும். சினிமாவை விட பாலியல் தொடர்பான விஷயங்கள் சீரியலில் குறைவுதான். இருந்தாலும் ஒரு கதை சொல்லப்படும்போது அது தவிர்க்க முடியாத விஷயமாகி விடுகிறது.

சீரியலை குடும்பமே உட்கார்ந்து பார்க்கக் கூடிய இன்றைய சூழலில் இந்த விஷயங்கள் குறைந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும். அதைக் கட்டுப்படுத்தும் வகையில் சீரியலுக்கென தனி சென்சார் வந்தால் வரவேற்கலாம்.

இப்போது ‘செல்லமே', ‘ அத்திப்பூக்கள்', போன்ற குறிப்பிடத்தக்க சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறேன். இந்த இரண்டுமே மாறுபட்ட கதாபாத்திரங்களை கொண்டவை. மக்களிடம் நன்றாக ரீச் ஆகியிருக்கின்றன.

சினிமாவில் எனக்கு முக்கியத்துவமான கேரக்டரில் மட்டும் நடித்து வருகிறேன். ‘வல்லமை தாராயோ', ‘நாயகன்' படங்களில் நல்ல கேரக்டர் கிடைத்தது. அது போல் கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன் என்று கூறி விடை பெற்றார் தேவிப்ரியா.

 

20 சண்டை, எக்கச்சக்க கூலிப்படையினருடன் தமிழுக்கு வரும் கூலி!

Kannada Gooli Comes Tamil 20

கன்னடத்தில் வெளியாகி ஹிட் ஆன கூலி என்ற படம் தமிழுக்கு வருகிறது. அந்தக் காலத்தில் படம் முழுக்க பாட்டு இருக்கும் என்பார்கள். அதேபோல இந்த கூலி படத்தில் படம் நிறைய சண்டைக் காட்சிகள்தானாம். கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இருக்கிறதாம். சுதீப் நடித்த இப்படத்தை கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் டப் செய்து கொண்டு வருகின்றனர்.

கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சுதீப், தமிழில் ஹிட் ஆன படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துப் பிரபலமானவர். சேது, சிங்கம் என அவர் நடிக்காத தமிழ் ஹிட் ரீமேக் படங்களே இல்லை.

அதேசமயம், ரத்த சரித்திரம் படம் மூலம் நேரடித் தமிழ்ப் படத்திலும் சுதீப் நடித்துள்ளார். இப்போது அவரது படம் ஒன்று கன்னடத்திலிருந்து தமிழுக்கு டப் ஆகி வருகிறது. அப்படத்தின் பெயர்தான் கூலி.

2008ம் ஆண்டு வெளியான இப்படம், ஒரு கூலிப்படையின் கதையாகும். கூலிக்கு ஆளைத் தூக்குவது, போட்டுத் தள்ளுவது, கையைக் காலை எடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நாயகனும், அவனது காதலியும் சந்திக்கும் சவால்கள் குறித்ததுதான் படம்.

படத்தில் ஏகப்பட்ட சண்டைக் காட்சிகள், கிட்டத்தட்ட 20 சண்டைக் காட்சிகள் இருக்கிறதாம். இதுதான் அப்படத்தை அன்று ஹிட்டாக உதவியது. அதேபோல கூலிப்படையினரின் மோதல்களுக்கும் பஞ்சமில்லையாம்.

நடிகை மமதா மோகன்தாஸ், சுதீப்புக்கு ஜோடியாக நடித்திருந்தார். கிஷோர் போலீஸ் அதிகாரியாக வருகிறார். இப்படம் விரைவில் கொருக்குப்பேட்டை கூலி என்ற பெயரில் தமிழ்த் திரைக்கு வருகிறது.

நான் ஈ படத்தில் சுதீப்பும் நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். இது அவருக்கு தமிழில் 2வது படமாகும்.

 

அழவைக்கும் சிரிப்பு (அறுவை) லோகம்!

Sun Tv S Sirippu Lokam Lacks Comdey

சிரிப்பு லோகம் என்ற பெயரில் கிச்சு கிச்சு மூட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் தற்போது ரசிகர்களை அழவைக்கும் அறுவை லோகமாக மாறிவருகிறது என்று ரசிகர்களிடையே கருத்து நிலவிவருகிறது.

எமலோகத்தில் தினசரி நடக்கும் நிகழ்வுகள்தான் சிரிப்பு லோகத்தின் கதை. எமதர்மனாக சின்னிஜெயந்த், எமனின் மனைவியாக ஆர்த்தி கணேஷ்கரும் நடித்திருக்கின்றனர். சித்திரகுப்தனாக வென்னிற ஆடை மூர்த்தி, அவரது உதவியாளராக சிட்டிபாபு நடித்திருக்கும் இந்த தொடரில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

பூலோகத்தில் இறந்து போன மனிதர்கள் மேலோகத்தில் சென்று அவரவரின் பாவ புண்ணியங்களை கூறி அதற்கேற்ப தண்டனை வழங்கப்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை தொடங்கினர் சின்னி ஜெயந்த் அன் கம்பெனியினர். ஆனால் இதில் நகைச்சுவைக்கு பதிலாக ஒரே அறுவை மயமாக இருக்கிறது. வசனங்கள் எதுவும் உறுப்படியாக இல்லை.

எமலோகத்தில் காவல் இருக்கும் பூதங்கள் செல்போன் எல்லாம் வைத்து பேசுகின்றனராம். அங்கே போய் டவர் வைத்தது யார் என்று தெரியவில்லை?. பூலோகத்தில் இறந்து போன ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் சித்திர குப்தனுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கடைசியில் எமலோகத்தை பிளாட் போட்டு விற்பனை செய்கிறாராம். சிரிக்க வைக்கிறேன் என்று கிச்சு கிச்சு மூட்டும் நடிகர்கள் உறங்கப்போகும் நேரத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றி அழ வைக்கின்றனர்.

லோகத்திலே இப்படியெல்லாமா ஓய் பயமுறுத்துவது...!

 

பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குப் போகிறார் - சாமுவேல் ஜாக்சனை வைத்து படம் இயக்குகிறார்!

Bharathi Raja Too Enter Into Hollywood

கமல்ஹாசனைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குக் கிளம்புகிறார். தமிழில் ஹிட்டடித்த பொம்மலாட்டம் படத்தை அவர் ஆங்கில வடிவத்திற்குக் கொண்டு செல்கிறார்.

நீண்ட காலமாக இயக்கத்தில் இருந்து பின்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பொம்மலாட்டம். நானா படேகரின் நடிப்பும், அர்ஜூனின் பாத்திரமும் அனைவராலும் வரவேற்கப்பட்டு பேசப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குநரைப் பின்னணியாகக் கொண்ட படம் பொம்மலாட்டம்.

இந்தப் படத்தைத்தான் தற்போது ஹாலிவுட்டுக்குக் கொண்டு செல்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் நானா படேகர் பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அர்ஜூன் பாத்திரத்தில் பாரதிராஜாவின் நண்பர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவரே படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

பொம்மலாட்டமும், தானும் ஹாலிவுட்டுக்குப் போவதை உறுதி செய்துள்ளார் பாரதிராஜா. ஆமாம், ஹாலிவுட்டில் எனது பொம்மலாட்டத்தை ரீமேக் செய்யப் போவது உண்மைதான். அமெரிக்காவைச் சேர்ந்த எனது நான்கு நண்பர்கள் இப்படத்தை தயாரிக்கப் போகிறார்கள் என்றார்.

தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாரதிராஜா அதை முடித்து விட்டு ஹாலிவுட் பறக்கிறார். ஆங்கில ரசிகர்களுக்காக பொம்மலாட்டம் படத்தின் திரைக்கதையில் மாற்றமும் செய்கிறாராம் பாரதிராஜா.

சமீபத்தில்தான் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட்டுக்குப் போகும் செய்தி வெளியானது. அந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார். திரைக்கதையும் அவரே. இந்த நிலையில், பாரதிராஜாவும் ஹாலிவுட் போவது தமிழ் திரையுலக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமலும், பாரதிராஜாவும் இணைந்து 16 வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி என தமிழில் மாயாஜாலம் புரிந்தவர்கள். இப்போது இருவரும் தனித் தனியாக ஹாலிவுட்டுக்குள் புகுவது குறிப்பிடத்தக்கது.

 

ஷகீலா 'பீர் குடித்து குறி சொல்ல' சென்சார் ஆட்சேபம்!

Censor Cuts Scenes Shakeela Aasami

ஆசாமி என்ற படத்தில் போலிச் சாமியார் வேடத்தில் ஷகீலா நடித்துள்ள காட்சிளுக்கு தனிக்கைக் குழு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாம். அவர் பீர் குடிப்பது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும், பீரானந்தாஜி என்று பெயர் வைக்கப்பட்டதற்கும் தணிக்கைக் குழு எதிர்ப்புத் தெரிவித்து, ஷகீலா சம்பந்தப்பட்ட காட்சிகளில் 10இடங்களில் கத்திரி போட்டு விட்டனராம்.

ஒரு காலத்தில் ஷகீலா படம் என்றால் தியேட்டர்கள் அல்லோகல்லப்படும். கேரளாவை கிறங்கிப் போய்க் கிடந்தது ஷகீலாவின் அலையில் சிக்கி. ஆனால் இப்போது அமைதியான நதியாக மாறி விட்டார் கவர்ச்சிக் கடலான ஷகீலா. தமிழில் காமெடிப் படங்களில் லேசு பாசாக கவர்ச்சியைக் கலந்து நடித்து வருகிறார். சந்தானம் தனது படங்களில் தொடர்ந்து ஷகீலாவுக்கு நல்லாதரவு அளித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷகீலா நடித்துள்ள புதிய படம் ஆசாமி. இதில் அவர் போலிச் சாமியாரினியாக வருகிறார். பீர் குடித்தும் சிகரெட் பிடித்தும் குறி சொல்லும் சாமியாராக அவர் வருகிறாராம். அவரது பெயர்கூட பீரானந்தாஜியாம்.

அவருடைய கூட்டாளிகளாக சந்தானபாரதி, பாண்டு, நெல்லை சிவா, அனுமோகன் என ஒரு கூட்டமே நடித்துள்ளது. படத்தை முடித்து சென்சார் அதிகாரிகளிடம் கொடுத்து சான்றிதழ் கேட்டுள்ளனர்.

படத்தைப் பார்தத் சென்சார்காரர்கள், குறிப்பாக ஷகீலா தொடர்பான சீன்களைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டனராம். ஒட்டுமொத்த சாமியார்களும் இப்படித்தான் என்பதைப் போல சித்தரித்துள்ளீர்களே என்று கூறிய அவர்கள் மொத்த சீனையும் தூக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்று கூறி விட்டனர். ஆனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மறுக்கவே அப்பீலுக்குப் போனார்கள்.

அங்கும் ஷகீலா அன்கோவின் சீன்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 இடங்களில் வெட்ட தயாரிப்பாளர் தரப்பு ஒத்துக் கொண்டது. இதையடுத்து அந்த கட்டோடு, படத்துக்கு யுஏ சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனராம்.

பரவாயில்லை, முன்பெல்லாம் ஷகீலா படம் என்றால் மொத்த படத்தையுமே வெட்ட வேண்டியிருக்கும், இப்போது பத்து சீனோடு போச்சே...!

 

யார் படத்துக்கும் நெருக்கடி வேணாம்... கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! - ரஜினி

Rajini Postpones Kochadaiyaan Release

போட்டி மிக்க இந்த சினிமா உலகில், யாருக்கும் தன் படத்தால் நெருக்கடி வேண்டாம் என்ற நினைக்கும் ஹீரோவைக் காட்ட முடியுமா...

ஏன் முடியாது... இதோ சூப்பர் ஸ்டார் ரஜினி!

தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

காரணம்?

தீபாவளிக்கு ஷாரூக்கான் - கரீனா நடித்த 'யே கஹான் ஆ காயே ஹம்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி - ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும்.

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் ரஜினி படம் என்பதால், மும்பையில் மட்டும் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் - மால்களில் கோச்சடையானை வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இதனால் ஷாரூக் படத்துக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம். மேலும் அதே தினத்தில் அஜய் தேவ்கன் நடித்த படமும் வெளியாகிறது. கோச்சடையானால் இந்தப் படங்களுக்கு மும்பையில் நெருக்கடி வேண்டாம் என்ற ரஜினி, 'படத்தை சில தினங்கள் தள்ளி வெளியிடலாம். யாருக்கும் பாதிப்பு வேண்டாம்' என்று கூறிவிட்டாராம்.

 

தெலுங்கில் கோச்சடையானுக்கு தலைப்பு 'விக்ரம் சிம்ஹா!'

Kochadaiyaan Titles As Vikram Simha   

தெலுங்கில் வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானுக்கு விக்ரம் சிம்ஹா என தலைப்பிடப்பட்டுள்ளது.

ரஜினி இரண்டு வேடங்களில் நடிக்க, கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் உருவாகி வரும் கோச்சடையான், தமிழ் தவிர, தெலுங்கு, இந்தி மற்றும் ஜப்பானிய மொழியிலும் வெளியாகிறது.

கோச்சடையான் என்பது தூய தமிழ்ப் பெயராகும். எனவே மற்ற மொழிகளில் இந்தப் படத்தை அந்த மொழிக்குப் பரிச்சயமான தலைப்பைச் சூட்ட முடிவு செய்துள்ளனர்.

தெலுங்குப் பதிப்புக்கு 'விக்ரம்சிம்ஹா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் ஜப்பானிய மொழியில் இந்தப் பெயரில் வெளியாகுமா அல்லது வேறு தலைப்பு வைக்கப்படுமா என்பது தெரியவில்லை.

இன்னும் பாடல் காட்சிகள் சில மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. மற்றபடி படப்பிடிப்பு ஓவர்!

 

சட்டுபுட்டுனு ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க - சல்மானுக்கு கத்ரினா அட்வைஸ்!!

It S Time You Get Married Katrina To Salman    | கத்ரீனா   

சல்மான்கான் கல்யாணம் பண்ணுவாரா மாட்டாரா என்பது பாலிவுட் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி!

அவரும் இதோ அதோ என இழுத்துக் கொண்டே, படங்களில் வெற்றுடம்பைக் காட்டி ரசிகைகளைச் சூடேற்றி வருகிறார்.

ஆனாலும் யாரும் அவரிடம் நேரடியாக திருமணம் பற்றி பேசுவதில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறது, அவரது நடிப்பில் வரும் ஏக் தா டைகர் படம்.

இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் ஒரு காட்சியில், சல்மான்கானைப் பார்த்து, 'கல்யாணம் பண்ணிப்பீங்களா மாட்டீங்களா.. சட்டு புட்டுனு ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க... இப்பவே ரொம்ப லேட்டாகிடுச்சி" என நேரடியாகவே கேட்பது போல வைத்திருக்கிறார்களாம்.

ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் சுவாரஸ்யமான அனுபவத்தைத் தரும் என்கிறார்கள் யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தினர்.

சல்மான்கான் - கத்ரீனா கைப் காதல் பாலிவுட்டில் ரொம்ப நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் ஒன்று. கத்ரீனாவை சல்மான் திருமணம் செய்யக் கூடும் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அவரே சல்மானப் பார்த்து எப்போ கல்யாணம்? என்று கேட்பது சுவாரஸ்யம்தானே!!

 

'லூசு'க்காக மீண்டும் ஒரு முறை 'டர்ட்டி'யாகும் வித்யா பாலன்!

Vidya Balan Go Hot Again Ghanchakkar    | டர்ட்டி பிக்சர்  

தி டர்ட்டி பிக்சரில் ஏக கவர்ச்சி காட்டி நிறைய பேர் மனசை 'அழுக்காக்கிய' வித்யா பாலன் மீண்டும் ஒரு முறை அதைவிட கவர்ச்சியாக ஒரு படத்தில் தோன்றப் போகிறார்.

படத்தின் பெயர் 'கஞ்சக்கர்'. பேச்சு வழக்கு இந்தியில் இதற்கு 'லூசு' என்று அர்த்தம்!

இந்த லூசு படத்தில் சாதாரண மனைவி வேடத்தில் வரும் வித்யா, சில படுக்கையறைக் காட்சிகளில் படு செக்ஸியாக தோன்ற வேண்டியுள்ளதாம். இந்தக் காட்சிகளில் அவரது தோற்றம் பார்ப்பவர்களை உசுப்பேற்றும் விதமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்புகிறாராம்.

இதற்காக அவர் அமெரிக்காவுக்குப் போய் ஸ்பெஷல் ஸ்கின் ட்ரீட்மெண்ட் எடுக்கப் போகிறாராம். அதன்பிறகுதான் அந்தக் காட்சியில் நடிப்பாராம்!

இதுகுறித்து இயக்குநர் ராஜ்குமார் குப்தா கூறுகையில், "ஆமாம்.. வித்யா பாலன் இதுவரை எந்த நடிகையும் செய்யாத அளவுக்கு கவர்ச்சியாகவும் துணிச்சலாகவும் தோன்றப் போகிறார். இதற்காகத்தான் அவரை அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு அனுப்பவிருக்கிறோம்," என்றார்.

அப்படியென்ன புரட்சி வேடம்...?!

 

'மெகா' துப்பாக்கியை நிறுத்திய கள்ளத் துப்பாக்கி!

Kallathuppakki Stops Vijay S Mega

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே கூட இந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஒரு சின்ன படம், தடாலடியாக தனது பெரிய பட்ஜெட் படத்தைத் தடுத்துவிடும் என்பதை!

தலைப்பில் இருந்த ஒற்றுமை மட்டுமல்ல... அந்த தலைப்பின் டிசைன் கூட ஈயடிச்சான் காப்பி மாதிரி ஆகிவிட்டதுதான் இந்த தடைக்கு முக்கிய காரணம்.

கள்ளத்துப்பாக்கியின் கதை...

3 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.

நடிகர் கமல் ஹாஸனிடம் உதவியாளராக இருந்தவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன்.

படத்தையே, பத்மஸ்ரீ கமல்ஹாஸன் ஆசீர்வாதத்துடன்' என்றுதான் ஆரம்பித்தார். கமல் அட்வைஸ்படி ஒத்திகையெல்லாம் பார்த்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினாராம்.

படம் குறித்த விளம்பரங்கள், செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன கடந்த இரு ஆண்டுகளாக. இந்தத் தலைப்பை 2009-லேயே அவர்கள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதனைப் புதுப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் படத்துக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று தலைப்பிட்டனர். இந்தத் தலைப்பை இந்த ஆண்டுதான் விஜய் மற்றும் முருகதாஸ் முடிவு செய்து அறிவித்தனர்.

இந்த செய்தி வெளியானதுமே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர் ரவிதேவனும் அவரது குழுவினரும். ஆனால் அப்போது சங்கத்தில் பொறுப்பில் இருந்த எஸ் ஏ சந்திரசேகரனும் துப்பாக்கி தயாரிப்பாளர் தாணுவும் இந்தப் புகாரை கண்டுகொள்ளவில்லையாம்.

அதன் பிறகு தங்களின் நலம் விரும்பிகளிடம் விஷயத்தைச் சொல்லி, அவர்கள் அறிவுரைப்படிதான் வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் ரவிதேவன் நம்மிடம் கூறுகையில், "நாங்கள் ஆரம்பத்திலிருந்தே துப்பாக்கி படத் தலைப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இவர்களால் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியம் அவர்களுக்கு.

நாங்க ஒட்டின போஸ்டர்கள் மீதே அவர்கள் துப்பாக்கி போஸ்டரையெல்லாம் ஒட்டி இம்சை குடுத்தாங்க. எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்கள்.

அதன் பிறகுதான் சட்டத்தின் துணையை நாடினோம். இரண்டு தலைப்புகள், அதன் டிசைன்களைப் பார்த்த நீதிபதி எங்கள் பக்கம் நியாயமிருந்ததை ஒப்புக் கொண்டு தடை விதித்துள்ளார். எங்கள் படம் காப்பாற்றப்பட்டுள்ளது," என்றார்.

அதுமட்டுமா... எவ்ளோ பெரிய பப்ளிசிட்டி.. படத்துல சரக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்தா நல்ல வியாபாரம்தான்!

 

கன்னட 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில்' ரூ. 1 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி!

Pampanna First Man Win Rs 1 Cr Kannadada Kotyadhipati

கன்னட டிவி சேனலில் ஒன்றின் கோடியாதிபதி நிகழ்ச்சியில் ('நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி') பங்கேற்ற நபர் ஒருவர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறி ஒரு கோடி ரூபாய் பரிசினை தட்டிச் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் விஜய் டிவியில் சூர்யா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் போல கர்நாடகாவில் ஸ்வர்ணா டிவி சேனல் ஒன்றில் நடிகர் புனித் ராஜ்குமார் கோடியாதிபதி நிகழ்ச்சி நடத்துகிறார். இது 60 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராய்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாம்பண்ணா என்ற நபர் அனைத்து கேள்விகளுக்கு சரியான பதிலைக்கூறி ஒரு கோடி பரிசினை பெற்றுள்ளார். இந்த தகவலை சுவர்னா தொலைக்காட்சி நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் யாரும் பரிசுத் தொகையினை வென்றதில்லை. இவர்தான் முதன் முறையாக ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விரைவில் திருமணம், ஆனால் மாப்பிள்ளை யாரென்று சொல்லமாட்டேன்: சுஷ்மிதா சென்

I Will Marry Soon Sushmita Sen

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென்னுக்கு 36 வயதாகியும் இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் ரினி, அலிஷா என்ற 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஐ ஆம் ஷீ என்ற அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். அந்த அமைப்பு நடத்தும் அழகிப் போட்டியில் வெற்றி பெறுவர்கள் பிரபஞ்ச அழகி, மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள்.

அப்படி அவர்கள் அனுப்பி வைத்த ஹிமாங்கினி சிங் மிஸ் ஏசியா பசிபிக் 2012 அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.

இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுஷ்மிதா சென் கூறுகையில்,

ஹிமாங்கினி மிஸ் ஏசியா பசிபிக் அழகிப் பட்டம் வென்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நான் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். என்னை மணக்க நிறைய பேர் வரிசையில் நிற்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பு முடிக்க வேண்டிய வேலைகள் சில உள்ளது.

நான் மீண்டும் படங்களில் நடிக்கப் போகிறேன். எனது படம் குறித்த அறிவிப்பு அக்டோபர்-டிசம்பரில் வெளியாகும். டிவி ஷோ ஒன்று நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய ஐ ஆம் ஷீ அமைப்பின் பேஷன் வீக் உள்ளது. இதையெல்லாம் முடித்தவுடன் திருணம் தான் என்றார்.

கடந்த 2 ஆண்டுகளாக சுஷ்மிதா படங்களில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஷங்கர் படத்திலிருந்தும் சமந்தா நீக்கம்?!!

Samantha Of Shankr S I   

சமந்தாவுக்கும் கோலிவுட்டுக்கும் ராசியில்லை போலிருக்கிறது. அதுவும் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்புகள் கிடைத்தும், அவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை.

முன்பு மணிரத்னம் படத்திலிருந்து விலகிக் கொண்ட சமந்தா, இப்போது ஷங்கரின் ஐ படத்திலிருந்தும் அவர் விலகக் கூடும் என செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமந்தாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், "சமந்தாவுக்கு சருமத்தில் சில பிரச்சினைகள் உள்ளன. அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

டாக்டர்கள் அவரை 3 மாதங்கள் தொடர்ந்து சூரிய ஒளி, கடல் காற்று படாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதற்காகத்தான் மணிரத்னம் படத்தையே அவர் வேண்டாம் என்றார்.

ஷங்கர் எப்படியும் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிதான் படத்தை ஆரம்பிப்பார் என நம்பினார் சமந்தா. ஆனால் அவரோ திடுமென்று அடுத்த வாரம் ஷூட்டிங் என்று கூறியுள்ளார். அதுவும் சென்னையில் பாடல்காட்சி. எப்படியும் ஜூலை முழுக்க இந்த பாடல் காட்சி எடுக்கப்படும். எனவே சூரிய வெளிச்சம், ஷூட்டிங்கில் அதிக வெப்பத்தை உமிழும் விளக்குகள் வெளிச்சத்தை அவர் சருமம் தாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே அவர் இந்தப் படத்தில் நீடிப்பாரா என்ற நிலை," என்றார்.

இதுகுறித்து ஷங்கர் தரப்பில் விசாரித்தபோது, உதடுகளை இறுக்க மூடிக் கொண்டு கண்களாலே 'தெரியாது' என்றனர்!!

 

அருண் விஜய்க்கு 'லைஃப்' கொடுத்த தடையறத் தாக்க!

Arun Vijay Gets Break Thadayara Thadayara Thakka   

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உறுதி செய்ய போராடி வந்த அருண் விஜய்க்கு சரியான 'பிரேக்' கொடுத்திருக்கிறது தடையறத் தாக்க.

இதற்கு அவர் யாருக்கு நன்றி சொல்கிறாரோ இல்லையோ... இயக்குநர் மகிழ் திருமேனிக்கு சொல்லித்தான் ஆக வேண்டும். ஹீரோ, ஹீரோயின் என்று யாருக்கும் முக்கியத்துவம் தராமல், கதைக்கும் நல்ல ஸ்க்ரிப்டுக்கும் அவர் முக்கியத்துவம் தந்திருந்தார். அருண் விஜய்யை அலட்டாமல், டீஸன்டாக நடிக்க வைத்திருந்தார்.

படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டது. இன்னும் 70 சென்டர்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

அருண் விஜய்யை வைத்து யாரும் படம் பண்ண முன்வராத போது, அவரது மாமனார் டாக்டர் மோகன் முன்வந்து படம் தயாரித்தார்.

அவர் சொன்னது இதுதான்: "எல்லா திறமையும் இருக்கிற அருண் விஜய்யை வைத்து நான் மூன்று படம் தயாரிக்கப் போகிறேன். அந்த மூன்றும் ஓடாவிட்டால் அவர் வேறு தொழில்களைக் கவனிக்கட்டும். ஒரு படம் ஜெயித்தாலும் தொடர்ந்து படங்கள் பண்ணுவேன்," என்றார்.

அந்த வகையில் முதலில் அவர் தயாரித்தது மலை மலை. அந்தப் படம் முதலுக்கு மோசமில்லாமல் 100 நாட்கள் ஓடிவிட்டது. அடுத்த படம் மாஞ்சா வேலு படுத்துவிட்டது.

ஆனால் இந்த மூன்றாவது படம், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

இதுகுறித்து அருண் விஜய் கூறுகையில், "தடையறத் தாக்க படம் மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. இயக்குநர் மகிழ்திருமேனி உள்பட அனைவருக்கும் நன்றி. எல்லோரும் இந்தப் படத்தில் என்னை பாஸிடிவாக உற்சாகப்படுத்தினார்கள். அதுதான் பெரிய வெற்றிக்கு காரணமானது," என்றார்.

 

காதலிப்பது குற்றமா? வெளிச்சத்துக்கு வரும் 'கெளரவ கொலைகள்'!

Satyamev Jayate Speaks Up Lovers

"நான் எந்த திரைப்படத்தில் நடிக்கிறோனோ அந்த திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகியை காதலிக்க தொடங்கி விடுவேன்" என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் பேசிய அமீர் கான் கூறினார்.

காதல் என்ற மூன்றெழுத்துச் சொல் அத்தனை சக்தி வாய்ந்தது. அதற்கு மதம் தெரியாது, ஜாதி கிடையாது, நிற பேதம் பார்க்காது. ஆனால் காதலிப்பதை குற்றமாக பார்க்கும் சுற்றத்தினர் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். வட நாட்டில் காதலிப்பவர்களை கவுரவக் கொலை செய்யும் பெற்றோர்களைப் பற்றியும் காதலுக்காக உயிரை மகனையோ, மகளையோ இழந்த பெற்றோர்களைப் பற்றியும் அமீர்கான் வெளிச்சம் போட்டு காட்டினார்.

தமிழ்நாட்டிலும் இன்றைக்கு பெரும்பாலான ஊர்களில் காதலிப்பது தவறு என்ற கண்ணோட்டத்துடனே பார்க்கப்படுகிறது. ஆங்காங்கே கவுரக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. 2003ம் ஆண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன், உயர்குடி சமூகத்தைச் சேர்ந்த கண்ணகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக ஊரார் முன்னிலையில் நடுத்தெருவில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்டனர்.

அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியைச் சேர்ந்த திருச்செல்வி தலித் இளைஞரான டேனியல்ராஜ் என்பவரை காதலித்த காரணத்திற்காக தன் பெற்றோர்களாலேயே கொல்லப்பட்டார்.

சென்னையை சேர்ந்த பார்த்தசாரதி, சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்காக சரண்யாவின் பெற்றோரே கூலிப்படையை வைத்து பார்த்த சாரதியை கொலை செய்துள்ளனர். இவைகள் தெரிந்த சில சம்பவங்கள்தான்.

ஆனால் எத்தனையோ சம்பவங்கள் இன்றைக்கும் மூடி மறைக்கப்பட்டு யாருக்கும் தெரியாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு என்னதான் தீர்வு? வெறும் சட்டங்களால் மட்டுமே இதை கட்டுப்படுத்திவிட முடியுமா என்றால் முடியாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சாதி, மதம் குறித்த சமூகத்தின் பார்வை மாறவேண்டும். மக்களின் மனதில் மாற்றம் வந்தால் மட்டுமே இதனை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சிறுவயது முதலே சாதியை விமர்சிக்கும் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறும் சமூக ஆர்வலர்கள், இன்றைக்கு எல்.கே.ஜி படிக்க பள்ளியில் சேர்க்கும் போதே சாதிச் சான்றிதழ் இருந்தால்தான் அனுமதி கிடைக்கிறது. முதலில் இந்த முறைக்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.

 

டர்ட்டி பிக்சருக்கு நான் ரெடி... இன்னும் ஸ்லிம்மா மாறப் போறேன்! - நமீதா

Namitha Ready Go Dirty   

தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நடிப்பீர்களா என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்... இதோ என் பதில்.. நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன். ஏன் தெரியுமா.. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னை விட்டால் அவரைப் போல நடிக்க ஆளே இல்லை, என்றார் தமிழகத்தில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே நடிகை என்ற பெருமைக்குரிய நமீதா.

நிறைய நிகழ்ச்சிகள், விளம்பரப் படங்கள், தெலுங்கு, கன்னடப் படங்களில் படுபிஸியாக இருந்தாலும், தமிழில் ஒரு அசத்தலான கதை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் நமீதாவுக்கு உள்ளது.

இந்த நேரத்தில்தான் எங்கே போனாலும், தி டர்ட்டி பிக்சர் தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிக்கவில்லையா... நடிப்பீர்களா... உங்களை அணுகினார்களா? என்றெல்லாம் அவரை கேட்டுத் துளைக்கிறார்களாம்.

சரி.. அதற்கு நமீதா பதில் என்ன?

நடிப்பேன் நடிப்பேன் நடிப்பேன்.... என்னிடம் கேட்டால் கண்டிப்பாக அந்தப் படத்துக்கு கால்ஷீட் தருவேன். இந்தியில் அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு விஷயம் சொல்லட்டுமா... சில்க் ஸ்மிதா வேடத்துக்கு என்னைவிட பொருத்தமான நடிகை இருக்க முடியுமா தெரியவில்லை. அந்த கேரக்டரை அந்த அளவு விரும்புகிறேன்.

இப்போது உடம்பை இன்னும் ஃபிட்டாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக உள்ளேன். சில நாட்கள் கழித்து என்னைப் பார்ப்பவர்கள் நிச்சயம் ஆச்சர்யப்படுவார்கள்," என்றார்.

தென்னிந்திய நடிகைகளில் உங்களுக்குத்தான் அதிக ரசிகர்களாமே... உண்மையா?

இருக்கலாம். ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. மச்சான்ஸ் எப்பவும் என்பக்கம்தான் இருப்பாங்க. தெலுங்கு, கன்னடம் என்று வேறு மொழிகளில் நடித்தாலும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நான் எப்பவுமே ஸ்பெஷல். அவங்க எனக்கு கொடுத்துள்ள இடம் உயர்வானது.

 

மடோனாவின் பிராவை அணிந்து கெட்ட ஆட்டம் போட்ட மகள்!

Lourdes Poses Madonna S Famous Cone Bra

ஹாலிவுட் நடிகையும் பிரபல பாப் பாடகியுமான மடோனாவின் 15 வயது மகளும் இப்போது மேடையைக் கலக்க ஆரம்பித்துவிட்டார்.

மடோனா மேடைகளில் தோன்றும்போது பயன்படுத்தும் புகழ்பெற்ற உடைகளில் ஒன்று உலோகத்தால் செய்யப்பட்ட அவரது கூம்பு வடிவ பிரா. 1990-ல் முதல்முறையாக இதனை அவர் அணிந்தார். உடைக்கு மேல் அந்த கூம்பு பிராவை பொருத்திக் கொண்டு ஆடுவதை ரசிக்க பெரிய கூட்டம் உண்டு.

இப்போது மடோனாவுடன் இணைந்து அவர் மகள் சீக்கி லோர்ட்ஸ் உலகப் பயணம் 2012 என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்துள்ளார். மடோனாவின் 9வது உலகப் பயணம் இது. 80 நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை தாயும் மகளும் நடத்த உள்ளனர்.

சமீபத்தில் பெர்லினில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது, தன் அம்மாவைப் போலவே கூம்பு வடிவ பிராவை அணிந்து கொண்டு மேடையில் தோன்றி ஆட்டம் போட்டார் சீக்கி. ரசிகர்களிடம் இதற்கு ஏக வரவேற்பு. மகளின் ஆட்டம் - பாட்டை பெருமிதத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் மடோனா. இந்த பிராவை வடிவமைத்தவர் ஜீன் பால் காடியர்.

தாயைப் போல பிள்ளை என்று சும்மாவா சொன்னார்கள்..

 

அமிதாப் இறந்துவிட்டதாக நெட்டில் வதந்தி - குடும்பத்தினர், ரசிகர்கள் அதிர்ச்சி!

Big B Not Dead Stop Spreading Rumours Family

மும்பை: கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்துவிட்டார் என இன்டர்நெட்டில் வதந்தி பரவியதால் அமிதாப் குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமோடு உள்ளார் என அவநரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அமிதாப் இப்போது அமெரிக்காவில் உள்ளார்.

அங்குள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே நண்பரின் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாம். பல தடவை கார் உருண்டதாம். இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டதாகவும், அவர் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அமிதாப்பச்சன் என போலீசார் உறுதி செய்தததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த செய்தி சில நிமிடங்களிலேயே நூற்றுக் கணக்கான இணைய பக்கங்களில் பரவியது.

அமிதாப்பச்சன் நலமாக இருக்கிறார் அவரைப் பற்றி வெளியான செய்திகள் வதந்திதான் என்று அமிதாப் தரப்பில் மறுத்துள்ளனர்.

இந்த வதந்தியால் அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கெனவே ரஜினிகாந்த், ராஜேஷ் கன்னா, திலீப் குமார், லதா மங்கேஷ்கர், கருணாநிதி போன்றோர் குறித்தும் இதுபோன்ற வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பியது குறிப்பிடத்தக்கது.

 

மீண்டும் புதிய பாதை - நாயகி தேடுகிறார் பார்த்திபன்!

Parthiban S Hunt New Heroine

23 ஆண்டுகளுக்கு முன் தான் நடித்து இயக்கி பெரும் வெற்றி பெற்ற புதிய பாதை படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார் பார்த்திபன். இப்போதும் நடித்து இயக்கப் போவது அவர்தான்...

இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்கிறீர்களா.. தெரியாத சமாச்சாரம்... படத்துக்காக அவர் ஹீரோயின் தேடிக் கொண்டிருப்பது.

இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகள் யாரையும் அவர் அணுகவில்லை. புதிய முகமாகத் தேடி வருகிறார்.

இதுகுறித்த அறிவிப்பில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

"மீண்டும் புதிய பாதைக்கு நாயகி தேடி தேடி தேடி தேடி... ஏன் வடநாட்டில்? தமிழ் நாட்டில் அழகான பெண்களே இல்லையா? என கேட்பார்கள். இருந்தால்... என் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புகைப்படத்தை அனுப்பி வைக்கலாம். வாய்ப்பு இருப்பின் முறையாக தெரிவிக்கப்படும். vithaganparthiban@gmail.com."

யார் கண்டது... அடுத்த சீதா தமிழ்நாட்டிலிருந்தும் உருவாகலாம்... முயற்சி பண்ணுங்க!

 

ஷோபனா குலாத்திக்கு 'பெஸ்ட் பின்பக்கம்' அவார்ட்!

Corrie S Shobna Gulati Wins Rear The Year

சிறந்த புட்டங்களைக் கொண்டவராக இங்கிலாந்து வாழ் இந்திய நடிகை ஷோபனா குலாத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஆண்களில் டிவி நடிகர் ஜான் பாரோமேனுக்கு அந்த விருது கிடைத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக இங்கிலாந்தில் சிறந்த புட்டங்களைக் கொண்டவர்களுக்கு விருது கொடுத்துக் கெளரவிக்கும் நூதன நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஸார்ட் ஜீன்ஸ் நிறுவனம் நடத்தும் இந்த விருது நிகழ்ச்சிக்கு Rear of the Year என்று பெயர்.

இந்த ஆண்டுக்கான விருது ஆண்களில் பாரோமேனுக்கும், பெண்களில் ஷோபாவுக்கும் கிடைத்துள்ளது.

ஏற்கனவே இவர்களுடைய புட்டங்கள்தான் சிறப்பாக, எழிலாக இருப்பதாக வாக்கெடுப்பின் மூலம் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படியே அவர்களுக்கே விருது்ம் கிடைத்துள்ளது.

ஷோபனா குலாத்தி இங்கிலாந்தில் பிறந்தவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண். 45 வயதான இவர் டிவி நாடக நடிகையாவார். காரனேஷன் ஸ்ட்ரீட் என்ற தொடரில் நடித்துப் பிரபலமானவர்.

தனது புட்டத்துக்கு விருது கிடைத்துள்ளது குறித்து அவர் கூறுகையில், எனது அம்மாவுக்குத்தான் இந்தப் பெருமையெல்லாம். அவருக்கு சிறந்த புட்டம் அமைந்திருக்கிறது. அதே போலத்தான் எனக்கும் உள்ளது.

மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது புட்டம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளதை கெளரவமாக கருதுகிறேன். கடந்த 30 வருடங்களாக விருது வாங்கிய புட்டங்களின் வரிசையில் என்னுடையதும் இணைந்திருப்பது உற்சாகத்தைத் தருகிறது என்றார் உற்சாகமாக சிரித்தபடி.

 

அன்பான அக்கா நான்: டான்ஸ் மாஸ்டர் கலா

Mm Director Dance Master Kala

சினிமாவில் நடன இயக்குநர் சின்னத்திரையில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் இயக்குநர் என பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறது நடன இயக்குநர் கலாவின் வாழ்க்கை. மனோரமாவை திரையுலகில் ஆச்சி என்று அழைப்பது போல, நடன இயக்குனர் கலாவை எல்லோரும் அக்கா என்றே அழைக்கிறார்கள். எம்.எம் சீசன் 7ல் பிஸியாக இருந்த கலா மாஸ்டரை நமக்காக பத்து நிமிடம் ஒதுக்கச் சொன்னோம்.

"புதுப்புது அர்த்தங்கள்' படம் தொடங்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட 350 படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராகப் பணியாற்றி உள்ளேன். இப்போது எம்.எம் சீசன் 7 வரை போய் கொண்டிருக்கிறது. என்னை எல்லோரும் மாஸ்டர் என்று அழைப்பதை விட "அக்கா' என்று அழைப்பதையே விரும்புகிறேன். அக்கா என்பதிலேயே இடைவெளி இல்லாத நெருக்கம் இருக்கும் என்று கூறி தொடர்ந்தார்.

நடனத் துறைக்கு பெண்கள் அதிகளவில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் நிலைத்திருக்க விரும்புவதில்லை. திருமணம் வரைக்கும் இருப்போம் என்கிற நினைப்போடு வந்து போய்விடுகின்றனர். இந்தத் துறையில் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். முன்புபோல இந்தத் துறைக்கு வந்தால் ஏழ்மையாகவே இருப்பார்கள் என்பதெல்லாம் இல்லை.

கலைஞர் டிவி தொடங்கும் போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதன் அடிப்படையில் மானாட மயிலாட தொடங்கினோம். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அதுதான் சீசன் 7 வரை தொடர காரணமாக இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடுவதற்கு திறமை இருப்பவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறோம் என்றார். எங்களுடையை நிகழ்ச்சியில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை கெமிஸ்ட்ரி. இப்பொழுது அது பலரும் பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.

இது போன்ற ரியாலிட்டி ஷோக்களில் நீதிபதிகளுக்கு இடையே சண்டை போடுவது டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக சிலர் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு நான்தான் இயக்குனர். என் நிகழ்ச்சியில் இந்த ஏமாற்று செய்கை இருக்காது. குஷ்பு, ரம்பா, நான் மூவருமே நல்ல தோழிகள். எங்களிடையே சண்டையே வராது!. எங்களின் தீர்ப்பும் சரியாக இருக்கும் அதனால்தான் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக தொடர காரணமாக இருக்கிறது என்று கூறி நிகழ்ச்சிக்கு கிளம்பினார் கலா மாஸ்டர்.

 

'பாப்பா தள்ளிப் போய் விளையாடு!' - சூர்யா ரசிகர்களை நக்கலடித்த முருகதாஸ்

Ar Murugadass Vs Surya Fan S Twitte

ட்விட்டரில் இப்போது சூடு பறப்பது விஜய் - சூர்யா ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மோதல்தான்.

விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி (பெயர் மாறலாம்!!)யும், சூர்யா நடிக்க கேவி ஆனந்த் இயக்கும் மாற்றானும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகின்றன.

ஒரு தீவிர சூர்யா ரசிகர் முருகதாஸுக்கும் கேவி ஆனந்துக்கும் இப்படி ட்வீட் செய்திருந்தார்:

"இந்த ஆண்டு மாற்றான் ஆண்டு. மற்றவர்கள் ஒதுங்கி நில்லுங்க. மாற்றான் = க்ளாஸ் + மாஸ்!"

இதைக் கண்டு கடுப்பாகிவிட்டார் ஏ ஆர் முருகதாஸ். இத்தனைக்கும் இவர் சூர்யாவின் ஆஸ்தான இயக்குநர் வேறு!

பதிலுக்கு அவர அனுப்பிய ட்வீட் இது:

"பாப்பா.. தள்ளிப் போய் விளையாடு!"

இந்த ட்விட்டர் போரை கவனித்து வந்த நடிகர் பிரேம்ஜி இடையில் புகுந்து 'சூப்பர் ரிப்ளை தலைவா' என முருகதாஸுக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

படம் ரிலீசாகும்போது இந்த இருதரப்பு ரசிகர்களின் அலம்பலும் நிச்சயம் தாங்க முடியாது போலிருக்கே!

 

நம் வாழ்க்கை நம் கையில்: சுஜிதா

Lovable Heroine Sujitha

மூன்று மாத குழந்தையாய் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுஜிதா. இன்றைக்கு மணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையிலும் சின்னத்திரையில் கதாநாயகியாய் நடித்து வருகிறார். சன் தொலைக்காட்சியில் மருதாணி, மெகா தொலைக்காட்சியில் வாழ்வே மாயம், மலையாளத்தில் சீரியல் என சென்னை, கேரளா, ஆந்திரா என பிஸியாக இருக்கிறார். அவரை சிரமப்பட்டு பிடித்து சீரியல் வாழ்க்கை குறித்து கேட்டோம்.

சினிமாவை விட, "டிவி'யே எனக்கு சரின்னு பட்டது, இந்த பீல்ட்டு பற்றி நானெடுத்த முடிவு சரியா இருந்ததால வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சு சந்தோஷமாயிருக்கிறேன்'' என்று மகிழ்ச்சியோடு பேட்டியை தொடங்கினார்.

சென்னையிலதான் வீடு இருக்கு. ஆனா தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளிலும் சீரியல் இருப்பதால் சென்னையில் தொடர்ந்து தங்க முடியலை. கேரளா, ஆந்திரான்னு பறக்க வேண்டியதா போச்சு.என் கணவர் சென்னையில விளம்பர படக் கம்பெனி வச்சிருக்கார். சீரியல்கள்ல நல்ல வாய்ப்பு கிடைச்சதால ஒர்க் பண்ண அனுமதிச்சிருக்கார். நான் இங்கும் அங்குமா பறப்பதை பார்த்துட்டு உனக்கு சிரமாயிருந்ததுன்னா விட்டுடு. டெக்கனிக்கல் அயிட்டங்களை கத்துக்க கம்பெனிக்கும் உதவியா இருக்கும், உனக்கு கிடைக்கும் அனுபவம் பயனுள்ளதா இருக்கும்ன்னு சொன்னார். நடிப்பை தவிர வேறு எதிலும் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததால சீரியல்களுக்காக ஊர், ஊரா பறந்திட்டிருக்கேன்.

குழந்தையாக இருக்கும் போதே அம்மா என்னை சினிமாவில விட்டுட்டாங்க. நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன். என்னோட என் அண்ணன் சுரேஷும் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்துட்டான். ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசை அப்போதே இல்லை. இருந்தாலும் எனக்கு 14 வயதிருக்கும் போது சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது. கிளாமரா நடிக்கணும்ன்னு சொன் னாங்க. முடியாதுன்னு சொல்லிட்டேன். படத்தில கூட கிளாமரா நடிக்க வேண் டாம். பப்ளிசிட்டிக்காக கிளாமரா போஸ் மட்டும் கொடுங்கன்னாங்க. உறுதியா மறுத்திட்டேன். சினிமா வாழ்க்கையை விட நிஜ வாழ்க்கை முக்கியமானது. ஹீரோயினாக நடிக்கணும்ன்னு நான் ஆசை படலை. ஏன்னா சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கணும்ங்கிற ஆசையில சினிமாவுக்கு நான் வரலை.?

ஏ.வி.எம்.., நிறுவனத்தின் ஐம்பதாம் ஆண்டுவிழாவுல சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது எனக்கும், எனது அண்ணன் சுரேஷிற்கும் கிடைச்சது. அப்போது அவங்க தயாரிச்ச "ஒரு பெண்ணின் கதை' சீரியலுக்கு 14 வயசுள்ள பெண் தேடிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் நடிக்க அழைச்சாங்க. கதையும் பிடிச்சிருந்தது. சரின்னு சொல்லிட்டு செஞ்சேன். தமிழ், மலையாளம், தெலுங்கு என சீரியல்களில் நான் நினைச்ச மாதிரி நிறைய வாய்ப்புகள் வந்தன. என்னோட கேரக்டர் நல்லபடியா எனக்கு பிடிச்ச மாதிரி அமைஞ்சதால நடிச்சேன். என்னை பார்ப்பவர்கள் மரியாதையாக பழகுறாங்க. அவுங்க குடும்பத்தில ஒருத்தங்க மாதிரி சினேகம் பாராட்டுறாங்க. சமீபத்தில ஒரு பாட்டி என்னை சந்திச்சப்ப கன்னத்தில முத்தமிட்டு வாழ்த்தினாங்க. சந்தோஷமாயிருந்தது.

நம்ம லைப் நம்ம கையில இருக்கு. நாம எப்படி செயல்படுறோமோ அப்படித்தான் லைப் இருக்கும். எதைச் செய்தாலும் யோசித்து செய்யணும். இருக்கும் "பாசிட்'டிவான சூழ் நிலைகளை பயன் படுத்திக்கிட ஆசைப்பட்டு "நெகட்டி'வான வேலைகள்ல இறங்கிடக் கூடாது. நமக்கு என்ன லிமிட்டோ அத்தோடு நின்னுக்கணும். இந்த நினைப்போடு எந்த வேலைக்கு போனாலும் பிரச்னை ஏதும் வராது. வந்தாலும் தைரியமா நின்னு ஜெயிக்கலாம்ன்னு தைரியம் தன்னால வரும்,'' என்று பொறுப்பாக சொன்னார் சுஜிதா. வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

 

ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை, : ஏற்கனவே நடித்த கேரக்டர் போலவே கதைகள் வந்தால் அதில் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அசின் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

'கஜினி' ரீமேக் மூலம் இந்தியில் அறிமுகமானேன். தொடர்ந்து தெலுங்கு 'ரெடி'யின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடித்தேன். தமிழில் 'காவலன்' படத்தில் நடித்த கேரக்டரில் இந்தியிலும் நடிக்க கேட்டார்கள். இதிலும் சல்மான்கான் ஹீரோ. நடித்த கேரக்டரில் மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் அதில் நடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளிலும் சில கேரக்டர்கள் நான் ஏற்கனவே நடித்தவையாக இருந்தன. இதனால் சில வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன். தற்போது 'கஹானி' மாதிரி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாவது பற்றி கேட்கிறீர்கள்.

இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். சமூகத்திலிருந்துதான் சினிமா கதைகள் உருவாகின்றன. குறிப்பாக சமூகத்தை பிரதிபலிப்பதுதான் சினிமா. இந்த துறை இன்னும் ஆணாதிக்கமாகத்தான் இருக்கிறது. ஹீரோக்களை முன்னிலைப்படுத்திதான் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வருவது சிறப்பானது. ஆனால், அவை குறைந்த அளவே இருக்கின்றன.

என்னைப் பற்றி அதிக வதந்திகள் வருகின்றன. சில நடிகர்களுடன் இணைத்தும் செய்திகள் வெளியாகிறது. ஆனால், வதந்திக்கான ஆயுள் குறைவு என்பதால் அது நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. இந்த வதந்திகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. என்னைப் பற்றி தெரியும் என்பதால் என் குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பெரிய ப்ளஸ்.


 

கன்னட கூலி தமிழில் வருகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : கன்னடத்தில் ரிலீசான 'கூலி', தமிழில் 'கொருக்குப்பேட்டை கூலி' பெயரில் டப் ஆகிறது. ராஜஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் பி.அஜெய்குமார் தயாரிக்கிறார். சுதீப், மம்தா, கிஷோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.எல்.ரவி. இசை, அனூப் சீலின். வசனம்: டி.எஸ்.ஆர்.முருகன், சி.சரவன். இயக்கம், பி.என்.சத்யா. படம் பற்றி அவர் கூறும்போது, ''கூலிப்படைக்கு தலைமை தாங்கி, பணத்துக்காக கொலை செய்யும் தாதா சுதீப், மம்தாவின் காதல் வலையில் சிக்குகிறார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று புரிந்துகொண்ட அவர், கத்தியை போட்டுவிட்டு, காதலியை மணக்கப் போராடுகிறார். அது நிறைவேறியதா என்பது கதை'' என்றார்.


 

காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை, : காதலரும் இந்தி நடிகருமான பிரதீக்கை தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி ஜாக்சன்.
'மதராசபட்டனம்' படத்தில் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். அடுத்து விக்ரம் ஜோடியாக 'தாண்டவம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்தில் பிரதீக் பப்பருடன் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் பிரதீக்கை லண்டன் அழைத்து சென்ற எமி, அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துள்ளார்.

இதுபற்றி எமி கூறியதாவது: பிரதீக் என் நண்பர். அவருக்கும் எனக்குமான நட்பு ஸ்பெஷலானது. லண்டனில் உள்ள என் பெற்றோருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் பிரதீக்கை அறிமுகப்படுத்தினேன். என்னை விட என் சகோதரிகளுக்கு பிரதீக்கை அதிகம் பிடித்திருக்கிறது. என் பெற்றோருக்கும் அவரை பிடித்திருக்கிறது. இந்தி பட உலகில் இனவாத பிரச்னையை நான் சந்தித்ததாக லண்டன் மீடியாவில் வெளியான செய்தி தவறானது. அதை கிசு கிசு பகுதியில் எழுதியிருந்தார்கள். அது திரித்து எழுதப்பட்ட செய்தி. மும்பையில் வசிப்பதை என் சொந்த ஊரில் இருப்பது போல இருக்கிறேன். அதனால்தான் மீண்டும் இங்கு நடிக்க வந்துள்ளேன்.
இவ்வாறு எமி கூறினார்.


 

பைக் ஓட்ட கற்கிறார் பூஜா காந்தி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : மலையாளப் படத்துக்காக பைக் ஓட்ட கற்றுவருகிறார் பூஜா காந்தி.
தமிழில் 'கொக்கி' படம் மூலம் அறிமுகமானவர் சஞ்சனா காந்தி. பின்னர் 'தலையெழுத்து', 'திருவண்ணாமலை' படங்களில் நடித்த இவர், தன் பெயரை பூஜா காந்தி என்று மாற்றிக்கொண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார். இப்போது ரேவதி வர்மா இயக்கும் 'மாட் டாட்' என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அவர் கூறியதாவது:
இந்தப் படத்தில் பத்மப்ரியா, மேக்னா ராஜ், லால் உட்பட பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. இதில் பைக் ரேஸ் லிசாவாக நான் நடிக்கிறேன். இதற்காக அதிக எடை கொண்ட பைக்கை ஓட்டி பழகி வருகிறேன். சில நேரங்களில் தடுமாற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. இதையடுத்து இந்த படத்தில் எனக்கு சவாலாக இருந்தது டயலாக். நான்கு பக்க வசனத்தை பேச வேண்டியிருந்தது. மலையாளம் தெரியாது என்றாலும் மனப்பாடம் செய்து பேசினேன். சில உச்சரிப்புகள் தவறாக இருந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு குழந்தையை போல மனப்பாடம் செய்தது புது அனுபவமாக இருந்தது.


 

51 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் வருகிறது பாசமலர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி இணைந்து நடித்த படம், 'பாசமலர்'.
1961ல் வெளியான இந்த படம் இன்றும் அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. கண்ணதாசனின் பாடல்களும், ஆருர் தாஸின் வசனங்களும் என்றைக்கும் மறக்க முடியாதவை. ஏ.பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தை இப்போது மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
டிஜிட்டல் மற்றும் இன்றைய நவீன ஒலிப்பதிவு நுட்பங்களுடன் கருப்பு, வெள்ளையில் மெருகேற்றப்பட்டு வெளியாக இருக்கிறது. இதன் உரிமையை அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பூமிநாதன் வாங்கியுள்ளார். 197 நிமிடங்கள் ஓடும் இப்படம், அப்படியே புதுப்பிக்கப்படுகிறது.
சிவாஜி கணேசனின் 'கர்ணன்' படம் மீண்டும் ரிலீசானது. அந்த வரிசையில் 'பாசமலர்' வருகிறது. மேலும், சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவை', 'வசந்த மாளிகை', 'தெய்வ மகன்' போன்ற படங்களும் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

திருமணம் பற்றி யோசிக்கவில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : எனது திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை என்று இனியா கூறினார். தற்போது தங்கர்பச்சான் இயக்கும் 'அம்மாவின் கைபேசி' படத்தில் நடித்துவரும் இனியா கூறியதாவது:
தமிழில் நான் நடித்த 'நுகம்' ரிலீசாகிறது. சாந்தனு ஜோடியாக 'அம்மாவின் கைபேசி'யில் நடிக்கிறேன். வித்தியாசமான கேரக்டர். மலையாளத்தில் 'பூபடத்தில் இல்லாத ஓரிடம்', 'ரேடியோ' படங்களில் நடிக்கிறேன். தமிழில் நல்ல கேரக்டர்களுக்கு காத்திருக்கிறேன். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அஞ்சல் மூலம் பி.பி.ஏ முதலாண்டு படிக்கிறேன். எனக்கு 19 வயது ஆகிறது. அதற்குள் திருமணம் பற்றி கேட்கிறீர்கள். அதற்கு அவசரம் இல்லை. இப்போது நடிப்பு, படிப்பு இரண்டில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்.


 

விஷால் படத்தில் இருந்து டாப்ஸி நீக்கம் அஞ்சலி, காயத்ரி நடிக்கிறார்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : விஷால் நடிக்கும் Ôமதகஜ ராஜாÕ படத்திலிருந்து டாப்ஸி திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அஞ்சலியும் தெலுங்கு நடிகை காயத்ரியும் ஒப்பந்தமாகியுள்ளனர்.சுந்தர்.சி இயக்கத்தில் குஷ்பு தயாரிக்கும் படம், Ôமதகஜ ராஜாÕ. இதில் விஷால் ஜோடியாக நடிக்க ராதா மகள் கார்த்திகா ஒப்பந்தமானார்.

திடீரென அவர் விலகினார். கதை மாறியதாலும் படத்தில் 2 ஹீரோயின் கேரக்டர் புகுத¢தப்பட்டதாலும் விலகுவதாக கார்த்திகா தெரிவித்தார். இதையடுத்து அந்த கேரக்டருக்கு சரத்குமார் மகள் வரலட்சுமி ஒப்பந்தமானார். இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி தேர்வு செய்யப்பட்டார். கதைப்படி டாப்ஸிக்கு இரண்டாவது ஹீரோயின் வேடம்தான். ஆனால் பேட்டிகளில் நான்தான் ஹீரோயின் என கூறியிருந்தார் டாப்ஸி.

இதற்கிடையே சமீபத்தில் பேட்டியளித்த டாப்ஸி, பட ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. விஷால், வரலட்சுமியுடன் நடித்தேன். அவர்கள் தமிழில் அடித்த ஜோக்குகள் எனக்கு புரியவில்லை என கூறியிருந்தார். படம் சம்பந்தமாகவும் படப்பிடிப்பு விஷயங்கள் பற்றியும் வெளியில் சொல்லக்கூடாது என டாப்ஸிக்கு தயாரிப்பு தரப்பில் நிபந்தனை போடப்பட்டிருந்ததாம். இதை மீறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அஞ்சலியும் தெலுங்கு நடிகை காயத்ரியும் புதிதாக இந்த படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளனர்.


 

தமிழ் சினிமாவுக்கு கடன்பட்டிருக்கிறேன் அதுல் குல்கர்னி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ஒயிட் இன்போடைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'சுழல்'. பாரீஸ், சாரு, ரோஸின், ஜோதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அதுல் குல்கர்னி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எல்.வி.கணேசன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. இதில் அதுல் குல்கர்னி பேசியதாவது:
'ஹே ராம்' படம் மூலம் கமலஹாசன் என்னை அறிமுகப்படுத்தினார். இப்போது பல மொழிகளில் நடித்தாலும் தமிழில் நடிக்கும்போது என் சொந்த மொழியில் நடிப்பது போன்ற உணர்வு. என் திறமைகளை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்புகளை தரும் தமிழ் சினிமாவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் இளைஞர்களோடு பணியாற்றி இருக்கிறேன். இது புது அனுபவம். தமிழ் சினிமாவில் அற்புதமான படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைக்கும் படங்களை தமிழ் டெக்னீஷியன்கள் கொடுக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படமும் சேரும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு, எடிட்டர் லெனின் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் ஆர்.ஜெயகுமார் நன்றி கூறினார்.


 

கமர்சியல் பார்முலாவை உடைக்கிறேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : ஏ.வெங்கடேஷ் இயக்கும் படம் 'எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி'. தேஜஸ், உத்ரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் பற்றி ஏ.வெங்கடேஷ் கூறியதாவது: இதுவரை கமர்சியல் பார்முலாவிலேயே படம் பண்ணியுள்ளேன். முதன் முறையாக, அதை உடைத்து கமர்சியல் சினிமா எடுக்க முடியும் என்பதை சவாலாக ஏற்று இதை உருவாக்குகிறேன். 20 வயது ஹீரோவுக்கு நாற்பதை தாண்டிய நான், தம்பி ராமையா, சிங்கம்புலி நண்பர்கள். ஹீரோ ஒரு பெண்ணை காதலிப்பார். அதை தடுப்பதும், கெடுப்பதும்தான் எங்கள் வேலை. அது ஏன் என்பது திரைக்கதை.