6 மாதங்களில் 105 தமிழ்ப் படங்கள்.. ஹிட்டடிச்சதோ 10 தான்.....

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றோடு அரையாண்டு முடிந்து விட்டது, இதுவரை இந்த அரையாண்டில் 105 நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வெளியான 105 படங்களில் வெற்றி பெற்ற படங்களின் என்ணிக்கை வெறும் 10 தான்.

என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா , அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை. பெரிய நடிகர்களின் படங்கள் கூட வசூலில் சொதப்பி தோல்வி அடைந்தது, ஆனால் அதே நேரத்தில் சிறிய நடிகர்களின் படங்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக நல்ல வசூலைக் குவித்தன.

இதுவரை வெளிவந்த படங்களில் வெற்றி பெற்ற படங்கள் மற்றும் வசூலைக் குவித்த படங்கள் எவை என்று பார்க்கலாம்.

Tamil Cinema Half- Year Completed

நஷ்டத்தைத் தவிர்த்த படங்கள்

இதுவரை வெளிவந்த 105 படங்களில் பெரிதாக லாபம் இல்லை, அதே நேரம் கையைக் கடிக்கும் அளவிற்கு நஷ்டமும் இல்லை என்று விநியோகஸ்தர்கள் கூறிய படங்களின் வரிசை இது.

கவுதம் கார்த்தியின் வை ராஜா வை, நான் கடவுள் ராஜேந்திரனின் தண்ணில கண்டம், நகுல்- தினேஷ் நடிப்பில் வெளிவந்த தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், சந்தானத்தின் இனிமே இப்படித்தான், விஜய் ஆண்டனியின் இந்தியா- பாகிஸ்தான், கமலின் உத்தம வில்லன், ஆர்யா- விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கின்ற பொதுவுடைமை, சூர்யாவின் மாசு மற்றும் ராஜ தந்திரம் ஆகிய படங்கள் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

ஏமாற்றிய படங்களின் வரிசை இது

பெரிய நடிகர்களின் படங்கள், நல்ல கதை உள்ள படங்கள் கண்டிப்பாக ஓடிவிடும் என்று மனக்கணக்கு போட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்த படங்கள் இவை.

எஸ்.ஜே.சூர்யாவின் இசை, சித்தார்த்தின் எனக்குள் ஒருவன், விஷாலின் ஆம்பள, ஜெய் நடிப்பில் வலியவன், விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்த சகாப்தம், உதயநிதியின் நண்பன்டா, மற்றும் வைகைப் புயலின் எலி. போன்ற படங்கள் மிகுந்த நஷ்டத்தைக் கொடுத்த படங்கள் என்று கூறுகிறார்கள்.

பெரிய பட்ஜெட்டில் லாபம் ஈட்டிய படங்கள்

ஷங்கரின் ஐ மற்றும் ராகவா லாரன்சின் காஞ்சனா 2 ஆகிய படங்கள் பெரிய பட்ஜெட்களில் வெளிவந்து லாபம் ஈட்டிய படங்கள்.

ஐ பட்ஜெட் 150 கோடி, வசூல் ( தமிழ்,தெலுங்கு,இந்தி) 190 கோடி

காஞ்சனா 2 வசூல் விவரம் 100 கோடிகளுக்கும் அதிகமாக உள்ளது.

சிறிய பட்ஜெட் படங்கள்

அருள்நிதியின் டிமாண்டி காலனி மற்றும் தனுஷின் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை போன்ற படங்கள் சிறிய பட்ஜெட்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள் ஆகும்.

மீடியம் பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் வெற்றிப் படங்கள்

அஜீத்தின் என்னை அறிந்தால், தனுஷின் அநேகன், கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி, ஜோதிகாவின் 36 வயதினிலே, ஜிவி பிரகாஷின் டார்லிங் மற்றும் விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை போன்ற படங்கள் பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றியை சந்தித்து இருக்கின்றன.

இதில் அறிமுக நடிகர் ஜிவி பிரகாஷின் வெற்றி படமாக டார்லிங் படம் அமைந்தது.

படங்கள் 105 பட்ஜெட் 1100 கோடி

இதுவரை இந்த அரையாண்டில் மொத்தம் 105 தமிழ்ப் படங்கள் வெளிவந்து இருக்கின்றன, அவற்றின் மொத்த பட்ஜெட் 1100 கோடிகளைத் தாண்டி இருக்கிறது. ஆனால் அவ்வளவு படங்களும் வெற்றி பெறவில்லை எப்படிப் பார்த்தாலும் தமிழ் சினிமா பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது, அடுத்த அரையாண்டாவது வெற்றி ஆண்டாக மாறட்டும்.

 

அஜீத்தே சொல்லிட்டார்... இனி என் பெயர் சிவபாலன்! - அப்புக்குட்டி

தேசிய விருது பெற்ற அப்பு குட்டி சமீபத்தில் அவர் இது வரை சினிமாவில் கூட ஏற்றிராத நவ நாகரீக உடைகள் அணிந்து புகை படம் எடுத்துக் கொண்டார். அவரது உடைகளோ, நவ நாகரீக தோற்றமோ அவரை உற்சாகமூட்டியதைவிட அந்த புகைப் படங்களை எடுத்தவர்தான் ஆச்சரியப்படுத்தினார்.

ஆமாம் , நடிகர் அஜீத் குமார்தான் அவரை விதவிதமாய் படம் எடுத்த புகை பட நிபுணர்.

இனி அப்புக்குட்டி பேசுகிறார்...

"வீரம்' படப்பிடிப்பின் போது அஜீத் சார் என்னிடம், தம்பி எல்லா படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். முடிந்த வரை படத்துக்கு படம் தோற்றத்தை மாற்ற பாருங்கள். கிராமிய படங்களைத் தவிர நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்கும் வகையில் தோற்றத்தில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினார்.

Appukkutty changes his name after Ajith's advice

என்னை யார் சார் இப்படி எல்லாம் மாத்துவாங்க , யார் சார் படம் பிடிப்பாங்க என்று நானும் கேட்டேன். புன்னகையோடு விடைப் பெற்றவர் சில நாட்களுக்கு முன்னர் என்னை அழைத்து 29 ஆம் தேதி நீங்க ப்ரீயா இருந்தா சொல்லுங்க என்றார். நானும் வரேன்னு சொன்னேன்.

எங்கே , என்ன , எதுன்னு கூடக் கேட்காமல், அவர் சொன்ன இடத்துக்கு வந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சிது , அவர் என்னை வைத்து புகைப்படம் எடுக்க போறார்னு. அதை விட ஆச்சரியம் என்னனா , என் உருவ அமைப்புக்கு ஏற்ப கச்சிதமாக தைக்க பட்ட உடைகள், உயர்தரமான அணிகலன்கள், சிறந்த ஒப்பனை சாதனங்கள், எனக்காகவே வரவழைக்க பட்ட பிரத்தியேக ஒப்பனையாளர்கள் என பிரமாதப் படுத்தி இருந்தார். ஆச்சரியத்தில் வாயை பிளந்தவன் இன்னும் மூடவே இல்லை.

Appukkutty changes his name after Ajith's advice

தவிர எனது இயற் பெயரைக் கேட்டுத் தெரிந்துக் கொண்ட அவர் அந்த பெயரான சிவ பாலன் என்றே என்னை அழைத்தார். மற்றவர்களையும் அவ்வாறே அழைக்குமாறு கூறினார். இனிமேல் நானும் எனது பெயரை சிவபாலன் என்கிற அப்புக்குட்டி என்றே அழைக்கபடுவதை விரும்புகிறேன். ஒரு கைத் தேர்ந்த புகைப்பட நிபுணர் போல் அவர் காட்டிய ஈடுபாடும், தொழில் நேர்த்தியும் என்னைப் பரவசப்படுத்தியது.

Appukkutty changes his name after Ajith's advice

புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த எனக்கு பேச்சே வரவில்லை. இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம். இது என்னால் மறக்க முடியாத ஒரு நாளாகும்," என தெரிவித்தார் சிவபாலன் என்கிற அப்பு குட்டி.

 

அப்புக்குட்டியை ஒரு போட்டோதான் எடுத்தார் அஜீத்.. அதுக்கே இவ்ளோ அக்கப்போறா?

கடந்த சில தினங்களாக இணையதளங்களில், சமூக வலைத் தளங்களில் ஒரு செய்தி.. அதுவும் கிட்டத்தட்ட அஃபிஷியல் அறிவிப்பு போலவே!

அஜீத் ஒரு புதிய படம் இயக்குகிறார்!

-இதுதான் அந்த செய்தி. அவ்வளவுதான் அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் குதியாலம் போட, அஜீத் என்ன படமெடுக்கிறார்.. அவருக்கு இயக்கத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள்.

Ajith hasn't any plan to direct anyone, says Manager

இன்று அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

அதாவது அஜீத் பெரும் படமும் இயக்கவில்லை, குறும்படமும் இயக்கவில்லை. அவர் செய்ததெல்லாம், வீரம் படத்தில் தன்னுடன் நடித்த அப்புக்குட்டியை ஒரு புகைப்படம் எடுத்தார். அவ்வளவுதான். அதற்குள் இத்தனை செய்திகள். இவை அனைத்துமே பொய்யானவை. அஜீத் படம் இயக்கினால் அதை நாங்களே முறைப்படி அறிவிக்க மாட்டோமா? என்ற கேள்வியோடு முடித்திருக்கிறார் தன் விளக்கத்தை.

நிற்க...

அஜீத்துக்கு திரைப்பட உருவாக்கம், திரைக்கதை எழுதுவதில் எக்கச்சக்க ஆர்வம் உண்டு. காதல் மன்னன் தொடங்கி அசல் வரை கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் ரேஞ்சுக்கு களத்தில் இறங்கி வேலைப் பார்த்தவர் அஜீத். உண்மையிலேயே படம் இயக்கும் முழு தகுதியும் படைத்தவர் தல என்பது கூடுதல் தகவல்.

 

சக நடிகரை அடித்துத் துவைத்த பிரியங்கா சோப்ரா

மும்பை: இந்தி இயக்குநர் பிரகாஷ் ஜஹா இயக்கத்தில் பிரியங்கா போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடித்து வரும் படம் கங்கஜால் 2. இந்தப் படத்தில் அதிரடி ஆக்க்ஷன் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா.

வட இந்தியாவின் நெருக்கடி மிகுந்த போபால் தெருக்களில் இந்தப் படத்தின் கட்சிகளைப் படம் பிடித்து வருகிறார் இயக்குநர் பிரகாஷ் ஜஹா. சமீபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி நிற்க ஒரு ஆக்க்ஷன் காட்சியில் நடித்தார் பிரியங்கா.

Priyanka Chopra beats co-worker

போலீஸ் உடையில் மிடுக்காக வரும் பிரியங்கா ரவுடி ஒருவரை அடித்து நொறுக்குவது போன்ற காட்சியில், நிஜமாகவே சக நடிகர் ஒருவரை லத்தியால் நொறுக்கி எடுத்திருக்கிறார் பிரியங்கா.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோ, இணையதளங்களில் ரகசியமாக கசிந்து விட்டது என்று கூறுகின்றனர் படப்பிடிப்புக் குழுவினர்.

காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிக் கூறும் விதமாக இந்தப் படத்தின், கதையை எடுத்து வருகிறாராம் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பிரகாஷ் ஜஹா.

 

ஹாலிவுட்டின் புதிய ஸ்பைடர்மேன் ரெடி

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்களில் மிகவும் பிரபலமானவை ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், அயன் மேன் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள். இந்தப் படங்களில் நடிப்பது ஹாலிவுட் நடிகர்களின் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.

அதிலும் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பைடர்மேன் படங்களில் நடிப்பது என்றால் கேட்கவா வேண்டும், இதுவரை ஸ்பைடர்மேன் படங்களில் 3 பாகங்கள் முறையே வந்து வெற்றி பெற்று உள்ளன.

New Spider Man – Tom Holland

முதல் பாகத்தில் டோபி மகியூரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தில் ஆண்ட்ரூ கார்பீல்டும், ஸ்பைடர்மேன்களாக நடித்து இருந்தனர். தற்போது ஸ்பைடர்மேனின் நான்காவது பாகத்திற்கான கதை தயாராகி விட்டது.

நான்காம் பாகத்தில் நடிப்பதற்கு சில மாதங்களாகவே நடிகர்கள் தேர்வு நடந்து வந்தது, இதிலிருந்து தற்போது நான்காவது ஸ்பைடர்மேனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். புதிய ஸ்பைடர்மேனின் பெயர் டாம் ஹாலண்ட், 19 வயதான இவர் ஏற்கனவே தி இம்பாசிபிள் மற்றும் சிவில் வார் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி நடித்து இருக்கிறார்.

மார்வேல் ஸ்டுடியோ மற்றும் படத்தைத் தயாரிக்கும் சோனி பிக்சர்ஸ் இரு நிறுவனங்களும்,நான்காவது ஸ்பைடர்மேன் பற்றிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நான்காம் பாகத்தை இயக்குகிறார் ஹாலிவுட் இயக்குநர் ஜான் வாட்ஸ், ஸ்பைடர்மேன் பார்ட் 4 படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர் 2017 ம் ஆண்டில் படம் வெளியாகிறது.

 

புலி படத்தில் நடிக்க விஜய்யை சம்மதிக்க வைத்தது யார் தெரியுமா?

சிம்பு இயக்கும் புலி படத்தில் விஜய் நடிக்க ஒப்புக் கொண்டதன் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலி கதையை நடிகர் விஜய் ஒப்புக்கொண்டது குறித்து சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

Why Vijay accepts to do Puli?

இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது அது விஜய்க்கு சரியாகப் படவில்லை. வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் இருந்ததால் உடனே ஓகே சொல்லவில்லை. இன்னொரு அவர் தனது முகத் தோற்றத்தையோ கெட்டப்பையோ இதுவரை மாற்றியதுமில்லை.

ஆனால் விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவர் மகன் சஞ்சய்க்கு கதை மிகவும் பிடித்துப்போனது. 'அப்பா இது நீங்கள் பண்ணவேண்டிய படம். கண்டிப்பாக ஹிட் ஆகும்.. உங்களுக்கு பெருமை தரும்,' என்று உற்சாகமாகப் பேசியுள்ளான்.

மகன் இவ்வளவு நம்பிக்கையுடன் சொன்னது மட்டுமில்லாமல், இந்தப் படம் பண்ணினால் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றும் சொன்னது விஜய்யை மனம் மாற வைத்து சிம்புதேவனுக்கு சம்மதம் சொல்ல வைத்ததாம்.

வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் இணைந்து ஆடியுள்ளான் சிறுவன் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... இன்றோடு ஓவர் ஓவர்!

சென்னை: ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பில் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றது. 2010 ம் ஆண்டில் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இந்தப் படத்திற்குப் பின்னர் 5 வருடங்கள் கழித்து வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கின்றனர் ஆர்யா சந்தானம் மற்றும் இயக்குநர் ராஜேஷ் இம்மூவரும்.

Arya’s VSOP Shooting  Finished

ஆர்யா ஜோடியாக முதல் முறையாக தமன்னா இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை சொந்தமாகத் தயாரிக்கிறார் நடிகர் ஆர்யா. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைத் தயாரித்த ஆர்யா, அழகுராஜா படத்தின் தோல்வியில் இருந்து இயக்குநர் ராஜேசைக் கைதூக்கி விட எண்ணி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் தனக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்ததற்கு, நன்றி காட்டும் விதமாக இந்த உதவிகளை இயக்குநர் ராஜேஷுக்கு செய்து கொடுத்திருக்கிறார் ஆர்யா.

படம் தற்போது இறுதிக் கட்ட வேலைகளில் இருக்கின்றது,விரைவில் பட வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளனர் விஎஸ்ஓபி படக்குழுவினர்.

 

வேர் ஈஸ் வித்யாபாலன்- கிரைம் கலந்த காமெடி

ஹைதராபாத்: வேர் ஈஸ் வித்யா பாலன் அதாவது வித்யாபாலன் எங்கே என்னும் அர்த்தத்தில் வந்திருக்கும் தெலுங்குப் படம் இது. படத்தைப் பிரபலமாக்க இப்படி ஒரு தலைப்பை வைத்து விட்டு நாங்கள் வித்யா பாலனை தவறாக எதுவும் சித்தரிக்கவில்லை என்று பக்கம் பக்கமாக பேட்டி தட்டினார் படத்தின் இயக்குநர் ஸ்ரீநிவாஸ்.

ஆமாம் அவர் சொன்னதுபோல படத்தில் வித்யா பாலனைப் பற்றி ஒன்றும் இல்லை தான், அப்படியென்றால் படத்தின் கதை என்னவென்று கேட்கிறீர்களா படத்தின் நாயகன் காக்கிநாடா கிரண்(பிரின்ஸ்) பிடெக் பட்டம் பெற்ற ஒரு பட்டதாரிப் பையன் வருமானத்திற்காக ஒரு பீஸா கடையில் பீஸா டெலிவெரி செய்யும் பையனாக வேலை செய்கிறார்.

Where is Vidya Balan?

இவருக்கு டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் ஸ்வாதியுடன் காதல் (ஜோதி செட்டி). எல்லாம் சீராகப் போய்க் கொண்டிருக்கும் ஒரு சுபயோக தினத்தில் ஒரு கொலை முடிச்சில் மாட்டிக் கொள்கிறார்கள் நாயகனும், நாயகியும்.

Where is Vidya Balan?

இருவரும் அதிலிருந்து மீண்டு வந்தார்களா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ், நல்ல ஒரு விறுவிறுப்பான திரைக்கதையைக் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீநிவாஸ். மேலும் பண மோசடி, உறுப்புகளைக் கடத்துவது மற்றும் திருநங்கைகள் பற்றிய பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு, அதனைச் சாதுரியமாகக் கையாண்டு இருக்கிறார்.

Where is Vidya Balan?

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்கிறது, அதனை ஈடு செய்யும் விதமாக இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகக் கொண்டு சென்று படத்தை சுவாரஸ்யமாக்கி விட்டனர்.

 

விபத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் ஜெகதி... ஓடிச்சென்று முத்தமிட்ட 2வது மனைவியின் மகள்!

கார் விபத்தில் மரணத்தின் விளிம்புக்கே போய், சிகிச்சைப் பெற்று வந்த ஜெகதி ஸ்ரீகுமார் உடல் நலம் தேறியபிறகு முதல் முறையாக நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதில் அவரது இரண்டாவது மனைவியின் மகள் கண்ணீருடன் பங்கேற்று தந்தைக்கு முத்தமிட்டு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தார்.

கடந்த மார்ச் 2012-ம் ஆண்டு மிக மோசமான விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் ஜெகதி ஸ்ரீ குமார். அவரது வாழ்க்கையே இதில் ஸ்தம்பித்துப் போனது. மூன்றாண்டுகள் தீவிர சிகிச்சைக்குப் பிறது ஓரளவு உடல் நலம் தேறி வந்துள்ளார் ஜெகதி. அவருக்கு இன்னும் பேச்சுத் திறன் கூட முழுமையாகத் திரும்பவில்லை.

Daughter steals the show on Jagathy's comeback

இந்த நிலையில், கோட்டயத்தில் உள்ள ஒரு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜெகதி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ஜெகதி பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவரது இரண்டாவது மனைவியின் மகள் ஸ்ரீலட்சுமி வந்திருந்தார்.

தன் தந்தையைப் பார்த்ததும் மேடைக்கு ஓடிச் சென்று, அவரை முத்துமிட்டு, கண்ணீர் விட்டார். ஜெகதியும் மகளை முத்தமிட்டார். இந்தக் காட்சியைப் படம்பிடிக்க கேமராக்காரர்கள் பாய, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அந்தப் பெண்ணை அப்புறப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். பின்னர் மேடையிலேயே தந்தையுடன் சில நிமிடங்கள் அமர வைக்கப்பட்டார் ஸ்ரீலட்சுமி.

ஜெகதியின் முதல் மனைவி மல்லிகா சுகுமாறன். இவர் பிரபல நடிகையும் கூட. 1974-ல் இவரைத் திருமணம் செய்த ஜெகதி, 1979ல் விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பிறகு கலா என்பவரைத் திருமணம் செய்தார். 1979-ல் திருமணம் செய்து, 1984-ல் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஸ்ரீலட்சுமி.

மூன்றாவதாக ஷோபாவைத் திருமணம் செய்து, அவருடன்தான் இதுவரை வாழ்ந்து வருகிறார் ஜெகதி.

ஜெகதி மருத்துவமனையிலிருந்தபோது, அவரைப் பார்க்க பல முறை முயன்றும், ஷோபாவும் அவர் பிள்ளைகளும் அனுமதி மறுத்ததால்தான், இந்த நிகழ்ச்சியில் போய் தன் அப்பாவைப் பார்த்தார் ஸ்ரீலட்சுமி என கலா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலட்சுமி கூறுகையில், " அப்பா என்னை அடையாளம் கண்டு கொண்டார். என் படிப்பு குறித்து விசாரித்தார். எனக்கு முத்தமிட்டு வாழ்த்தி அனுப்பினார்," என்றார்.

 

'நடிகர்களே, மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்பாதீர்கள்!' - யாரை எச்சரிக்கிறார் ராதிகா?

மல்லாக்க படுத்து கொண்டு எச்சில் துப்பினால் அது நம் மீதுதான் விழும் என்பதை இளைய தலைமுறை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென நடிகை ராதிகா பங்கேற்ற சினிமா விழாவில் பேசினார்.

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்து, ஹன்சிகா நடித்துள்ள ‘உயிரே உயிரே' படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா பேசுகையில், "இங்கு வந்துள்ள எல்லோரும் பல ஆண்டுகளாக பழகியிருக்கிறோம்.

எங்களுக்குள் எப்போதும் எந்த விதமான பிரச்னையும் வந்ததில்லை. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷமாக பங்கேற்கிறோம்.

Is it Radhika's warning to Vishal & co?

ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மரியாதையோ, நட்பின் முக்கியத்துவமோ தெரிவதில்லை.

மல்லாந்து படுத்துக் கொண்டு மேலே எச்சில் துப்பினால், அது நம் மீதுதான் விழும் என்பதை இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும். நாம் நடிகர்கள், ஒரே குடும்பம் மாதிரி என்பதை மனதில் கொள்ளுங்கள்,'' என்றார்.

நடிகர் சங்க கட்டட விவகாரமும், நடிகர் சங்க தேர்தல பிரச்னையும் தீவிரமடைந்துள்ள நிலையில் நடிகை ராதிகா இதுபோல பொடி வைத்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக தன் கணவர் சரத்குமார் மற்றும் சகோதரர் ராதாரவியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஷாலை மனதில் வைத்துத்தான் ராதிகா இப்படி பேசியிருக்கிறார் என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது!

 

நான் அழகான பெண்ணில்லை – உண்மையை ஒத்துக் கொள்ளும் சமந்தா

சென்னை: தமிழ்.தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாகத் திகழும் நடிகை சமந்தா, நான் ஒன்றும் அழகான பெண்ணில்லை என்று உண்மையை ஒத்துக் கொண்டுள்ளார்.

என்னது சமந்தா அழகில்லையா என்று பொங்கி விடாமல் மேலே படியுங்கள் நான் ஒன்றும் பிறக்கும் போதே அழகான பெண்ணாக பிறந்து விடவில்லை, பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் யாருமே நம்மை சைட் அடிக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன்.

I Am Not So Beautiful – Samantha Open Talk

ஒரு சுமாரான பெண்ணாகக் கூட என்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்று உங்கள் கண்களுக்கு நான் அழகாகத் தெரிகிறேன் என்றால் அதற்குப் பின்னால் பல பேரின் உழைப்பு இருக்கின்றது.

மேலும் இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கை நான் ஆசைப்பட்டு பெற்றது. அதனால் எனது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி என்னை இன்னும் அழகாகக் காட்டுகிறது, என்று மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். ஒரு முன்னணி நடிகையாக இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டு இருக்கிறார் நடிகை சமந்தா.

 

அடுத்த ஹீரோ கிளம்பிட்டாருய்யா…

டிவியில் காமெடி நிகழ்ச்சியில் வந்தவர் தொகுப்பாளராகி சினிமாவில் சக்சஸ்ஃபுல் ஹீரோவாகி விட்டார். சிவமான ஹீரோவுக்கு முன்பிருந்தே சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்துக்கொண்டிருந்தவர்கள் சீரியலில் ஹீரோவானார்கள். இதில் ஏற்கனவே ஒருவர் சினிமாவில் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

என்னவாயிற்றோ ஏது ஆயிற்றோ போன வேகத்திலேயே திரும்ப சூர்ய தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.

அதே சூர்ய தொலைக்காட்சியில் செல்வமாக நடித்து இல்லத்தரசிகளின் செல்லமான ஹீரோ தற்போது சினிமாவில் ஹீரோவாகப் போகிறாராம். அதற்காக கதை கேட்டு வருகிறாராம்.

சின்ன சின்ன வேஷமெல்லாம் வேணாம்... நடிச்சா ஹீரோதான் என்று கூறும் அந்த டிவி ஹீரோ தற்போது தொகுத்து வழங்கும் நடன நிகழ்ச்சி மன நிறைவுக்காக என்கிறார். வெற்றியான ஹீரோவுக்கு நண்பரான இந்த டிவி ஹீரோவுக்கு இனி பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம். வெள்ளித்திரையில் ஹீரோவான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார் செல்லமான செல்வம்.

 

ஒரு ஹிட் குடுத்துட்டா சிஎம் ஆகிலாம்னு கணக்கு போடறாங்க! - மோகன்பாபு

சென்னை: இப்போதெல்லாம் புதிதாக வரும் நடிகர்கள் ஒரு ஹிட் கொடுத்தாலே போதும் முதலமைச்சர் ஆகிடலாம் என கணக்குப் போடுகிறார்கள், என கிண்டலடித்தார் நடிகர் மோகன்பாபு.

உயிரே உயிரே படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற மோன்பாபு கூறுகையில், "திரையுலகில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை... நல்ல நட்பாட சூழல் இல்லை என்று ராதிகாவும் ஸ்ரீப்ரியாவும் பேசியதைக் கேட்டேன். நமது நட்பு, காலம் வேறு. அவர்கள் வேறு. அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து, நமது நட்பை எடுத்துச் சொல்லலாம். ஆனால் அறிவுரை சொல்லக் கூடாது.

Mohan Babu blasts young actors

இப்போதெல்லாம் சில நடிகர்கள் ஒரே ஒரு ஹிட் கொடுத்துவிட்டால்கூட உடனே முதலமைச்சர் பதவியைப் பிடித்துவிடலாம் என்று நினைத்து, அதற்கேற்ப வசனங்கள் காட்சிகள் வைக்கச் சொல்கிறார்கள்.

சிஎம் போஸ்ட்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா... எப்பேர்ப்பட்ட பதவி அது? சினிமாவிலிருந்து சிஎம் ஆனவர்கள் அத்தனை சுலபத்தில் அந்த நிலைக்கு வந்துவிடவில்லை," என்றார்.

 

கெட்ட பையன்டா இந்த கார்த்தி – ஜிவி பிரகாஷின் புதிய தலைப்பு

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் தற்போது ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் இசை என்று காலில் சக்கரம் கட்டாத குறையாக சுற்றிச் சுழன்று வருகிறார்.

பென்சில் படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் டார்லிங் படம் முந்திக் கொண்டதில் இன்று தமிழ் சினிமாவின் இளம் நாயகனாகி விட்டார் ஜிவி, தற்போது திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

GV Prakash’s  Select Some  interesting titles

இவருடன் ஹீரோயினாக கயல் ஆனந்தி மற்றும் சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றோரும் இந்தப் படத்தில் நடித்திருகின்றனர். இது போதாதென்று நடிகர் ஆர்யாவையும் சிறப்புத் தோற்றத்தில் படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ஜிவி.

அடுத்து ஜிவி பிரகாஷின் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா கெட்ட பையன்டா இந்த கார்த்தி, சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த முள்ளும் மலரும் படத்தின் மிகப் புகழ்பெற்ற வசனமான "கெட்ட பய சார்" இந்த காளி வசனத்தைத் தான் இப்படி மாற்றி வைத்திருக்கிறார்.

வெற்றிமாறன் திரைக்கதையும் , அட்லீ வசனமும் எழுத புதிய இயக்குனர்களான சங்கர்- குணா இயக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இதெல்லாம் பரவாயில்லை இப்போது புதிதாக வெளியாகியிருக்கும் மற்றொரு தகவல் பாண்டிராஜின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜிவி பிரகாஷ், இந்தப் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? பாட்ஷா என்கிற ஆண்டனி இது எப்டி இருக்கு..

 

உலகிலேயே மிகப்பெரிய போஸ்டர்... கின்னஸுக்கு போகிறது பாகுபலி?

திருவனந்தபுரம்: மிகவும் அதிகமான பொருட்செலவில், ஏராளாமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் பாகுபலி படம். அடுத்த மாதம் ஜூலை 10 தேதி தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் படம் வெளியாகிறது , படத்தின் வெளியீட்டுத் தேதியை இந்தியத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை கொச்சியில் மலையாள பாகுபலி படத்தின் பாடல்களை, படத்தின் நட்சத்திரங்களான பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராஜமௌலி மற்றும் ராணா போன்றோர் கலந்து கொண்டு வெளியிட்டனர்.

Guinness Record for Baahubali Poster?

தமிழ் பாகுபலி படத்தின் டப்பிங் தான் மலையாள பாகுபலி எனினும் டப்பிங் படமாக இருந்தாலும், படத்திற்கு நிறைய விளம்பரம் செய்து நேற்று பாடல்களை வெளியிட்டனர். இதில் இன்னும் ஒரு சிறப்பாக மலையாள இசை வெளியீட்டின் போஸ்டரை மிகப் பெரிதாக வடிவமைத்து கவனத்தை ஈர்த்திருக்கின்றனர்.

உலகிலேயே மிகப்பெரிய போஸ்டர் என்னும் பெருமையை இந்தப் போஸ்டர் பெற்றுள்ளது, தற்போது இந்தப் போஸ்டரை கின்னஸுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

பாகுபலி போஸ்டர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறதா என்று பார்க்கலாம்.

 

தனுஷ் என்னை தமிழ்ப் பெண்ணாக மாற்றிவிட்டார் – புகழ்ந்து தள்ளும் எமி ஜாக்சன்

சென்னை: மதராசப்பட்டினம் படத்தில் ஆர்யாவின் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன், சுமார் 5 வருடங்களில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். இந்த தாமதத்தை ஈடு செய்யும் விதமாக தற்போது மூன்று படங்களில் ஒரே சமயத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதியுடன் கெத்து, தனுஷுடன் வேலை இல்லாப் பட்டதாரி, விஜயின் அடுத்த படம் என்று பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் எமி, தனுஷ் தன்னை மாற்றி விட்டதாகக் கூறி இருக்கிறார்.

Actor Danush Helped  Improve My Acting Style- Amy Jackson

வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் மேக்கப் எதுவும் வேண்டாம், ஒரு பெண்ணாக இயல்பாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். லண்டனில் பிறந்து வளர்ந்த எமி இதனைக் கேட்பதாகத் தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் தனுஷ் ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று எமியைக் கூப்பிட்டு டியுஷன் எடுத்திருக்கிறார், அது மட்டுமின்றி ஆன் தி ஸ்பாட்டில் வசனங்களிக் கொடுத்து நடிக்கச் சொல்லியிருக்கிறார்.

இதனால் எனது நடிப்புத் திறமை நன்றாக வளர்கிறது, தனுஷ் என்னைத் தமிழ்ப் பெண்ணாகவே மாற்றி விட்டார் என்று போகுமிடமெல்லாம் தனுஷ் புகழைப் பாடி வருகிறாராம் எமி.

 

தொடர்ந்து தோல்வி அடையும் படங்கள்- சரிகிறதா நயன்தாராவின் மார்க்கெட்

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகின்றன, இதனால் நயன்தாராவின் மார்க்கெட் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் தொடர்ந்து கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் நயன்தாரா, சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிக்க ரூபாய் 3 கோடி சம்பளம் கேட்டு ஆந்திராவையே அலற வைத்தார்.

Nayanthara Market Now Going Down?

ஆனால் சமீப காலமாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார் நயன்தாரா, இது கதிர்வேலன் காதல், நண்பன்டா, மாசு என்கிற மாசிலாமணி போன்ற 3 படங்களுமே இவர் நடிப்பில் வெளிவந்து தோல்வியை ருசித்துள்ளன.

இதனால் தமிழ்த் திரையுலகில் சரிவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் நயன்தாரா.

 

தொடரும் குழப்பம்... டிடியை தக்க வைக்க மெனக்கெடுகிறது விஜய் டிவி?

சென்னை: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சித் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. டிடி என்றால் தூர்தர்ஷன் என்ற நிலையை மாற்றி டிடி என்றால் திவ்யதர்ஷினி என்று மக்களின் மனதில் பதியவைத்த பெருமை இவரையே சேரும்.

விஜய் டிவி என்றாலே திவ்யதர்ஷினி தான் பிரபலமான தொகுப்பாளர் என்று மக்களின் மனதில் பதிய வைத்து, தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் நடத்தி வந்த காபி வித் டிடி நிகழ்ச்சி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி. சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர்ந்து நிகழ்ச்சியை, கலகலப்பாக இவர் நடத்திச் சென்றதில் விஜய் டிவியின் டிஆர்பி எகிறியது.

 Vijay Television Anchor Divyadharshini  Working Or Not?

இவ்வளவு நல்ல தொகுப்பாளரை சமீப காலமாக எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய் டிவியில் காண முடியவில்லை, பத்திரிகையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டாலும் குழப்பமான பதிலையே தருகின்றார் டிடி.

விஜய் டிவியில் கேள்வி கேட்டாலும் எந்த ஒரு பதிலையும் சொல்வதில்லை, இதனால் விஜய் டிவியில் டிடி இருக்கிறாரா இல்லையா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் டிடி இருப்பது போல காட்டிக் கொள்கிறது விஜய் டிவி.

நேற்று இரவு காபி வித் டிடி நிகழ்ச்சியில் டிடி தொகுத்து வழங்கிய பழைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி, அவர் இங்குதான் இருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறது விஜய் டிவி.

இதற்கிடையில் டிடியின் காலில் ஆக்ஸிடென்ட் ஏற்பட்டு இருக்கிறது, அதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று ஒரு தகவலும், டிடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது.

இரண்டு தரப்பினருமே தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருகின்றனர், விரைவில் உண்மை வெளியாகிறதா என்று பார்க்கலாம்.

 

சீனாவைத் தொடர்ந்து ஜப்பானிற்கு செல்லும் பிகே

சென்னை: கடவுள் மறுப்புக் கொளகைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிகே திரைப்படம் இந்தியாவில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் கடந்த ஆண்டு இந்தியில் வெளிவந்தது பிகே.

ஒருபக்கம் படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், மறுபக்கம் நல்ல விமர்சனங்கள் படத்திற்கு கைகொடுத்ததில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது பிகே. இந்தியாவில் மட்டும் சுமார் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

Aamir Khan’s PK Next release in Japan

படத்தின் வெற்றியால் சீனாவில் உள்ள தியேட்டர்களிலும் கடந்த மாதம் இந்தப் படத்தை திரையிட்டனர் பிகே படக்குழுவினர், சீனாவில் 100 கோடியை வசூலித்து அங்கும் சாதனை புரிந்தது பிகே.

சீனாவின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்டமாக ஜப்பானிலும் பிகே படத்தைத் திரையிடப் போகின்றனர். இந்தத் தகவலை படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உறுதிப்படுத்தி உள்ளார்.

இன்னும் 5 மாதங்கள் கழித்து டிசம்பர் மாதம் 19 ம் தேதி ஜப்பானில் வெளியாக இருக்கின்றது பிகே, ஏற்கனவே அமீரின் 3 இடியட்ஸ் ஜப்பானில் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

எந்திரன் பார்ட் - 2.. மும்முரமாக இறங்கியுள்ள ஷங்கர்.. புதிய டீம்?

சென்னை: எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

2010ம் ஆண்டில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன்.

தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இயக்குநர் ஷங்கர் , படத்திற்கான கதை முழுவதையும் முடித்து விட்டு படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து கொண்டு இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

Endhiran 2 Update News

இதற்கான முயற்சியில் மொத்த படக்குழுவும் இறங்கி வேலை பார்க்கின்றனர், இதைப் பற்றிய செய்திகள் எதையும் வெளியே கசிய விடாமல் பார்த்துக் கொள்கின்றனர் படக்குழுவினர்.

எந்திரன் படம் 132 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி இருந்தது, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை வெளியிட்டு இருந்தார். தற்போது எந்திரன் 2 படத்திலும் அதே போன்ற இடங்களை ஷங்கரிடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்று கூறுகின்றனர்,

எந்திரன் முதல் பாகத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைகின்றனரா அல்லது புதியவர்களுடன் ஷங்கர் கைகோர்க்கிறாரா என்பது தெரியவில்லை.

இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதத்தில் புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நம்பர் ஒன் இடத்திற்கு வேகமாக முன்னேறுகிறார் சுருதி

சென்னை: தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறார் நடிகை சுருதிஹாசன். ஆமாம் இந்த 2015 ம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது.

சமீபத்தில் மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி இருந்தார் சுருதிஹாசன், கார் வாங்கிய ராசியோ என்னவோ தொடர்ந்து ஏறுமுகத்துடன் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் சுருதி.

Shruti No 1 Heroine In Kollywood?

சுருதி இந்தியில் நடித்த கப்பார் இஸ் பேக் திரைப்படம் இந்தியில் நன்றாக ஓடி வசூல் சாதனை படைத்தது, தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த ரேஸ் குர்ரம் படம் நன்றாக ஓடியது. அதுமட்டுமின்றி ரேஸ் குர்ரம் படத்தில் நடித்ததற்காக 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதில் இந்த ஆண்டின் சிறந்த கதாநாயகி என்ற விருதையும் பெற்றார்.

இப்போது தமிழிலும் கைநிறைய படங்களுடன் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சுருதிஹாசன். புலி படத்தில் விஜயுடன் நடித்து முடித்திருக்கும் சுருதிக்கு அடுத்தடுத்து அஜீத்தின் புதிய படம் மற்றும் நடிகர் சூர்யாவின் புதிய படம் என்று வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டுகின்றன.

இதனால் தமிழில் வேகமாக நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் நடிகை சுருதிஹாசன்.

 

தமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்!- மோகன்பாபு

இந்த தமிழ்நாடுதான் என் தாய்நாடு.. இதை ஆந்திராவிலும் சொல்வேன்.. தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் உயிருள்ளவரை மறக்க மாட்டேன், என்றார் நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன் பாபு.

பிரபல நடிகை ஜெயப்பிரதா, தன் சகோதரி மகன் சித்தார்த்தை நாயகனாக உயிரே உயிரே என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான்.

Tamil Nadu is my Motherland, says Mohan Babu

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர் அமர் சிங், இந்தி நடிகர் அனில் கபூர், நடிகைகள் ராதிகா, ஸ்ரீபிரியா, சுமலதா, தெலுங்கு பிரமுகர் சுப்பாராமி ரெட்டி உள்பட பலரும் வந்திருந்து சித்தார்த்தை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் மோகன்பாபு பேசுகையில், "வந்திருக்கும் அனைவருக்கும், தமிழ் மக்களுக்கும் என் வணக்கம். நான் இந்த நிகழ்ச்சியில் தமிழில்தான் பேசுவேன். காரணம் எனக்கு பாலூட்டியது, சோறு போட்டு வளர்த்து ஆளாக்கியது இந்த சென்னையும் தமிழ் மக்களும்தான்.

தமிழ் மக்கள் நம்பி வந்த யாரையும் கைவிட்டதில்லை. ஆதரித்துக் காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த சென்னையில் ஒரு சினிமாக்காரன், கையில் பைசா இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். கடைகாரர்கள் மளிகை சாமான் கொடுத்து உதவுவார்கள். ஆனால் உலகின் எந்த மூலையிலும் அப்படிப்பட்ட நல்ல மனசு கொண்டவர்களைப் பார்க்க முடியாது. ஆந்திராவில் சினிமாக்காரனுக்கு கடன்கூட கொடுக்க மாட்டார்கள்.

எனக்கு தாய்பூமி, தாய் நாடு என்றால் அது தமிழ்நாடுதான். இதை நான் ஆந்திராவிலும் கூட பல முறை சொல்லியிருக்கிறேன். எனக்கு பொய் பேசிப் பழக்கமில்ல. கடவுளுக்கு மட்டும் பயப்படுபவன், சாதாரண மனிதனுக்கு எதற்காக பயப்படப் போகிறேன்," என்றார்.

 

ட்விட்டரில் ட்ரெண்டாகிறது வாலு டிரைலர் 2

சென்னை: சற்று முன்பு வெளியான வாலு டிரைலர் 2 தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

வாலு பட நாயகி நடிகை ஹன்சிகா டிரைலரை வெளியிட்டு புண்ணியத்தைக் கட்டிக் கொண்டுள்ளார். டிரைலர் வெளியானது முதல் ட்விட்டரில் தீயாய் வேலை செய்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.

Vaalu 2 Trailer Released

அனுமார் வால் போல நீண்டு கொண்டு போன வாலு படத்தின் வெளியீடு ஜூலை 17ம் தேதி என்று அதிகாரப் பூர்வமாய் அறிவித்து இருந்த வாலு, படக்குழு தற்போது டிரைலரையும் வெளியிட்டு உள்ளதால் கண்டிப்பாக இந்த ரம்ஜான் நமக்குக் கொண்டாட்டம் தான் என்று உற்சாகத்தில் திளைக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.

டிரைலரின் ஆரம்பத்தில் ஹன்சிகா சிம்புவிடம் ஆங்கிலத்தில் பேச எனக்கு இங்கிலீஷ் தெரியாது என்று சிம்பு ஆரம்பிக்கும் வேகம் டிரைலர் முழுதுமே தொற்றிக் கொள்கின்றது.

அடிச்சா ரத்தம் வரும், எத்தன தல படம் பார்த்து இருப்போம் , உன்கிட்ட பிடிச்சதே இந்த டயலாக் டெலிவரி தாண்டா டிரைலர் முழுதுமே தெறிக்கின்றன வசனங்கள்.

சிம்பு நல்ல எனர்ஜி லுக்குடன் சூப்பராக நடித்திருக்கிறார், ஹன்சிகா - சிம்பு கெமிஸ்ட்ரி , சந்தானம் காமெடி எல்லாமே இருக்கு நல்லாவே இருக்கு என்று ட்வீட் செய்துள்ளனர் சிம்பு ரசிகர்கள்.

வாலு படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் ஹன்சிகா மேடம் உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்று ட்வீட் செய்துள்ளார்.

 

வரலாற்று சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ‘கிரந்தி யாத்ரா’

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி "கிரந்தி யாத்ரா" வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

Sankara TV new program Kranthi Yathra

யாத்ரா என்றால் நம் மனதில் நினைவுக்கு வருவது தீர்த்த யாத்ரா தான் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் தீர்த்தயாத்திரையை நிகழ்சிகளாக வழங்குவர்கள். ஆனால் கிரந்தி யாத்ரா ஒரு தனித்துவமான நிகழ்ச்சி ஆகும். ஆங்கிலேய ஆட்சியில் சுதந்திர இந்தியா என்பது கனவாகவே இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு முன் தென் இந்தியவில் சில பகுதிகள் சுதந்திரத்திற்காக முக்கிய பங்காற்றினார்.

Sankara TV new program Kranthi Yathra

தென்னிந்தியாவில் சுதந்திர போராட்டமானது எழுச்சியுடன் துவக்கப்பட்டது. அப்படிப்பட்ட இடங்களின் வரலாறு மிகவும் சிறப்பானது, இன்றும் அது பலருக்கு சுதந்திர வேட்கையை துண்டும் வண்ணம் அமைகிறது.

Sankara TV new program Kranthi Yathra

அந்த வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்குச்சென்று தியாகிகளின் வரலாற்றை தோண்டியெடுப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். கிரந்தி யாத்ரா நிகழ்ச்சியின் மூலம் சுதந்திர போராட்டம் பற்றி வெளிவராத உண்மைகளை வாசகர்களுக்கு தெரிவிப்பதே நோக்கமாகும். சக்கரவர்த்தி சுளிபெலே அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி ஒவ்வொருவாரமும் சனிக்கிழமையன்று ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.

 

யாவாரம் நல்லா நடக்குது.. செம சந்தோஷத்தில் தமன்னா

சென்னை: நடிகைகள் முன்பெல்லாம் சம்பாதிக்கும் பணத்தை நிலம், வீடு போன்றவற்றில் முதலீடு செய்வர். ஆனால் இப்பொழுது தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர்.

நடிகை நமீதா கட்டுமானத் தொழிலிலும் , நடிகை டாப்ஸி வெட்டிங் பிளானர் தொழிலும் காலூன்றி உள்ளனர். இதே போன்று நடிகை தமன்னாவும் நகைக் கடை தொழிலில் குதித்து உள்ளார்.

Jewelry Business  Now Going Well - Tamanna

இவரிடம் பல பிரபலமான நடிகைகளும் நகைகள் செய்ய ஆர்டர் கொடுத்து வருகின்றனர், பிஸியான நடிகையாக இருந்தாலும் கடைக்கு போன் செய்து கடையின் நிலவரத்தைத் தெரிந்து கொள்கிறார்.

கையிலும் கைநிறைய படங்கள் மற்றும் நகைக்கடைத் தொழில் நன்றாகப் போவது இந்த இரண்டும் சேர்ந்து உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம் தமன்னாவை.

 

ட்விட்டரில் மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் ஹரி புகார்!

தனது பெயரைப் பயன்படுத்தி ட்விட்டரிலே மோசடி நடந்திருப்பதாக இயக்குநர் ஹரி சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

தனது உதவி இயக்குநர் மூலம் ஹரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த அந்தப் புகார் மனு:

Directot Hari lodges complaint againt fake twitter ID

சாமி, சிங்கம் உள்ளிட்ட நிறைய தமிழ் படங்களை நான் இயக்கி உள்ளேன். ட்விட்டர் இணையதளத்தில் எனது பெயரில் போலி பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அவதூறான தகவல்கள் எனது பெயரில் பரப்பப்படுகிறது.

இது தனிப்பட்ட முறையில் எனக்கும், எனது சினிமா இயக்குநர் தொழிலுக்கும் களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி இணையதள முகவரியை முடக்கி, இதை எனது பெயரில் தொடங்கியவர் யார் என்று கண்டுபிடித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் உடனடி நடவடிக்கையை தொடங்கினார்கள். உடனடியாக ஹரி பெயரில் டுவிட்டரில் உள்ள போலி இணையதள முகவரி முடக்கப்பட்டது. அதை தொடங்கியவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

 

விஜய் படத்தில் முதல் முறையாக நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன்!

தமிழ் சினிமாவில் பல புதுமைகள், சாதனைகளைப் படைத்த இயக்குநர் மகேந்திரன் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார்.

அட்லீ இயக்கும் விஜய்யின் 59வது படம் நேற்று தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்கிறார்கள், பிரபு, ராதிகா, ராஜேந்திரன், காளி போன்றவர்களும் நடிக்கிறார்கள்.

Director Mahendiran turns actor

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இயக்குநர் மகேந்திரன். அவர் திரையில் நடிகராக வருவது இதுதான் முதல் முறை.

இதுகுறித்து அவரை இயக்கும் அட்லீ கூறுகையில், "மகேந்திரன் சார் முதல்முறையாக நடிக்கிறார். என் தலைவருக்கு (ரஜினி) பிடிச்ச இயக்குநர் அவர். அவரை நான் இயக்குவதை நினைத்தால் பெருமையாக உள்ளது," என்றார்.

இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் 50வது படம் இது.

 

வீரப்பன் பாத்திரத்துக்கு 'கோமாளி' போல ஒரு நடிகரைப் பிடித்த ராம்கோபால் வர்மா!

கில்லிங் வீரப்பன் படத்தில், சந்தனக் காட்டு வீரப்பனை மிகக் கேவலமாகச் சித்தரிப்பது என முடிவு செய்துவிட்ட ராம் கோபால் வர்மா, அந்தப் பாத்திரத்துக்கு கோமாளி மாதிரி ஒரு நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார்.

சந்தனக் காட்டு வீரப்பன் வாழ்க்கை ஏற்கெனவே பல முறை படமாக்கப்பட்டுவிட்டது. இப்போது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் ராம் கோபால் வர்மா.

RGV selects a buffoon like actor for Veerappan role

காட்டு பங்களாவில் இருந்த ராஜ்குமாரை வீரப்பன் துப்பாக்கிமுனையில் கடத்தியது. அவரை மீட்க அரசு அடுத்த நடவடிக்கைகள் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை. இறுதியில் வீரப்பன் என் கவுண்டரில் கொல்லப்பட்டது போன்றவைதான் இந்தப் படத்தின் கரு.

இதில் வீரப்பனை மோசமானவனாக சித்தரிக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக ஏற்கெனவே தகவல் கசிந்துள்ளது. வீரப்பனை அவதூறாக காட்டினால் வழக்கு தொடர்வேன் என்று அவரது மனைவி முத்துலட்சுமி அறிவித்து உள்ளார். தமிழ் அமைப்புகளும் இந்தப் படத்துக்கு இப்போதே தடை கோர ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் வீரப்பன் கேரக்டரில் நடிக்க சந்தீப் பரத்வாஜ் என்ற நாடக நடிகரை தேர்வு செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இவர் பார்க்க வீரப்பன் மாதிரி இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஒரு கோமாளியைப் போல உடல்மொழியுடன் காட்சி தருகிறார். வீரப்பனை முடிந்தவரை கேவலமாகக் காட்டுவது என முடிவெடுத்து ராம் கோபால் வர்மா இந்தப் படத்தை எடுக்கிறார் போலிருக்கிறது என மீடியாவில் விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது.

 

இயக்குநர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விக்ரமன்

தமிழ் சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இயக்குநர் விக்ரமன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.

Vikraman re elected as Director Association President

2015-17-ம் ஆண்டுக்கான தேர்தல் ஜூலை 5-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன், துணைத் தலைவர்களாக இருந்த பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், செயலாளராக இருந்த ஆர்.கே.செல்வமணி, பொருளாளராக இருந்த வி.சேகர் ஆகியோர் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தனர்.

இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விக்ரமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக இருந்த வக்கீல் செந்தில்நாதன் நேற்று அறிவித்தார்.

இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

 

62 வது தென்னிந்திய பிலிம்பேர் – தெலுங்கில் விருதுகளை வாரிக் குவித்த மனம்

ஹைதராபாத்: 62 வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளிலும் சிறந்த படங்களைத் தேர்வு செய்து அதற்கான விருதுகள் வழங்கப்பட்டன.

தெலுங்கு சினிமாவில் அதிகபட்சமான விருதுகளை மனம் திரைப்படம் அள்ளிச் சென்றது, நாகேஸ்வர ராவ், நாகர்ஜுன், நாக சைதன்யா என தெலுங்கு சினிமாவின் மூன்று தலைமுறை நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

62nd Filmfare Awards South 2015 - Manam Telugu Movie Won 5 Awards

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடகர், சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலாசிரியர், சிறந்தபின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி போன்ற 10 பிரிவுகளில் சிறந்த பின்னணிப்பாடகர் தவிர்த்து மொத்தம் 9 பிரிவுகளில் போட்டியிட்டது மனம் திரைப்படம்.

போட்டியிட்ட 9 பிரிவுகளில் 4 விருதுகளை சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் , சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடலாசிரியர் என மொத்தம் 4 விருதுகளை அள்ளிச் சென்றது மனம் திரைப்படம்.

மனம் திரைப்படத்திற்கு அடுத்த இடத்தை( 3 விருதுகள்) அல்லு அர்ஜுனின் ரேஸ் குர்ரம் தட்டிச் சென்றது. சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கும் , சிறந்த நடிகைக்கான விருது சுருதிஹாசனுக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பின்னணிப்பாடகர் விருது ரேஸ் குர்ரம் படத்தில் சினிமா சூபிஸ்டா பாடலைப் பாடியதற்காக பின்னணிப்பாடகர் சிம்ஹா விற்கு வழங்கப்பட்டது.

 

பாபநாசம் சிக்கல் தீர்ந்தது.. 600 அரங்குகளில் வெளியாகிறது!

விநியோகஸ்தர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் பாபநாசம் படம் திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது.

கமல்-கவுதமி நடித்துள்ள பாபநாசம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு ‘யு' சான்று பெற்றது. இப்படத்தை அடுத்த ஜூலை 3-ந்தேதி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன.

Papanasam problem sorted out!

ஆனால் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பால் திரையரங்குகளில் திட்டமிட்டபடி டிக்கெட் முன்பதிவு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உத்தம வில்லன் ரிலீசின் போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி கமல் லிங்குசாமிக்கு படம் பண்ணாமல், சொந்தபப் படம் தயாரிப்பதால் தங்கள் வரவேண்டிய பணம் வராமல் போவதாகக் குற்றம்சாட்டினர் விநியோகஸ்தர்கள். எனவே பாபநாசத்துக்கு ஒத்துழைப்பு இல்லை என அறிவித்தனர்.

இதையடுத்து விநியோகஸ்தர்களுக்கும் கமல் தரப்பினருக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Papanasam problem sorted out!

இதையடுத்து பாபநாசம் பட சிக்கல் தீர்ந்து திட்டமிட்டப்படி 3-ந்தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இந்த படத்தை வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் சுரேஷ்பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார், தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டும் விருது பெறாத காவியத் தலைவன்!

சென்னை: சோகப் படுவதா அல்லது துக்கப் படுவதா ஆனால் இரண்டில் ஒன்றைப் பட்டே ஆகவேண்டும். அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா நேற்று நடந்த 62 வது பிலிம்பேர் தென்னிந்திய விருதுகள் வழங்கும் விழாவில் ஏராளாமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.

ஆனால் 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட காவியத் தலைவன் படம் ஒரு விருதைக் கூடப் பெறவில்லை. இது தற்செயலாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்று தெரியவில்லை.

Kaaviya thalaivan Most Nominated  In 62 Filmfare Awrds

எப்படியாயினும் தமிழ் நாட்டில் வேகமாக அழிந்துவரும் நமது பாரம்பரியங்களில் ஒன்றான நாடகக் கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காவியத் தலைவனை ஒரு பிரிவில் கூட கவுரவிக்காதது குறையே.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணிப்பாடகர், சிறந்த பின்னணிப்பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இசையமைப்பாளர் போன்ற 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது காவியத் தலைவன் . ஆனால் ஒன்றில் கூட விருதை வெல்லவில்லை.

 

சண்டைக்கோழி பார்ட்- 2வில் விஷாலுக்கு ஜோடி வெள்ளைக் கோழி தமன்னா!!

சென்னை: சண்டைக்கோழி பார்ட் 2 திரைப்படத்தில் நடிகை தமன்னா விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலிவுட்டில் தற்போதைய புதிய டிரெண்ட் பார்ட்-2 படங்கள்தான். காஞ்சனா பார்ட்-2, கோ பார்ட் -2 , விஸ்வரூபம் பார்ட்-2 என்று புதிய குஸ்தியில் குதித்துள்ளது கோலிவுட்.

Vishal's next heroin is Tammannah

ஏற்கனவே, சில வருடங்களுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த "சண்டக்கோழி" படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த விஷாலே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மீரா ஜாஸ்மின், சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில், இப்படத்தில் நாயகியாக முதலில் லட்சுமி மேனன் பெயர் அடிப்பட்டது. பிறகு ஸ்ருதி ஹாசன் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது நாயகியாக தமன்னாவை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விஷால் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் சண்டக்கோழி பார்ட் 2 படத்தில் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தல உடன் நடிக்க வாய்ப்பு… மறுத்த சின்னப்பாப்பா...

சினிமாவில் நடிக்க வரும் யாரைக்கேட்டாலும் ஒரு படத்திலாவது தல கூட நடிக்கணும் என்று கூறுவார்கள். அவரு அப்படி இவரு இப்படி என்று 4 பக்கத்துக்கு பிட்டு போடுவார்கள். ஆனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருக்கும் சின்னப்பாப்பாவிற்கு தல கூட நடிக்கும் வாய்ப்பு வந்தும் தயங்காமல் நோ சொல்லி விட்டாராம். காரணம் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லையாம்.

காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அந்த தொகுப்பாளினிக்கு சித்தியின் தயாரிப்பான காமெடி தொடரில் சின்னப்பாப்பாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சீனியர் நடிகைகளுடன் போட்டி போட்டு நடிப்பதால் இல்லத்தரசிகளிடம் வரவேற்பு கிடைத்தது.

ஒவ்வொரு டயலாக்கும் ஆடிக்கொண்டே பேசும் பாங்கு... சட் சட் பேசி ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை கொண்டவர் சின்னப்பாப்பா. இவரது நடிப்பைப் பார்த்தே தல படத்தில் நடிக்க கூப்பிட்டுள்ளனர். ஆனால் நோ சொல்லிவிட்டாராம். நான் பொழுது போக்கிற்காகத்தான் தொகுப்பாளினியானேன். இதுவே முழு நேர தொழிலாகிவிட்டது. இனி சினிமாவெல்லாம் வேண்டாம் என்று வீட்டில் கூறிவிட்டனர் என்கிறார் சின்னப்பாப்பா.

அது சரி... இப்படி சினிமாவில நடிக்க மாட்டேன்னு சொன்னவங்க எல்லாம், தோழியாகவும், தங்கையாகவும் நடித்துக்கொண்டுதானே இருக்கின்றனர்... சின்னப்பாப்பா சினிமாவுக்கு வராமலா போய்விடுவார் என்று கேட்கின்றனர் ரசிகர்கள்.

 

இயக்குநர் மிஷ்கின் பெயரில் ஒரு மோசடி... உஷார் மக்களே!

சினிமா திரையில்கூட பார்த்திராத அளவுக்கு பல மோசடிகள் திரையுலகில் நடந்து வருகின்றன.

அப்படி சமீபத்தில் நடந்துள்ள மோசடி, இயக்குநர் மிஷ்கினின் பெயரில் அரங்கேறியுள்ளது. எப்படியாவது சினிமாவில் சேர வேண்டும் என்ற மக்களின் ஆர்வம்தான் இந்த மோசடிக்கு அடிப்படை.

இயக்குநர் மிஷ்கின், தன் புதிய படத்துக்கு நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்காக நேர்முகத் தேர்வு நடத்த இருப்பதாகவும், அதனால் விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியன்று குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறும் 'ஆதி' என்பவரது பெயரையும், அவரது செல்போன் எண்ணையும் ஒரு அரங்கையும் குறிப்பிட்டு வாட்ஸ்அப் செய்தியொன்று பல வாட்ஸ் அப் குரூப்புகளிலும் பரவ, அதை நம்பிய 300க்கும் அதிகமான மக்கள் குறிப்பிட்ட இடத்தில் குவிந்திருக்கின்றனர்.

Cheating in the name of director Mysskin

ஆனால், மிஷ்கினுக்கு தொ டர்புடைய ஆட்கள் யாரும் வராமல், வேறு யாரோ அங்கு வந்து, நேர்முகத் தேர்வுக்கு உள்ளே போக வேண்டுமென்றால் 300 முதல் 500 வரை நுழைவு கட்டணம் தர வேண்டும் என்று சொல்ல, 'ஆஹா, இது அந்தக் கும்பலா' என்று சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார்களாம் மக்கள்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு அடுத்தடுத்து பலரும் போன் செய்ய, 'ஃபேக் நியூஸ்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவே பெண்கள் போன் செய்தால் 'சில தவிர்க்க முடியாத காரணத்தால் இன்னைக்கு நடக்க வேண்டியது நடக்கலை... ஆனா கண்டிப்பா உங்க போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்புங்க. ஒரு மாசத்துக்குள்ள உங்களை கூப்பிடுறோம்' என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மிஷ்கினின் உதவியாளர் ஒருவரிடம் கேட்டபோது, "எப்பவுமே புதுசா ஒரு படத்துக்கு நடிக்க ஆட்கள் தேவைன்னா அதை நண்பர்கள் பலரிடமும் கூறி, அவர்கள் மூலம் வருபவர்களை நேரடியாக மிஷ்கினோட ஆபிஸுக்கு வரவழைச்சு அவங்கள போட்டோ எடுத்துட்டு அனுப்புவோம். பிடிச்சிருந்தா ஓகே பண்ணுவோம். இதுதான் நடைமுறை.

ஆனா இதை அப்படியே உல்டாவாக்கி யாரோ வாட்ஸ்ஆப் மூலம் பணம் பண்ணப் பார்த்திருக்கிறார்கள். தயவு செய்து யாரும் இதை நம்பாதீங்க'' என்றார்.

இதேபோலவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர், நடிகர் சசிக்குமாரின் பெயரில் போலியான ஃபேஸ்புக் ஐடியை வைத்துக் கொண்டு, இதேபோல நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தது ஒரு கும்பல் உடனே சசிகுமார் போலீசுக்குப் போக, அந்த போலி கணக்கு முடக்கப்பட்டது.

 

"ஊதா கலரு ரிப்பனுக்குப்" போட்டியாக களம் இறங்கிய அக்கா!

சென்னை: ஊதா கலரு ரிப்பன் என்ற ஒரே பாடலின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பரவலாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யாவைத் தொடர்ந்து அவரது அக்காவும் நடிகையாகியுள்ளார்.

தொடர்ந்து தாவணி பாவாடையிலேயே நடிக்க இளைஞர்கள் ஸ்ரீதிவ்யாவைத் தங்கள் கனவுக் கன்னியாக ஏற்றுக் கொண்டனர்.

SriDivya Competitor Her Sister SriRamya?

தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியாக அவரது வீட்டில் இருந்தே சத்தமில்லாமல், இன்னொரு நடிகை உருவாகி விட்டார் அவருக்கு தங்கை கிடையாதே என்று நினைக்காதீர்கள்.

அக்கா இருக்கிறார் என்னது அக்காவா ன்னு ஜெர்க் ஆகாதீங்கப்பா, அக்காதான் நடிக்க வரப்போகிறார். அவரின் பெயர் ஸ்ரீரம்யா. இவரின் முதல் படம் 1940லோ ஒக கிராமம் என்ற தெலுங்குப் படம். இதில் நடித்தற்காக நந்தி விருது பெற்றிருக்கிறார்.

தமிழில் யமுனா என்ற படத்திலும் நடித்திருக்கிறார், தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீரம்யா தங்கை ஸ்ரீதிவ்யாவை ஒருபோதும் போட்டியாக நினைத்தது இல்லையாம் (பாசம்).

சக்கரவாக்கம் என்ற தெலுங்கு சீரியலில் இருவரும் பாசமான அக்கா, தங்கையாக நடித்திருக்கிறோம் என்று கூறும் ஸ்ரீரம்யா இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்றால் தங்கை ஸ்ரீதிவ்யாவுடன் சேர்ந்து நடிப்பதற்கும் தயாராக இருக்கிறாராம் (நல்லது).

 

கமலின் பாபநாசம் படத்தால் அருள்நிதி படத்துக்கு வந்த சிக்கல்!

கமலின் பாபநாசம் படம் ஜூலை 3-ம் தேதி வெளியாவதால், பிற படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்று வெளியாகவிருந்த அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் தள்ளிப் போய்விட்டது.

அறிமுக இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

Papanasam postpones Arulnidhi movie to July 31st

வருகிற ஜூலை 3-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாபநாசம்' படம் ஜூலை 3-ந் தேதி வெளியிடுவதாக திடீரென அறிவித்தனர். அன்றைய தினத்தில் விவேக் நாயகனாக நடித்த பாலக்காட்டு மாதவன் உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெளிவருகின்றன.

இதனால், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' படத்தின் ரீலீஸ் தேதியை இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.கே நிறுவனம் ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து ஜே.எஸ்.கே நிறுவனத்தின் நிர்வாகி சதீஷ்குமார் கூறும்போது, எங்கள் நிறுவனம் சார்பாக ஜூலை 3-ம் தேதி வெளியாக இருந்த ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்' திரைப்படம் தற்போது கமல் நடித்த ‘‘பாபநாசம்' திரைப்படம் அதே தேதியில் வெளியாவதால், எங்களது விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூலை 31-ந் தேதி படத்தை வெளியிடப் போகிறோம், தெரிவித்துள்ளார்.

 

பாபநாசம் வந்தா வரட்டும்... பாலக்காட்டு மாதவன் அதன் கதைக்காக ஓடும்!- தயாரிப்பாளரின் தில்

விவேக் நாயகனாக நடித்துள்ள காமெடிப் படமான பாலக்காட்டு மாதவன், அருள்நிதி நடித்த காமெடிப் படமான நாலு போலீசும் நல்லாருந்த ஊரும், பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி, ஒரேஒரு ராஜா மொக்கராஜா ஆகிய ஐந்து படங்கள் ரிலீஸ் தேதியை ஒரு மாதம் முன்பே, ஜூலை 3 ரிலீஸ் என அறிவித்து விளம்பரங்கள் கொடுத்து வந்தன.

அதிலும் பரஞ்சோதி, ஒரு தோழன் ஒரு தோழி படங்கள் பத்திரிகையாளர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன.

Palakkattu Madhavan Vs Papanasam

இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த விதிகளுக்கும் கட்டுப்படாமல் திடீரென பாபநாசம் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஜூலை 3 என அறிவித்துவிட்டனர்.

இதனால் மேற்கண்ட ஐந்து படங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஜூலை 31-க்குத் தள்ளிப் போக, மற்ற சிறு படங்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால் விவேக் நடித்துள்ள பாலக்காட்டு மாதவன் தயாரிப்பாளர் லாரன்ஸ் அசரவில்லை. 'ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை. அதே ஜூலை 3-ல் படத்தை வெளியிடுவேன்' என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் கடந்த மே மாதமே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, புரமோஷன் செய்து வருகிறேன். இப்போது திடீரென்று கமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்துக்காக என் படத்தை தள்ளிப் போட்டால் எனக்குத்தான் ஏகப்பட்ட நஷ்டம் வரும்.

எனக்கு பாலக்காட்டு மாதவன் கதை, காமெடிக் காட்சிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. பாபநாசம் வந்தாலும், என் படம் அதன் சிறப்பான உருவாக்கத்துக்காக நிச்சயம் மக்களிடம் வரவேற்பைப் பெறும்," என்றார்.

 

'கவலை வேண்டாம்' ஜீவா.. கீர்த்தி சுரேஷ் ஜோடி!

யாமிருக்க பயமே என்ற அசத்தலான வெற்றிப் படத்தைக் கொடுத்த டிகே அடுத்து இயக்கும் படம் கவலை வேண்டாம். இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க, எல்ரெட் குமாரின் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிக்கிறது.

ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் டிகேவிடம் பேசினோம்: "அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகி தேவைப்பட்டார்.

Jiiva's next titled as Kavalai Vendam

ஆனால் கீர்த்தி இந்த கதாப்பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் சுவாரஸ்யமாக பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்," என்றார்.

ஜீவா இப்போது திருநாள் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் கவலை வேண்டாம் ஆரம்பமாகிறது.

 

விஜய்யின் அடுத்த படமே வரப் போகுது.. ஆனா கத்தி கதை வழக்கு முடியவில்லை!

விஜய்யின் அடுத்த படமான புலியும், கத்தி கதை வழக்கின் தீர்ப்பும் ஒன்றாகத்தான் ரிலீசாகும் போலிருக்கிறது.

கத்தி படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதிக்கு ஒத்திவைத்து தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kaththi story case postponed to July 15th

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர் (வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

சமூக வலைதளங்களில் பரபரவென பரவும் தனுஷின் மாரி ட்ரைலர்!

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் மாரி படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. வெளியான 16 மணி நேரங்களுக்குள்ளேயே இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான பேரால் பார்த்து ரசிக்கப்பட்டு இருக்கிறது மாரி டிரைலர்.

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

நேற்று வெளியான மாரி டிரைலர் சமூக ஊடங்களில் தொடர்ந்து காட்டுத்தீ வேகத்தில் பரவி வருகின்றது, டிரைலர் நன்றாக இருப்பதாக தனுஷின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.

மேலும் பேஸ்புக்கிலும் இன்று காலையில் இருந்தே தொடர்ந்து ட்ரெண்டாகிக் கொண்டு இருக்கிறது மாரி டிரைலர்.

 

அர்னால்டின் டெர்மினேட்டர் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்!

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை அவ்ரா சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.

அர்னால்ட் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் ஜூலை 1-ம் தேதியே வெளியாகவிருக்கிறது.

Escape Artist Motion Pictures bagged Arnold’s Terminator Genisys

இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் மகேஷ் கோவிந்த ராஜின் அவ்ரா சினிமாஸ் விநியோகிக்கிறது.

Escape Artist Motion Pictures bagged Arnold’s Terminator Genisys

டெர்மினேட்டர் படத்தின் தமிழக விநியோக உரிமையை அவ்ரா சினிமாஸிடமிருந்து வாங்கியுள்ளது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி குறிப்பிடுகையில், "ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ‘He is back' என்ற அந்த வார்த்தையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது," என்றார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.

 

டெய்லி பல்லு விளக்குவது போல யோகாவும் மஸ்ட்.. தமன்னா "அட்வைஸ்"

மும்பை: நடிகர் துஷார் கபூரும், நடிகை தமன்னாவும் இணைந்து யோகா பற்றிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

பாயல் கிட்வானி திவாரியின் "உடல் கடவுளர்: பெண்களுக்கான முழுமையான யோகா பற்றிய புத்தகம்" என்ற அந்தப் புத்தகத்தினை இருவரும் இணைந்து வெளியிட்டனர்.

Tamannaah Tusshar launch yoga book for women

இதுகுறித்து தமன்னா, "கடந்த இரண்டரை மாதங்களாக பாயல் எனக்கு யோகப் பயிற்சி அளித்து வருகின்றார். இதனால் என் உடலில் மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. யோகா உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் உதவக் கூடியது.

அதனால் நான் தினமும் பற்களைச் சுத்தம் செய்வதுபோலவே யோகாவையும் செய்து வருவது எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

துஷார் கபூரோ, "முதலில் எனக்கு மிகவும் கடுப்பாக இருந்தது யோகா. ஆனால், கொஞ்ச நாளிலேயே இது எனக்குள் பெரிய மாற்றத்தினை தந்தது. யோகா உங்களை மிகவும் சுதந்திரமாகவும், தன்னம்பிக்கை உடையவராகவும் நினைக்கச் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த புத்தகம் உலக யோகா தினத்தினையொட்டி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாகுபலி படப்பிடிப்பில் ஹீரோவாகி நடிகையின் மானம் காத்த தமன்னா

ஹைதராபாத்: பாகுபலி படப்பிடிப்பின்போது நடிகை நோரா பதேஹியின் மேலாடை கழன்றுவிழ ஓடிப் போய் அவரது மானத்தை காப்பாற்றியுள்ளார் தமன்னா.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் அனுஷ்கா, பிரபாஸ், ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள மெகா பட்ஜெட் படம் பாகுபலி. அந்த படத்தில் மனோகரி என்ற குத்தாட்டப் பாடல் உள்ளது. அந்த பாட்டுக்கு மொராக்கோவைச் சேர்ந்த மாடலும், நடிகையுமான நோரா பதேஹி குத்தாட்டம் போட்டுள்ளார்.

Baahubali actress suffers wardrobe malfunction

படப்பிடிப்பில் அவர் கேமரா முன்பு குத்துப்பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கையில் அவரது மேலாடை கழன்றுவிழ அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்த தமன்னா ஓடிப் போய் அவரது மானத்தை காத்தார்.

இந்நிலையில் இது குறித்து நோரா கூறுகையில்,

அது மிகவும் பயங்கரமான தருணம். நல்ல வேளை தமன்னா வந்து என் மானத்தை காத்தார். அதற்காக நான் தமன்னாவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார்.

 

மனச்சோர்வுக்கு மருத்துவ ஆலோசனை தரும் இனியவளே உனக்காக

விரக்தி, மனஅழுத்தம், கவலை, பலவீனம், தனிமை சோர்வு என இன்றைக்கு பலருக்கும் உளவியல் சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்கும் விதமாக "இனியவளேஉனக்காக" என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது சத்தியம் தொலைக்காட்சி.

Sathiyam TV programme Ineyavale Unakaga

உளவியல் ரீதியான பல பிரச்சினைகள் உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இந்த பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது. எனவே சத்தியம் தொலைக்காட்சியில் உளவியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு தொலைப்பேசி உரையாடலில் தெளிவான தீர்வும், முழுமையான ஆலோசனையும் தருகிறார் டெய்சி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் மற்றும் குடும்பநல ஆலோசகருமான திருமதி.டெய்சிசரண்.

Sathiyam TV programme Ineyavale Unakaga

இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிப்பரப்பினை வாரந்தோறும் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கும் இதனுடைய மறு ஒளிபரப்பினை வாரந்தோறும் திங்கள் காலை 11 மணி முதல் 12 மணி வரை சத்தியம் தொலைக்காட்சியில் காணலாம்.