அம்மாவாக நடிக்க நடிகைகள் மறுப்பு தங்கர் பச்சான் தாக்கு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : தங்கர் திரைக்களம், மேக்ஸ்ப்ரோ என்டர்டெயினர் இணைந்து தயாரிக்கும் படம், 'அம்மாவின் கைபேசி'. சாந்தனு, இனியா நடிக்கிறார்கள். ரோஹித் குல்கர்னி இசை. ஒளிப்பதிவு செய்து இயக்கும் தங்கர் பச்சான் கூறியதாவது:
 செல்போனால் இந்திய சமூகம் பெற்றிருக்கும் நல்ல விஷயம் உறவுகளை குரலால் பாதுகாப்பது. அதைச் சொல்லும் படம். 9 குழந்தைகளை பெற்ற தாய் அவர்களை பிரிந்து வாழும் சூழலில் அவளுக்கு எல்லாமுமாக இருப்பது மகன்கள் பேசும் செல்போன் மட்டுமே. செல்போனை 9 பிள்ளைகளின் பிரதிநிதியாக எப்படி மதிக்கிறாள். பாதுகாக்கிறாள் என்பதுதான் திரைக்கதை. அவளது கடைசி மகன் சாந்தனு, அவரது காதலி இனியா. கடைசி மகனுக்கும் தாய்க்கும் இடையிலான உறவையும் பதிவு செய்திருக்கிறேன். படத்தின் முக்கிய கேரக்டரான அம்மா வேடத்தில் நடிக்க பல முன்னாள் நடிகைகளை அணுகியபோது மறுத்தார்கள்.
மூன்று தேசிய விருது பெற்ற நடிகை, 10 நாள் நடிக்க 20 லட்சம் சம்பளம் கேட்டார். இதனால் துணை நடிகை ரேவதி என்பவரை அம்மாவாக நடிக்க வைத்தேன். படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் அந்த கேரக்டராகவே வாழத் தொடங்கிவிட்டார். கிராமத்து வாசனையே இல்லாத சாந்தனுவை கிராமத்து இளைஞனாக மாற்றி இருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு திருப்பு முனையை கொடுக்கும்.


 

Post a Comment