ஆதரவற்றோருக்கு உதவ நட்சத்திர கிரிக்கெட்!

|

Star Cricket Good Cause

ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு உதவ வரும் 16-ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் நடக்கிறது.

வருகிற ஜூலை 16-ம்தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒஸ்.எஸ்.ராஜசேகர ரெட்டி விளையாட்டு அரங்கில் இந்த போட்டி நடக்கிறது.

அனாதை குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உதவ இந்த போட்டி மூலம் நிதி திரட்டப்படுகிறது.

போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. அத்துடன் பிரபல சினிமாக்களில் இடம்பெற்ற காட்சிகளை ரசிகர்களுக்காக முன்னணி நடிகர்கள் நடித்து காட்டப் போகிறார்களாம்.

இந்தத் தகவலை நடிகர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். போட்டியில் பங்கேற்கும் நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமா கலைஞர்கள் பலரும் இந்தப் போட்டியில் இடம்பெற உள்ளனர்.

 

Post a Comment