சென்னை, : தமிழில், 'தலைநகரம்', 'வெடிகுண்டு முருகேசன்' உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த அவர் மலையாளப் படங்களில் நடித்துவந்தார். அவருக்கும் கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மலையாள சேனல் ஒன்றில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுபற்றி ஜோதிர்மயி கூறும்போது, ''தொடர்ந்து சிறந்த படங்களில் நடித்து டயர்டாகிவிட்டேன். இப்போது சின்னத்திரை நிகழ்ச்சி நடத்துவது புது தெம்பாக இருக்கிறது'' என்றார்.
Post a Comment