திருக்குறளை படித்து மனப்பாடம் செய்வதை விட அதை கதை வடிவில் படமாக பார்த்தால் சின்னக்குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டே சித்திரம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு திருக்குறளை மையமாகக் கொண்ட நீதிக்கதைகள் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைக்கு கார்டூனில் நீதிக்கதைகள் பார்ப்பதை குழந்தைகள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்ற குழந்தைகளை கவரும் வகையில் `திருக்குறள் கதைகள்' என்ற தலைப்பில் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தரப்படுகிறது, இந்த நிகழ்ச்சி. 4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், பெரியவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
Post a Comment