துபாயில் முதல் முறையாக நடந்த சினிமா விழா அது. இதுவரை இல்லாத அளவுக்கு 100-க்கும் அதிகமான தென்னிந்திய நட்சத்திரங்களை துபாய்க்கே அழைத்துப் போனார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். நல்ல பைசா!
வந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விருது. அவர்களில் இப்போது முன்னணியில் உள்ள பலரும் மேடையில் ஆட்டம் போட்டார்கள். அதில் சில டாப் நட்சத்திரங்கள் போட்ட ஆட்டம் தப்பாய் போனதில் அரங்கமே சிரிப்பாய் சிரித்ததாம்!
குறிப்பாக அமலா பால் மற்றும் தீக்ஷா சேத் இருவருக்கும் மேடையில் சுத்தமாக ஆடவே தெரியவில்லையாம். அரைகுறை ஆடையுடன், தப்புத் தப்பாய் அவர் ஆட, போம்மா தாயே உன் ஆட்டம் போதும் என பார்வையாளர்கள் கமெண்ட் அடிக்கும் அளவுக்கு ஆகிவிட்டதாம் (பணம் தரவில்லை என்று முரண்டுபிடித்து, பட்டுவாடா செய்த பிறகு மேடைக்கு போனாரே.. அதே நிகழ்ச்சிதான்!).
சினிமாவில் ஆடுவது வேறு, மேடையில் லைவாக நிகழ்ச்சி செய்வது வேறு என்பதை ரொம்ப காஸ்ட்லியாக கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் விழா குழுவினர்!
Post a Comment