ஐன்ஸ்டீன் தத்துவத்தில் உருவான கதை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : மேஜிக் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம், 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்'. ஹிருதய் ராஜ், அதிதி செங்கப்பா, நாசர், ரேவதி, அசோக் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.எஸ்.வாசன். இசை, ப்ஹனி கல்யாண். வசனம், சித்ரா வெங்கி. பாடல்கள்: அறிவுமதி, பழனிபாரதி, சித்ரா வெங்கி. படத்தை இயக்கும் வெங்கி நிருபர்களிடம் கூறியதாவது:
'மனித வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவையே. நம் பயணத்தின் மூலம் அடிக்கடி அதை மாற்றிக்கொள்கிறோம்' என்ற ஐன்ஸ்டீனின் விவாதத்துக்குரிய தத்துவத்தின் அடிப்படையில் இதன் கதையை உருவாக்கியுள்ளேன்.
இன்றைய இளைஞர்களுக்கு சுயநலம் அதிகரித்து விட்டது. அதை சரி என்றோ, தவறு என்றோ சொல்லும் படமாக இருக்காது. யதார்த்தத்தை சொல்கிறோம். ஹீரோ, ஹீரோயினுக்கு காதல் எப்படி ஏற்படுகிறது என்பது சுவாரஸ்யமான சம்பவம். விதி அவர்களை எப்படி வழிநடத்துகிறது, அதை அவர்கள் எப்படி தங்களுக்கு சாதகமாக மாற்றுகிறார்கள் என்பது கதை. விரைவில் சென்சார் குழுவினர் பார்க்கின்றனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.


 

Post a Comment