மும்பை: இந்தியத் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் மாஸான் திரைப்படம் நாளை இந்தியா முழுவதும் சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகின்றது, இயக்குநர் நீரஜ் கெய்வான் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹிந்தித் திரையுலகில் பலரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறது.
அதே நேரம் பாக்ஸ் ஆபிசைப் பொறுத்தவரை பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் போன்ற படங்களின் முன்னால் தாக்குப் பிடிக்குமா? என்ற சந்தேகமும், தற்போது படக்குழுவினருக்கு எழுந்துள்ளது.
ஏனெனில் மாஸான் திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும், பெரிதான கமர்சியல் நெடிகள் ஏதும் படத்தில் இல்லை படம் முழுவதுமே எதார்த்தமான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
தாழ்ந்த சாதியைச் சேர்ந்த வெட்டியான் ஒருவன் உயர்ந்த சாதிப் பெண்ணைக் காதலிப்பது தான் படத்தின் கதை, மாஸான் வெளியாவதற்கு முன்பே கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு 2 விருதுகளை வென்றுள்ளது.
நாளை இந்தியா முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகும் மாஸான் மல்ட்டிபிளக்ஸ் அரங்குகளில் மட்டுமே வெளியாக இருக்கிறது. படம் வசூலில் பெரிதாக எதுவும் சாதிக்காது ஆனால் விருதுகளைக் கண்டிப்பாக அள்ளும் என்று படத்தைப் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment