பிரபல சின்னத் திரை இயக்குநரும், சின்னத் திரை கலைஞர்கள் சங்க முன்னாள் தலைவருமான விடுதலை இன்று காலை சிதம்பரத்தில் காலமானார். அவருக்கு வயது 52.
எத்தனை மனிதர்கள், வார்த்தை தவறிவிட்டாய், அக்னிசாட்சி, ஆனந்தம், அவளும் பெண்தானே, குறிஞ்சி மலர் போன்ற தொடர்களை இயக்கியவர் விடுதலை.
சின்னத் திரை கலைஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
சொந்த ஊரான சிதம்பரத்தில் இன்று காலை 6 மணிக்கு அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது இறுதி நிகழ்வுகள் நாளை சிதம்பரத்தில் நடக்கவிருக்கிறது.
Post a Comment